காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பண்டிட் உடலுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள்…!

ஜம்மு-காஷ்மீர், ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரான பண்டிட் சமுகத்தினரை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலை தடுக்க பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தை சேர்ந்தவரை பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை சுட்டுக்கொன்றனர். அச்சென் பகுதியை சேர்ந்த சஞ்சய் சர்மா (வயது 40) என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பண்டிட் … Read more

91 வயதில் மலர்ந்த காதல்… காரணம் சொல்லும் தொழிலதிபர்!

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும்,  டிஎல்எஃப் குழுமத் தலைவருமான குஷால் பால் சிங், 2008 -ம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பணக்காரர் பட்டியலில் உலகின் 8 -வது பணக்காரர் இடத்தை பிடித்தார். பூகம்பத்தைத் தடுக்கும் வகையில் அலுவலக கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டி கொடுத்த வகையில் ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் பிரபலமானவராக விளங்கினார். குஷால் பால் சிங் “வாழ்ந்து காட்டுவோம்!’’ – மணமுடித்த உயரம் குறைவான மாற்றுத்திறன் ஜோடி! வெளிநாடுகளில் தனது … Read more

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன? சில அடிப்படைத் தகவல்கள்

பிரித்தானியாவின் தற்போதைய தலைப்புச் செய்தியாகியுள்ளது புதிய பிரெக்சிட் ஒப்பந்தம். இந்த புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் என்பது என்ன என்பதைக் குறித்த சில அடிப்படை விடயங்களை மட்டும் பார்க்கலாம். Brexit என்பது என்ன? அதாவது, முன்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது பிரித்தானியா. பின்னர், பொருளாதாரம், புலம்பெயர்தல், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு என பல்வேறு காரணங்களால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என பிரித்தானியா முடிவு செய்தது. அப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத்தான் பிரெக்சிட் என்கிறோம். ’Britain’ … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சி: கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில்  அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தொடங்கி வைத்தார். மேலும் திமுகவுடன் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நாளை (மார்ச் 1ந்தேதி) மாநிலம் முழுவதும் திமுகவினரால் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மார்ச் 1 மாலை 5.00 மணி அளவில் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதில்  அகில … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தயார்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தயார் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை வேட்பாளர்களின் முகவர்களும் பார்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

இந்து மதம் மிகச்சிறந்த மதம்.. சிறுமைபடுத்தாதீர்கள் – பாஜக தலைவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜோசப்…!

டெல்லி, வெளிநாட்டு படையெடுப்புகளால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நகரங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபத்யா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேஎம் ஜோசப், பிவி நாகரத்னா தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் நீதிபதி கேஎம் ஜோசப் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:- நாம் மதச்சார்பற்ற நாடு, அரசியலமைப்பை … Read more

“பாஜக-வில் 30 கோடி பெண்கள் இருந்தாலும், ஒரு கோடி டார்கெட் ஏன்?” – விளக்கும் வானதி சீனிவாசன்

2024 -ம் வருடம் பொது தேர்தல் நடைபெற உள்ளதை எதிர்கொள்வதற்காக பாஜக இப்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் மக்கள் தொகையில் பாதி அளவுக்கு உள்ள பெண் வாக்காளர்களை கவரும் விதமாக பாஜக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் பல திட்டங்களின் மூலம் பயனடைந்த ஒரு கோடி அளவிலான பயனர்களை கண்டறிந்து அவர்களோடு செல்ஃபி எடுக்கும் பணி தொடங்கப்படுகிறது. இது தொடர்பாக பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனை … Read more

மெஸ்ஸியா? ரொனால்டோவா? FIFA விருதுகளை அதிகம் அள்ளியது யார்

கத்தார் கால்பந்து உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்கு வெற்றிக்கோப்பையை பெற்றுத்தந்த லியோனல் மெஸ்ஸி 2022ம் ஆண்டுக்கான FIFA விருதை தட்டிச்சென்றுள்ளார். ஆகச்சிறந்த ஆண் விளையாட்டு வீரர் 2022ம் ஆண்டுக்கான FIFA விருது பாரிஸ் நகரில் பிப்ரவரி 27ம் திகதி முன்னெடுக்கப்பட்டது. இந்த விவாழில் FIFA அமைப்பின் ஆகச்சிறந்த ஆண் விளையாட்டு வீரர் என்ற விருதை மெஸ்ஸி பெற்றுக்கொண்டார். அத்துடன் ரொனால்டோ சாதனையை மெஸ்ஸி சமன்செய்துள்ளார். ரொனால்டோ இரண்டு முறை இந்த விருதை வாங்கியுள்ளார். ஆனால் அதிக … Read more

பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகம் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய பணியாளர் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 50 – 60 லட்சம் பேர் தற்போது அரசுப் பணியில் சேவை செய்து வரும் நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை 77 லட்சமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஓய்வூதியம் பெறுவோரில் சுமார் 6,000 -7,000 பேர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் பழைய ஓய்வூதிய சட்டப்படி அவர்கள் பெற்ற சம்பளத்திற்கு இணையான … Read more