People are suffering because of peak vegetable prices | உச்சத்தில் காய்கறி விலை மக்கள் கடும் அவதி

புதுடில்லி, நாடு முழுதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதர காய்கறிகளின் விலைகளும் உச்சம் தொட துவங்கியிருப்பது, மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தக்காளி கிலோ 120 ரூபாய் வரை விற்கப்படுவதை அடுத்து, ரேஷனில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனையை மாநில அரசு துவங்கி உள்ளது. புதுடில்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விலை கிலோ 130 – 160 ரூபாய் வரை … Read more

டெல்லியில் நாளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் – சரத் பவார் அழைப்பு

மும்பை, மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் மற்றும் அவரது 8 ஆதரவு எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர். தொடர்ந்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கும் கவர்னர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மராட்டிய சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், இதில் சிலர் அஜித் பவாருக்கு … Read more

தேனி: “கலந்தாய்வுக் கூட்ட அரங்கில் 15 முறை மின்தடை; விடியல் அரசே… முடியல அரசே!" – சீமான்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் `நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்’ என்ற பெயரில் நடந்த ​பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழர்கள் அதிகம் வாழும் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்டப் பகுதிகளை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டம் கேரளாவிடம் சென்றதால்தான் முல்லைப்பெரியாறு பிரச்னை ஏற்பட்டது. இதேபோலதான் நில உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு காவிரி தண்ணீருக்காகவும் கர்நாடகத்துடன் போராடிக் கொண்டிருக்கிறோம்.  கண்ணகி கோயில் சேரன் செங்குட்டுவனால் கண்ணகிக்கு கட்டப்பட்ட கோயில் தமிழக எல்லைக்குள் இருந்தது. கண்ணகிக்கு விழா எடுத்து கொண்டாடிவந்த நிலையில், கேரள … Read more

கட்சி சின்னம் எங்களிடம் தான் உள்ளது : சரத்பவார் உரை

மும்பை கட்சியின் சின்னம் தங்களிடம் உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்வராகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான சகன் புஜ்பால், தனஞ்செய் முண்டே, அதிதி தட்காரே, ஹசன் முஷ்ரிப்,  உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த திடீர் மாற்றம் … Read more

ஆபாச பட நடிகை போன்று உடை அணிய வற்புறுத்தல் – கணவன் மீது மனைவி புகார்..!

டெல்லி, டெல்லி மாநிலம் கிழக்கு ரோதாஷ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில நாட்களிலேயே அவரது கணவர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனதளவிலும், உடல் அளவிலும் துன்புறுத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணை தொடர்ந்து ஆபாச படம் பார்க்கும்படியும் அதில் நடிக்கும் நடிகைகள் போன்று உடை அணிந்து தன் முன் வந்து நிற்க்கும் படியும் வற்புறுத்தியுள்ளார். நீண்ட நாட்களாக அவர் இவ்வாறு வலியுறுத்திய நிலையில், ஒரு கட்டத்தில் பொறுத்துக் … Read more

Love Jihad: 5 வருடங்களாகப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி; இஸ்லாமிய நபரைக் கைதுசெய்த போலீஸ்!

குஜராத்தில் ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து ஐந்து ஆண்டுகளாக மிரட்டிவந்த இஸ்லாமிய நபரை, போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இதில் குற்றம்சாட்டப்படும் 37 வயது இஸ்லாமியர் அசிம் நிஜாம் ஷேக் என்பவர், பாதிக்கப்பட்ட சிறுமி 16 வயதாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்துவைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, இதிலிருந்து தப்பிக்க நினைத்த அசிம் நிஜாம் ஷேக், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பாலியல் வன்கொடுமை அதோடு பாதிக்கப்பட்ட சிறுமியை, வீடியோவை … Read more

உயர்சாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் சமூக நீதி சீரழிந்தது : தாமஸ் பிக்கெட்டி கருத்து

பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவிகிதம் இடஒதுக்கீட்டால் இந்தியாவில் சமூக நீதி சீரழிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். 1871 ம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரையிலான தரவுகளை ஆய்வு செய்த பிரெஞ்சு பொருளாதார நிபுணரும் பல்கலைக்கழக பேராசிரியருமான தாமஸ் பிக்கெட்டி இவ்வாறு கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள இந்துக்களின் மக்கள்தொகையில் உயர்சாதியினரின் எண்ணிக்கை 13 முதல் 14 சதவீதமாக உள்ளது. மற்ற அனைத்து மதங்களை கருத்தில் கொண்டால் உயர்சாதியினரின் … Read more

'பா.ஜ.க.வின் தோல்விகளை விளம்பரங்கள் மூலம் மறைத்துவிட முடியாது' – மல்லிகார்ஜுன் கார்கே

புதுடெல்லி, பா.ஜ.க.விற்கு எதிராக தேர்தலில் வாக்களித்து மக்கள் பதிலளிப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “மோடி அரசின் கொள்ளையினால் பணவீக்கம் மற்றும் வேலையின்மை இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால் பா.ஜ.க.வினர் அதிகார பேராசையில் மூழ்கியுள்ளனர். நாட்டில் வேலையின்மை விகிதம் 8.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமங்களில் வேலையின்மை விகிதம் 8.73 சதவீதமாக உள்ளது. மேலும் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய … Read more