அடுத்த சில தினங்களுக்குத் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்

சென்னை அடுத்த சில தினங்களுக்கு மொக்கா புயல் காரணமாகத் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மொக்கா புயல் வடகிழக்கு திசையில்‌ நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ மேலும்‌ வலுப்பெற்று 14.05.2023 நண்பகல்‌ தென்கிழக்கு வங்கதேசம்‌ மற்றும்‌ வடக்கு மியான்மர்‌ கடற்கரையைக் கடக்கக் கூடும்‌. அந்த சமயத்தில்‌ 150 முதல்‌ 160 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 175 கிலோ … Read more

"இம்ரானும், அவர் கும்பலும் பயங்கரவாதிகளுக்குக் குறைந்தவர்களல்ல!" – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்

“இம்ரான் கானும் அவரது ஆதரவாளர்களும் பயங்கரவாதிகளுக்குக் குறைவானவர்கள் அல்ல” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மே 9-ம் தேதியன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில்வைத்து ஆயுதமேந்திய துணை ராணுவப் படையினரால் கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வன்முறை, தீவைப்பு மற்றும் கலவர சூழலைச் சந்தித்து வருகிறது. இம்ரான் கான் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி வாகனங்கள் மற்றும் கட்டடங்களுக்குத் தீவைத்தனர். ராணுவ அதிகாரிகளின் குடியிருப்புகளை முற்றுகையிட்டு, நெடுஞ்சாலைகளை மறித்து, … Read more

கர்நாடகா தேர்தலில் தோல்வி அடைந்த 14 பாஜக அமைச்சர்கள்

பெங்களூரு நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 14 பாஜக அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின.   இந்த முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது.  ஆளும் கட்சியான பாஜக எதிர்க்கட்சியாக மாறி உள்ளது. இந்த தேர்தலில் பாஜக அமைச்சரவையில் இருந்த 14 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர்/   அவர்கள் விவரம் வருமாறு : கோவிந்த … Read more

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை: பயங்கரவாத குழுவில் பட்டியலிட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரான்ஸ் அழைப்பு

ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழுவை தீவிரவாத குழுவாக ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை பிரான்ஸ் தேசிய சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. பிரான்ஸ் தேசிய சட்டமன்ற தீர்மானம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறிய ராணுவ தாக்குதலில், ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அத்துடன் உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு போர் குற்றங்களுக்கு வாக்னர் கூலிப்படையே முக்கிய காரணம் என்று சர்வதேச நாடுகளால் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.  AFP … Read more

இந்திய அரசியலுக்குக் கிடைத்த வெற்றி : கர்நாடகா தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி

பெங்களூரூ கர்நாடகா தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலுக்குக் கிடைத்த வெற்றி எனப் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். கர்நாடகா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் -128 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவையான நிலையில் 128 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. ஆளும் பாஜக இதுவரை 60 இடங்களில் வெற்று பெற்று ஆட்சியை இழந்துள்ளது. மதச்சார்பற்ற  ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் – 4 … Read more

Rs. 12 thousand crore worth of drugs seized | ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொச்சி: கேரளாவில் ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைன் போதை பொருளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம் கொச்சி நடுகடலில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, என்.சி.பி., எனப்படும் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், இந்திய கடலோர காவல்படையினர் இணைந்து ரெய்டு நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் படகு ஒன்றை மறிந்து சேதனையிட்டனர். அதில் 2,500 கிலோ … Read more

முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்! – முழு லிஸ்ட்

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக துறை அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்று கோட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்தச் சூழலில் நிதித்துறை, முதல்வரின் செயலாளர், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தற்போது மாற்றப்பட்டிருக்கின்றனர். ஐ.ஏ.எஸ் மாற்றம் நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மை செயலாளராகவும். முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டிருக்கின்றனர். அதேபோல, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். … Read more