“தமிழக அரசின் செயல்பாடு குறித்து நான் இன்னும் மதிப்பெண் போடவில்லை”- பாமக நிறுவனர் ராமதாஸ்

“நம் நாட்டிற்கு தற்போது உள்ள இந்தியா என்ற பெயரே போதும். பாரத் என்ற பெயர் தேவையில்லை என நான் கருதுகிறேன். தமிழக அரசின் இரண்டு ஆண்டு செயல்பாடு குறித்து நான் இன்னும் மதிப்பெண் போடவில்லை” என கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண விழாவில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். டாக்டர் ராமதாஸ் கும்பகோணத்தில் 85 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 85 -வது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் 85 ஜோடிகளுக்கு 85 சீர்வரிசை … Read more

பஞ்சர் ஆனதால் வந்த கொடூரம்.. திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி.. கதறிய பெண்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் அமர்ந்திருந்தவர்கள் மீது வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். சண்டியூர் பகுதியில் வேனில் சுற்றுலா சென்று இவர் வீடு திரும்பி உள்ளனர். வீடு திரும்பும்போது வேன் பஞ்சரானதால், சாலையின் நடுவே அமர்ந்திருந்தபோது விபத்து Source Link

சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுவோர் மடாதிபதிகள் மாநாட்டில் கடும் கண்டனம்| Those who speak against Sanatana Dharma are severely condemned in the Abbots Conference

மைசூரு : சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களுக்கு, மைசூரில் நடந்த மடாதிபதிகள் மாநாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணதாமா சாதுர்மாஸ்ய சமிதி, விஸ்வ ஹிந்து பரிஷத் இணைந்து, மைசூரு கணபதி சச்சிதானந்த ஆசிரமத்தின் நாதமண்டபம் அரங்கில், மடாதிபதிகள் மாநாடு மற்றும் தர்மசபா மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து உடுப்பி பெஜாவர் மடாதிபதி பிரசன்ன தீர்த்த சுவாமிகள் பேசியதாவது: சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களுக்கு, அதே வகையில் தக்க போராட்டம் நடத்த வேண்டியது அவசியம். சமூகத்தில் … Read more

இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது

புதுடெல்லி, இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வகுப்பதற்காக இந்த குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தினத்தந்தி Related Tags : India alliance  first coordination committee meeting  the day after tomorrow 

நாட்டின் பன்முக கலாசாரத்தை நாசப்படுத்த சதி; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு

பெங்களூரு: நாட்டின் பன்முக கலாசாரத்தை நாசப்படுத்த சதி நடப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். பொருளாதாரம் நாசமாகும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சையத் நசீர் உசேனுக்கு பாராட்டு விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு பேசியதாவது:- நாட்டின் பன்முகத்தன்மை நாசம் என்றால் அது அரசியல் சாசனம் நாசம் என்பதற்கு சமம் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் பன்முக கலாசாரத்தை நாசப்படுத்த சதி நடக்கிறது. இதற்காக மக்களை ஈர்க்கும் … Read more

தனியார் போக்குவரத்து சங்கங்கள் சார்பில் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு

பெங்களூரு: பெண்கள் இலவச பயண திட்டத்தை தனியார் பஸ்களுக்கும் விரிவுப்படுத்த கோரி தனியார் வாகன போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் பஸ்-ஆட்டோக்கள் உள்பட சுமார் 7 லட்சம் வாகனங்கள் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘சக்தி’ திட்டம் கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டமான ‘சக்தி’ திட்டம் … Read more

ரயில் ஓட்டுனரின் கண்களை வைத்து துாக்கத்தை கண்டறியும் கருவி தயாரிப்பு| Development of a train drivers eye-detection device

புதுடில்லி:இன்ஜின் டிரைவருக்கு துாக்கம் வருவதை, அவரது இமைக்கும் கண்கள் வாயிலாக கண்டுபிடித்து, ரயிலை நிறுத்தும்படி எச்சரிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவியை வடகிழக்கு எல்லை ரயில்வே உருவாக்கி வருகிறது. ரயில் ஓட்டுனர்கள் கண்களை இமைப்பதை வைத்து அவர்கள் துாக்க கலக்கத்தில் உள்ளனரா என்பதை கண்டறியும் கருவியை உருவாக்கும்படி, வடகிழக்கு எல்லை ரயில்வேக்கு ரயில்வே வாரியம் கடந்த ஜூன் மாதம் அறிவுறுத்தியது. சோதனை இதையடுத்து, ஆர்.டி.ஏ.எஸ்., எனப்படும், ரயில்வே டிரைவர் உதவி பொறிமுறை என்ற கருவியை வடகிழக்கு எல்லை … Read more

எனக்கு இந்தியா, பாரத் ஆகிய சொற்களில் பிரச்சினை இல்லை : ராகுல் காந்தி

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியா, பாரத் ஆகிய சொற்களில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவ்த்துள்ளார். மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்ற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் குடியரசுத் தலைவர்,, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக “பாரத்” என அச்சிடப்பட்டது. நடந்து முடிந்த ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களின் நாடுகளைக் குறிக்கும் வகையில் … Read more

வீட்டில் பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு; வாளியில் ஆண் குழந்தை சடலம்… கொலையா என போலீஸ் விசாரணை!

பட்டுக்கோட்டையில் பெண் ஒருவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் ரத்தப்போக்கு அதிகமாகியிருக்கிறது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து வாளியில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை போலீஸார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் செந்திலுடன் வசந்தி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி வசந்தி வயது 38. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் … Read more