குழந்தை இறந்து விட்டதாக நினைத்து கதறி அழுத பெற்றோர்! சரியான நேரத்தில் CPR செய்து உயிரைக் காப்பாற்றிய போலீஸ்

கேரளாவின் கண்ணூரைச் சேர்த்த காவல் அதிகாரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார். கதறி அழுத பெற்றோர் கேரளாவின் கண்ணூர் மாவட்டம் மெய்யில் எனும் பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரி முகமது பாசில். சம்பவதினத்தன்று பட்டாயம் எனும் பகுதியிலுள்ள கொளச்சேரிக்கு புதிய பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காகச் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் ஏதோ அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். CPR முதலுதவி செய்த காவலர் அந்த வீட்டில் 9 மாத குழந்தையொன்று … Read more

சென்னையில் நாளை (25.02.2023) மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்…

சென்னை:  சென்னையில் நாளை  (25.02.2023) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “சென்னையில் நாளை  (25.02.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி : மணலி சரவணா … Read more

மதுரை மண்டலத்துக்குட்பட்ட 5 மாவட்டங்களில் மார்ச் 4ம் தேதி அரசு பள்ளிகள் இயங்கும்: தொடக்கக்கல்வித் துறை இயக்குனர் சுற்றறிக்கை

மதுரை: சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மார்ச் 4ம் தேதி சனிக்கிழமை அரசு பள்ளிகள் இயங்கும் என தொடக்கக்கல்வித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 1-9 வகுப்பு வரை மார்ச் 4-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என தொடக்கக்கல்வித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மார்ச் 4ம் தேதி வேலை நாளுக்கு பதிலாக மார்ச் மாதம் 13ம் தேதி திங்கள்கிழமை விடுமுறை என அந்த சுற்றறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

512 கிலோ வெங்காயம் வெறும் ரெண்டு ரூபாய்: வேதனையடைந்த விவசாயி| Maharashtra farmer travels 70km to sell 512kg onions, gets cheque for Rs 2

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சோலாப்பூர்: மஹாராஷ்டிராவில் ஒரு விவசாயியின் 512 கிலோ வெங்காயத்தை, கிலோவுக்கு ரூ.1 என ஏலம் எடுத்துள்ளனர். அதிலும், சந்தைக்கு ஏற்றிவந்த வண்டிக்கூலி கழிக்கப்பட்டு இறுதியாக மொத்த வெங்காயத்திற்கான விலையாக ரூ.2 என ‘செக்’ கொடுத்ததால் விவசாயி வேதனையடைந்துள்ளார். இந்தியாவில் வெங்காய உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் மாநிலம் மஹாராஷ்டிரா. இம்மாநிலத்தில் தற்போது வெங்காய சாகுபடி அதிகமாக இருக்கிறது. வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அங்கு அறுவடை … Read more

சென்னை: வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயன்ற போதை ஆசாமி; அதிகாலையில் பரபரப்பு!

ராயப்பேட்டையில் இன்று அதிகாலையில், வீடு புகுந்து குழந்தையைக் கடத்த முயன்ற போதை ஆசாமியை போலீஸார் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுக்காலமாக வசித்து வருகிறார். பிரபு தனது வீட்டில் இன்று அதிகாலை குடும்பத்துடன் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து பிரபுவின் குழந்தையைக் கடத்த முயன்றிருக்கிறார். … Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்: பிப்ரவரி 24, 2023

இலங்கை மத்திய வங்கி இன்று (24-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,   அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 72 சதம் – விற்பனை பெறுமதி 368 ரூபா 77 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 97 சதம் – விற்பனை பெறுமதி 445 ரூபா 18 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378 ரூபா 34 சதம் – விற்பனை பெறுமதி 393 ரூபா … Read more

சென்னையில் ஒரே நாளில் 17 செல்போன்கள் திருட்டு! சைனா பஜார் வியாபாரி கைது…

சென்னை: சென்னையில் ஒரே நாளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்ட கும்பலை சென்னை காவல்துறை கூண்டோடு கைது செய்துள்ளது. இதற்கு உதவியாக இருந்த சைனா பஜார் வியாபாரி நாகூர் மீரானையும் கைது செய்துள்ளனர். சமீப நாட்களாக சென்னையில் செல்போன் பறிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பல இடங்களில் செல்போன் பறிப்பு நடைபெற்றது.  சென்னை கேகே நகர், வடபழனி, அசோக் நகர், மாம்பலம் உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் … Read more

நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.21 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

நாகை: நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.21 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முருகானந்தம் என்பவரது வீட்டிலிருந்து கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் மரிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்திருந்த வியாபாரிகள் தப்பியோடியுள்ளனர்.

ஜிம்மில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு; போலீஸ் கான்ஸ்டபிள் சுருண்டு விழுந்து பலி – அதிர்ச்சி வீடியோ

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் தெகந்தராபாத் ஆசிப் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் விஷால் (வயது 24). இவர் மொரட்பள்ளி உள்ள ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல நேற்று இரவு 8 மணியளவில் ஜிம்மிற்கு வந்த விஷால் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென விஷாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இடத்திலேயே விஷால் சுருண்டு விழுந்தார். விஷால் மயங்கி விழுந்ததை கண்ட அங்கு பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு … Read more

மாதவிடாய் விடுப்பு கோரிய மனு, தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்; தெரிவித்திருக்கும் காரணம் இதுதான்!

இந்தியா முழுவதும் பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனுவை, பிப்ரவரி 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல் வழங்கி இருந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இம்மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளது. மாதவிடாய் விடுமுறை பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை வழக்கறிஞர் ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் தாக்கல் செய்திருந்தார். இன்று, தலைமை … Read more