தலைப்பு செய்திகள்
`Unstoppable' கர்நாடக காங்கிரஸ்; மோடி அலையை விழுங்கியதா ராகுலின் `ஜோடோ’ யாத்திரை?
24 நாள்கள், 500 கிலோ மீட்டர், கர்நாடகத்தில் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டிருக்கிறது. காங்கிரஸ் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கடந்து வெற்றிப் பாதையில் பயணித்துவருகிறது. இதில் அந்த மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் உழைப்பு, பா.ஜ.க மீதான மக்களின் அதிருப்தியைக் கடந்து… ராகுலின் யாத்திரைக்கும் பெரும் பங்கு இருப்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியும். பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடகத் தேர்தல் ’கியர்’ யாத்திரை! 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், குமரியில் … Read more
நான் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கவில்லை : ஃபர்ஹானா பட இயக்குனர்
சென்னை ஃபர்ஹானா பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தமது படத்த்ல் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கவில்லை என தெரிவித்துள்ளார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள் ஃபர்ஹானா திரைப்படத்தின் கதை ஒரு இஸ்லாம்ய குடும்பத்தின் கதை என்பதால் அதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக எழுந்த செய்தியால் நேற்று ஒரு திரையரங்கில் ஒரு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர், “இந்த படத்தின் … Read more
Why the ban on The Kerala Story? Supreme Court Notice! | தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை ஏன்? மே.வங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
புதுடில்லி, தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்ததற்கான காரணத்தை கேட்டு, மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், இப்படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மறுப்பு இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி படம், கடந்த 5ம் தேதி நாடு முழுதும் வெளியானது. மேற்கு வங்கத்தில் இப்படத்திற்கு அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா … Read more
கர்நாடகாவில் பாஜக-வை வீழ்த்தி, சொன்னதைச் செய்து காட்டிய டி.கே.சிவக்குமார்! – யார் இவர்?
கர்நாடக சட்டமன்றம் 224 தொகுதிகளைக் கொண்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் முடிவுகளை ஒட்டுமொத்த இந்தியாவும் உற்றுநோக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு, கர்நாடக தேர்தல் வெற்றி நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதேயாகும். Karnataka Exit Poll – கர்நாடக சட்டமன்றத் தேர்தல் இதன் காரணமாக பா.ஜ.க, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டன. ராகுல் காந்தி, கார்கே, மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் … Read more
சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் கையில் பிரான்ஸ் பாஸ்போர்ட்: தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை
சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் சிலர், உண்மையான பிரான்ஸ் பாஸ்போர்ட்டுடன் பயணிக்க உதவும் மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் பாஸ்போர்ட்டுடன் சிக்கிய வெளிநாட்டவர் கடந்த நவம்பர் மாதம், மாலி நாட்டிலிருந்து பிரான்ஸ் வந்த வந்த ஒருவரை பாரீஸ் விமான நிலையத்தில் எல்லை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவரிடமிருந்த பிரான்ஸ் பாஸ்போர்ட் அவருடையது அல்ல என்பது தெரியவந்தது. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல் அந்த நபரிடம் விசாரிக்கும்போது, அவர் உண்மையான பிரான்ஸ் பாஸ்போர்ட் ஒன்றை வாடகைக்கு … Read more
பாஜக-வின் பழிவாங்கும் அரசியலுக்கு கர்நாடக மக்கள் தகுந்தபாடம் புகட்டியுள்ளனர் – மு.க.ஸ்டாலின்
எதிர்கட்சிகளுக்கு எதிராக அரசு நிறுவனங்களை பயன்படுத்தி வந்த பாஜக-வின் பழிவாங்கும் போக்கிற்கு கர்நாடக மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் : கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் … Read more
ராகுல் காந்தியின் அத்தியாயம் கர்நாடகாவிலிருந்து ஆரம்பம்! பாஜகவுக்கு இது ஒரு பாடம்! -துரை வைகோ
Tamilnadu oi-Arsath Kan சென்னை: ராகுல் காந்தியின் அத்தியாயம் கர்நாடகாவிலிருந்து தொடங்கியுள்ளதாக மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு இது ஒரு பாடம் என கர்நாடக தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு; நடைபெற்று முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் மத அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்த நினைக்கும் ஆளும் பாஜக அரசுக்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் பின்னடைவு … Read more
Expert panel ready to end polygamy in Assam | பல தார மணத்திற்கு முடிவு கட்ட அசாமில் நிபுணர் குழு தயார்
குவஹாத்தி, அசாமில், பல தார மணம் செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நான்கு பேர் அடங்கிய நிபுணர் குழு அமைத்து, அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உத்தரவிட்டு உள்ளார். வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபையில் சமீபத்தில் பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ‘அசாமில், பல தார மணம் செய்யும் நடைமுறையை தடை செய்ய, … Read more