தேர்தல் நடத்தை விதிமீறல்: பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதம் சிறை – உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு

ராம்பூர், உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மிலாக் தொகுதி எம்.எல்.ஏ., ராஜ்பாலா சிங். பா.ஜனதாவை சேர்ந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. உரிய அனுமதி பெறாமல் பிரசார கூட்டம் ஒன்றை நடத்தியதற்காக ஷாசாத் நகர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ராம்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜ்பாலா சிங் எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதம் சிறையும், … Read more

நாளை உலக பாரம்பரிய தினம் : நம் வரலாற்று பெருமைகளை குழந்தைகளுக்கு சொல்வோம்!| Tomorrow is World Heritage Day: Lets tell our children about our historical pride!

சென்னை : உலக பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் வகையில், உலக பாரம்பரிய தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் ஏற்படும் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களால், பாரம்பரிய சொத்துக்கள் குறித்த அறிவு, இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவற்றை பாதுகாக்கும் வகையிலும், ஆண்டுதோறும் ஏப்ரல், 18ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்க, ‘யுனெஸ்கோ’ அறிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் அதிகாரி, ஸ்ரீதரன் கூறியதாவது: நம் முன்னோர் விட்டுச் சென்ற பொருட்களும், இடங்களும் தான், … Read more

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபட கூடாதுகலெக்டர் சதீஷ் எச்சரிக்கை

குடகு- எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று கலெக்டர் சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேட்புமனு தாக்கல் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதுபோல் நேற்று குடகு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சதீஷ், மடிகேரியில் உள்ள தனது அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள், பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:- சட்டசபை தேர்தலையொட்டி கடந்த 13-ந் தேதி வேட்புமனு … Read more

Arjun Tendulkar: "இது ஒரு பேரழகான பயணத்தின் தொடக்கம்!" – மகனுக்கு வாழ்த்து கூறி நெகிழ்ந்த சச்சின்!

வான்கடே மைதானத்தில் கொல்கத்தாவிற்கு எதிராக மும்பை அணி ஆடிய ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில், தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் சமூகவலைதளம் மூலமாக ஒரு வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியின் வழக்கமான கேப்டனான ரோஹித் சர்மா அறிமுக தொப்பியை வழங்கி அர்ஜுன் டெண்டுல்கரை வாழ்த்தி ஆட்டத்திற்குள் வரவேற்றிருந்தார். ஆட்டத்தின் முதல் ஓவரையே இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன்தான் வீசினார். பவர்ப்ளேக்குள்ளாகவே இரண்டு ஓவர்களை வீசியிருந்தார். … Read more

காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.7¼ லட்சம் பறிமுதல்

உப்பள்ளி- கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் உப்பள்ளி புறநகர் கப்பூர் பைபாஸ் சோதனை சாவடியில் உப்பள்ளி தாசில்தார் கலகவுடா தலைமையில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹாவேரியில் உப்பள்ளியை நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் … Read more

17.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 17 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் ஜிடிபி அதிக வளர்ச்சி| Indias GDP growth is higher than that of developed countries

வாஷிங்டன்: நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வளர்ந்த நாடுகளை விட அதிகமாக உள்ளதாக பன்னாட்டு நிதியம்(ஐஎம்எப்) கணித்து உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.9 சதவீதமாக இருக்கும் எனக்கூறியுள்ள ஐ.எம்.எப்., உலகின் வேகமாக வளரும் நாடாக இன்னும் இந்தியா உள்ளதாக அறிவித்துள்ளது. 2023ல் இந்தியாவின் ஜிடிபி 5.9 என கணித்துள்ள ஐ.எம்.எப்., மற்ற நாடுகளின் ஜிடிபி வளர்ச்சியையும் கணித்து உள்ளது. இதன்படி சீனா : 5.2 இந்தோனேஷியா : 5.0 சவுதி அரேபியா … Read more