‘ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?’ – அமெரிக்க செனட்டில் ஜோஷ் ஹாவ்லி–டாக்டர் நிஷா வர்மா இடையிலான மோதல் வைரல்

‘ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?’ என்ற கேள்வியை அமெரிக்க செனட் விசாரணையில் குடியரசுக் கட்சி செனட்டர் ஜோஷ் ஹாவ்லி எழுப்ப, அதற்கு நேரடியான பதில் தராமல் மருத்துவர் நிஷா வர்மா அளித்த விளக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அபார்ஷன் மாத்திரை (மிஃபெப்ரிஸ்டோன்) பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற செனட் சுகாதாரக் குழு விசாரணையில்தான் இந்த சம்பவம் நடந்தது. டெமோகிராட் தரப்பின் சாட்சியாக அழைக்கப்பட்ட அட்லாண்டாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நிஷா வர்மாவிடம், “ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?” என்று ஹாவ்லி மீண்டும் … Read more

“திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:- திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று … Read more

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளிலும் பெரும்பாலானவற்றை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை மாநகராட்சியில் பா.ஜ.க 69 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான … Read more

ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை விசாரணையின்போது மம்தா பானர்ஜி அடாவடி! உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அதிரடியாக தலையிட்டு ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரத்தில் மேற்கு வங்க அரசு, முதல்வர் மம்தா பானர்ஜி, காவல்துறை ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் ஐ-பிஏசி மனு மீது உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது, மம்தா பானர்ஜியின் நடவடிக்கையால், சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி உள்ளதாகவும்  சுட்டிக்காட்டியது. அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகம், அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் … Read more

ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விடுவிப்பு

அமராவதி, ஆந்திர முதல்-மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி இருந்த போது, சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர திறன் மேம்பாட்டு நிறுவன நிதி ரூ.300 கோடியை மோசடி செய்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 2023-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் 2024-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்-மந்திரி ஆனார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வந்த ஆந்திர போலீசார், சந்திரபாபு நாயுடு மீது … Read more

சென்னை: அதிமுக பகுதிச் செயலாளர் தற்கொலை – கடன் தொல்லையால் விபரீத முடிவா?

சென்னை ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (47). இவர் அதிமுக சைதை மேற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். 16-ம் தேதி பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சேர்ந்து சுகுமார், எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்திருக்கிறார் அதிகாலையில் நிர்வாகிகள் அனைவரும் சென்ற பிறகு சுகுமார் மட்டும் தனியாக அலுவலகத்தில் இருந்திருக்கிறார். அதன்பிறகு அவர், மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து குமரன்நகர் காவல் … Read more

77வது குடியரசு தினவிழா: சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய யூனியன் தலைவர் பங்கேற்பதாக மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி:  ஜனவரி 26ந்தேதி நடைபெற உள்ள நாட்டின் 77வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் வருகிற 26-ம் தேதி குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில்,  ஒவ்வொரு ஆண்டும்  குடியரசு தினவிழா அணிவகுப்பின்பாது சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பது வழக்கம்.  அதன்படி வரும் 26ந்தேதி (ஜனவரி 26)    நடைபெறும் … Read more

சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸ் கைது

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மோசடி தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முதன்மை தந்திரி, முன்னாள் எம்.எல்.ஏ., திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினரான சங்கரதாசும் சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கிடையே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சங்கரதாஸ் கைது செய்யப்படாத சம்பவத்திற்கு கேரள … Read more

காங்கிரஸ்: கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனை; டெல்லிக்குச் செல்லும் செல்வப்பெருந்தகை!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (ஜன.17) டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைக் கட்சிகள் தொடங்கிவிட்டன. தவெக தலைவர் விஜய் இதனிடையே தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தவெக … Read more

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு பயணத்தை தவிருங்கள்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

டெல்லி: போர் பதற்றம் காரணமாக,  இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு பயணத்தை தவிருங்கள் என இந்தியர்களுக்கு  வெளியுறவுத்துறை அமைச்சகைம் அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் தங்கியுள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய அரசாங்கம், தனது வெளியுறவு அமைச்சகம் (MEA) மூலம், பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதட்டங்கள் காரணமாக இஸ்ரேலுக்கு (மற்றும் ஈரானுக்கு) அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களுக்கு மீண்டும் … Read more