புருவத்தைத் திருத்திய மனைவி… 3 முறை தலாக் கூறிய கணவர்!

தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் எண்ணம் பெண்களிடையே பரவலாக இருக்கும். அதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று ஒப்பனை செய்துகொள்வது வழக்கம். இந்த நிலையில் கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புருவத்தைத் திருத்தம் செய்ததற்கு அவரின் கணவர் தலாக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  குல்சைபா என்ற பெண், சலீம் என்பவரை 2022-ல் மணந்துள்ளார். வேலை காரணமாக 2023 ஆகஸ்ட் 30-ம் தேதி சலீம், சவுதி அரேபியாவுக்குச் சென்று விட, குல்பைசா கான்பூரிலேயே இருந்திருக்கிறார். அக்டோபர் 4 … Read more

விக்ரம் மிரட்டலான நடிப்பில் இணையத்தை தெறிக்க விட்ட தங்கலான் டீசர்

விக்ரம் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எப். குறித்த இந்த கதையில் விக்ரமின் தோற்றம் மற்றும் நடிப்பு மிரட்டலாக அமைந்துள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் … Read more

சொந்த காசில் சூனியம்.. ஹமாஸுக்கு நிதி தந்து.. வளர்த்துவிட்டதே இஸ்ரேல் நெதன்யாகுதானாம்! ஷாக் பின்னணி

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 26வது நாளாக இன்னும் கடும் தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இத்தனை ஆண்டுகளாக ஹமாஸ் படையினர் வளர்ச்சியடைய இஸ்ரேல்தான் நிதியுதவி அளித்தது என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் போர் கதை கொஞ்சம் பெரியது. இதன் தொடக்கம் இரண்டாம் உலகப்போர். போரில் ஜெர்மனியிடமிருந்து யூதர்களை சோவியத் ரஷ்யா காப்பாற்றியது. தப்பி பிழைத்த Source Link

GST revenue for October was Rs 1.72 lakh crore | அக்டோபர் மாத ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.1.72 லட்சம் கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,72,003 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 1,72,003 கோடி ரூபாய் ஆக உள்ளது. இதில், சிஜிஎஸ்டி மூலம் ரூ.30,062 கோடியும் எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.38,171 கோடியும் ஐஜிஎஸ்டி மூலம் ரூ.91,315 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.42,127 கோடியும் … Read more

England Cricket: `சிஸ்டம் சரியில்லைங்க!' – இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கான உண்மையான காரணம் இதுதானா?!

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியிருக்கிறது. அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் முதல் 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்திருக்கிறது பட்லரின் அணி. 50 ஓவர் உலகக் கோப்பை மட்டுமல்லாது டி20 உலகக் கோப்பையிலும் நடப்பு சாம்பியனாய் இருக்கும் ஒரு அணியிடம் யாருமே எதிர்பாராத செயல்பாடு இது. Jos Buttler இங்கிலாந்தின் இந்தச் சொதப்பல் ஆட்டத்துக்குக் களத்தில் நடந்த பல சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அணித் தேர்வு, பட்லரின் கேப்டன்சி, டாஸில் எடுத்த முடிவுகள், பிளேயிங் லெவனில் செய்த … Read more

அக்டோபர் மாதத்தில் 85.50 லட்சம் பேர் பயணம்! பயணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை: அக்டோபர் மாதத்தில் மட்டும் 85.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர், அவர்களுக்கு நன்றி என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. சென்னை வாசிகளுக்கு நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான  பயண வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 117 … Read more

மிசோரமில் பாஜகவை மட்டுமல்ல.. மாநில கட்சிகளையும் நம்பாதீங்க! சரமாரி விமர்சனங்களை அடுக்கும் காங்கிரஸ்

ஐய்ஸ்வால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மிசோரமில் நவம்பர் மாதம் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக பிராந்திய கட்சிகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் மிசோரம் மாநிலமும் ஒன்று. இந்த Source Link

World Cup Cricket: Toss wins New Zealand, Bowling | உலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்று நியூசி., பவுலிங்

புனே: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி ‘பவுலிங்’ தேர்வு செய்தது. இந்தியாவில் 13வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இன்று (நவ.,1) புனேயில் நடக்கும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2, 3வது இடங்களில் உள்ள தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. நியூசி., அணியில் பெர்குசனுக்கு பதிலாக டிம் சவுதி சேர்க்கப்பட்டார். … Read more

காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி; கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த RPF காவலர்!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த லீலாதர் தாக்குர் (22) என்பவர், 17 வயது சிறுமியைக் காதலித்து வந்தார். இந்த நிலையில், லீலாதர் தாக்குர் அந்தச் சிறுமியுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். ரயில் மூலம் புனேவுக்கு வந்திறங்கிய இருவரும், எங்கு செல்வது என்று தெரியாமல், ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் அனில் பவார் என்பவர், இருவரையும் அழைத்து விசாரித்திருக்கிறார். பின்னர், அவர்களின் நிலையைத் தெரிந்துகொண்டு, இரண்டு பேரையும் தான் நடத்தும் தொண்டு … Read more

கொடியேற்ற முயற்சி- பாஜகவினர் கைது! இது கோவை சம்பவம்…

கோவை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தபடி, இன்று கோவையில்,  கொடிக்கம்பம் அமைத்திருந்த பகுதியில் கொடியேற்ற முயன்றி பாஜகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  காவல்துறை  அனுமதியின்றி  பாஜகவினர் கூடியதாக அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக வறப்படகிறத. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பனையூரில் மாநிலதலைவர் அண்ணாமலை வீட்டு முன்பு  அமைக்கப்பட்ட 100 அடி உயர பாஜக கொடி கம்பத்தை காவல் துறையினர் அகற்றிய நிலையில், அடுத்த 100 நாட்களில் 10 ஆயிரம் கொடி கம்பம் … Read more