ஒன் பை டூ
கோவி.செழியன், அரசு தலைமை கொறடா, தி.மு.க“அ.தி.மு.க-வினர் திட்டமிட்டே வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அன்று ஆளுநருக்கு எதிராகத் தனித் தீர்மானம் கொண்டுவரப்படுவது அ.தி.மு.க-வினருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் தீர்மானம் முன்மொழியப்படுவதற்கு முன்பாகவே, ‘சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்’ என்று இல்லாததைச் சொல்லி அவசர அவசரமாக வெளிநடப்பு செய்துவிட்டார்கள். அதுதான் உண்மையான காரணமென்றால் வெளிநடப்புக்குப் பிறகு, மீண்டும் உள்ளே வந்து தீர்மானம் விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே… ஆனால், தீர்மானம் முடியும்வரை காத்திருந்து, மானியக் கோரிக்கையில்தான் பங்கேற்றார்கள். இதிலிருந்தே அ.தி.மு.க-வினரின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. … Read more