மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார வயர்… பள்ளி முடிந்து வீடு திரும்பிய சகோதரிகளுக்கு நேர்ந்த சோகம்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஜிராபஸ்தி கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஆஞ்சல் யாதவ்(வயது 15). இவரது தங்கை ஆல்கா யாதவ்(வயது12), 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்கு சென்று வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை சகோதரிகள் இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் தேங்கி இருந்த மழைநீரில் மின்சார வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் … Read more

தமிழக கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை; இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்  கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு  உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின தனது  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சை – புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக். வளைகுடாவில், நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் … Read more

இந்தியாவின் மின் திறனின் புதிய அத்தியாயம் ராஜஸ்தான் மண்ணிலிருந்து எழுதப்படுகிறது – பிரதமர் மோடி

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்டங்களையும் துவக்கி வைத்தார். 3 வந்தே பாரத் ரெயில்களை துவக்கி வைத்தார். அணுமின் நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அரசு துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்டோருக்கு 15,000க்கும் மேலான பணி நியமன கடிதம் வழங்கினார் பிரதமர் மோடி. அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:- நவராத்திரி அன்று 9 வகையான சக்திகளை நாம் வணங்குகிறோம். நாடு மின்சார வேகத்தில் முன்னேறி … Read more

"இட ஒதுக்கீட்டில் தமிழ்நாடுதான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்"- தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி புகழாரம்

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 25) மாலை தொடங்கியது. இதில், முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திமுக அமைச்சர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். திரைத்துறையிலிருந்து, வெற்றிமாறன், மிஷ்கின், மாரி செல்வராஜ், தியாகராஜா குமாரராஜா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தமிழக பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களால் பயன்பெற்ற மாணவ மாணவிகள் மேடையில் நெகிழ்ச்சியாகப் பேசினர். அதைத்தொடர்ந்து, 2025-26 கல்வியாண்டுக்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் … Read more

2000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும்: ரயிலில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது அக்னி ஏவுகணை! வீடியோ

டெல்லி: சுமார் 2ஆயிரம் கிலோ மீட்டர் இலக்கை தாக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள அக்னி ஏவுகணை, ரயிலில் இருந்து செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய அரசு ஏற்கனவே அக்னி உள்பட ஏராளமான ஏவுகணைகளை தயாரித்து, அதை வெற்றிகரமாக இயக்கியும் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், 2,000 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் கொண்ட   இரண்டாம் தலைமுறை அக்னி-பிரைம் … Read more

ஆந்திராவில் 600 அடி உயர ராமர் சிலை; திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வைக்க முடிவு

அமராவதி, ஆந்திர மாநிலம் ஒண்டிமிட்டாவை தேசிய சுற்றுலா மற்றும் ஆன்மீக மையமாக மேம்படுத்த திருப்பதி தேவஸ்தானம் நியமித்த நிபுணர் குழு முன்மொழிந்துள்ளது. கடப்பா ரேணிகுண்டா தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை-மும்பை ரெயில் பாதையின் நடுவில் ஒரு குளம் உள்ளது. அதில் ஒரு உயரமான ராமர் சிலை நிறுவப்பட வேண்டும் என்றும். தரிசனத்திற்காக வரும் சுற்றுலாப் பயணிகள் வியக்கும் வகையில் இந்தப் பகுதியை அழகாக மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதன் படி ராமய்யா க்ஷேத்திரம் அருகே உள்ள … Read more

"காது கேட்காத அம்மாவுக்கு மிஷின் வாங்கி கொடுத்தேன்" – புதுமைப் பெண் திட்டம் பற்றி மாணவி நெகிழ்ச்சி!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ – கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக அரசின் திட்டங்கள் விளக்கப்பட்டதுடன், பயன்பெற்ற மாணவர்கள் நேரடியாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.  ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ அந்தவகையில் புதுமைப் பெண் திட்டத்திநால் பலனடந்தது பற்றி பேசிய ரம்யா என்ற மாணவி அரங்கில் அனைவரையும் நெகிழவைத்தார். “நான் நினைக்கிற எல்லாமே என் வாழ்க்கையில நடந்துட்டு இருக்கு. நான் தஞ்சாவூர் மாவட்டம் கோவிலடி என்ற கிராமத்தில் இருந்து … Read more

சோயாபீன் வாங்குவதை நிறுத்த சீனா முடிவு… வண்டியை இந்தியா பக்கம் திருப்ப அமெரிக்கா தீவிரம்…

உலகளவில் விவசாய வர்த்தகம் கொந்தளித்துள்ளதற்கு டிரம்பின் வரிகள் மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் காரணமாக உள்ளது. அமெரிக்க விவசாயப் பொருட்களை மற்ற நாடுகள் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியுறவுக் கொள்கை மாற்றமடைந்துள்ளது, போதுமான அளவு வாங்காத நாடுகளுக்கு வரிகள் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே புதிய வர்த்தக மோதலுக்கு வழிவகுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரிகளுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவிலிருந்து சோயாபீன் வாங்குவதை நிறுத்த சீனா முடிவு … Read more

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜாஸ் போர் விமானங்கள்: மத்திய அரசு ஒப்பந்தம்

புதுடெல்லி, இந்திய விமானப்படைக்கு 97 இலகு ரக தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் 68 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டவையாகவும், 29 போர் விமானங்கள் இரட்டை இருக்கை கொண்டவையாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.62,370 கோடியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்து இருந்தது. இதனைத் … Read more