கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தமிழகத்தின் சிவஞானம் பதவி ஏற்பு

கொல்கத்தா இன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தமிழகத்தை சேர்ந்த டி எஸ் சிவஞானம் பதவி ஏற்றார். டிஎஸ் சுப்பையா – நளினி என்னும் தமிழகத்தைச் சேர்ந்த  தம்பதியரின் மகனான டிஎஸ் சிவஞானம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி பட்டமும் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் பி எல் சட்டப் படிப்பும் முடித்தவர் ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கி, கடந்த 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக நீதிபதியாகப் பதவி ஏற்றார்.  இவர் … Read more

Shinde government in Maharashtra… got away! | மஹாராஷ்டிராவில் ஷிண்டே அரசு… தப்பியது!

‘ புதுடில்லி,: மஹாராஷ்டிராவில் நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்கொள்வதற்கு முன்பே, பதவியை ராஜினாமா செய்து விட்டதால், உத்தவ் தாக்கரேயை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த முடியாது’ என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில், எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு அளிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் மஹாராஷ்டிராவில், 2019ல் சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் … Read more

Daily Rasi Palan 12.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சென்னையில் 2.79 லட்சம் கட்டிடங்கள் மறு அளவீடு ; சொத்து வரி வருமானம் அதிகரிக்குமா?

சென்னை சென்னை மாநகராட்சி 2.79 லட்சம் கட்டிடங்களை மறு அளவீடு செய்வதால் கூடுதல் சொத்து வரி வருமானம் கிடைக்கலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர். சொத்து வரியைக் கணக்கீடு செய்ய, சென்னை மாநகராட்சியில், புவிசார் தகவல் வரைபடம் தயாரிக்கப்பட்டது.   இதுவரை‘ட்ரோன்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள், மத்திய, மாநில அரசு கட்டடங்களின் பரப்பளவு கணக்கீடு செய்யப்பட்டது.  இதன் மூலம், 3.10 லட்சம் கட்டடங்களில் சொத்து வரி செலுத்துவதில் மாறுபாடு இருந்தது கண்டறியப்பட்டது.  அவற்றில், 30,899 … Read more

ஜவஹர் நேசன் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.. மாநில கல்விக் கொள்கை குழு தலைவர் நீதிபதி முருகேசன் மறுப்பு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : தேசிய கல்விக் கொள்கையைத் தழுவி தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்விக்கொள்கை வகுக்கப்படுகிறது என்ற பேராசிரியர் ஜவஹர் நேசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான உயர்நிலைக் குழுவின் தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பேராசிரியர் ஜவஹர் நேசன் அறிவித்ததுடன் முதலமைச்சரின் தனிச்செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தமிழ்நாடு … Read more

A large number of devotees participate in the Kumbabhishekam of Karpaka Ganesha Temple | கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்பு

புதுடில்லி:புதுடில்லியில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. புதுடில்லியின் சரோஜினி நகரில் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேகம் நேற்று பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாக நடந்தது. 1961ஆம் ஆண்டு புதுதில்லி சரோஜினி நகர் பகுதியில் துவங்கப்பட்ட ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் ஆலயம், 62 ஆண்டுகள் பழமையானது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த … Read more

Yashasvi Jaiswal: 6,6,4,4,2,4 `பார்த்தேன். வியந்தேன்…' யாஷஸ்வியைக் கொண்டாடும் கிரிக்கெட் உலகம்!

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக வென்றிருக்கிறது. 150 ரன்கள் டார்கெட்டை 13.1 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி சேஸ் செய்திருக்கிறது. இந்த அதிரடி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்தான். 47 பந்துகளில் 98 ரன்களை எடுத்து அகத்தியிருந்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களை அடித்திருந்தார். யாஷஸ்வியின் இந்த அதிரடியை பார்த்து கிரிக்கெட் உலகை சார்ந்த பலருமே வியப்போடு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருக்கும் … Read more

வெறித்தனமான ஆட்டத்தை காட்டிய வீரர்! 13 ஓவரிலே 151 ஓட்டங்கள் எடுத்து வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 149 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஹெட்மையரின் மிரட்டலான கேட்ச் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய ஐபிஎல் 56வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் சொதப்பினர். குறிப்பாக ஜேசன் ராய் அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் இருந்து ஹெட்மையர், ஸ்பைடர்மேன் போல் … Read more

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது சட்டவிரோதமானது : பாக் உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத் முன்னாள் பிரதமர்  இம்ரான்கான் கைது சட்ட விரோதம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இம்ரான்கான் ஊழல் செய்து, பாகிஸ்தான் அரசுக்கு ரூ.5,000 கோடிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக்கூறப்படுகிற அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இம்ரான் நீதிமன்ற … Read more

செக் மோசடி வழக்கு; ஜே.கே.ரித்தீஷ் மனைவிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!

காசோலை கொடுத்து ஏமாற்றிய வழக்கில் மறைந்த நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரீத்தீஷ் மனைவிக்கு 60 லட்சம் ரூபாய் அபராதமும், ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கி காரைக்குடி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பரபரப்பான அரசியல்வாதியாகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.கே.ரித்தீஷ். ரித்தீஷ் தனக்கென்று பெரிய ஆதரவாளர் கூட்டத்துடன், சென்னையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கும் ராமநாதபுர மாவட்ட மக்களுக்கும் நிதி உதவிகள் செய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ரித்தீஷ், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் … Read more