திண்டுக்கல் மாவட்டம் நத்தம்பாடிபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 24 பேர் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நத்தம்பாடிபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 24 பேர் காயமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 470 காளைகள், 250 மாடுபிடி வீர்கள் பங்கேற்றனர். மதுரை, திண்டுக்கல், பாலமேடு, அலங்காநல்லூறில் இருந்து வந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பெற்றனர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்-ஐ அங்கீகரிக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை நாடும் அதிமுக…!

டெல்லி, சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. 30 நாட்களுக்குள் … Read more

“அவர் ஒரு மண் குதிரை; நம்பி இறங்கியது தவறு!" – இபிஎஸ் அணியில் இணைந்த ஓபிஎஸ் அணி முன்னாள் மா.செ

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி இ.பி.எஸ் அணியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் அணியும் வலியுறுத்தியதன் விளைவாக இரண்டு அணிகளாக கட்சி உடைந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட அ.தி.மு.க பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க முடிவுசெய்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என ஓ.பி.எஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக இருவரும் தனித்தனி அணியாக இயங்கி வந்தனர். கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை எடப்பாடி … Read more

ரசிகர்களின் இதயத்தை நொறுக்கிய ரன்அவுட்! உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய இந்தியா

மகளிர் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. முதல் அரையிறுதி போட்டி கேப்டவுனில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதின. முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக மூனே 54 ஓட்டங்களும், லன்னிங் 49 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதன் பின்னர் கைகோர்த்த கேப்டன் … Read more

டெண்டர் முறைகேடு: தமிழக அரசின் மனு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

சென்னை: டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.மனுமீதான வழக்கை சென்னை உயர்நிதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு தொடர்பாக எஸ்.பி.வேலுமணி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீதான ரூ.800 கோடி முறைகேடு விவகாரம் மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில், அவர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை … Read more

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?.. மக்களிடம் சென்று நீதி கேட்போம்: ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

சென்னை: நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?..  மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்கும் பணியை விரைவில் தொடங்குவோம் என ஓ.பன்னீர் செல்வம் கூறினார். அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல, ஆணவத்தின் உச்சத்தில் பழனிச்சாமி இருக்கிறார். ஆணவத்தை அடக்கும் சக்தி அதிமுக தொடர்களுக்கு உண்டு என ஓபிஎஸ் கூறினார்.

டிஜி யாத்ரா மூலம் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் பயனடைந்துள்ளனர் – மத்திய அரசு

புதுடெல்லி, 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வரை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் டிஜி யாத்ரா முறையைப் பயன்படுத்தியுள்ளனர் என்று உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிஜி யாத்ரா என்பது முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமான நிலையங்களில் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான பயோமெட்ரிக் முறையாகும். பயணச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை பல்வேறு நிலைகளில் சரிபார்த்தலின் அவசியமின்றி நெரிசல் இன்றி பயணிகளுக்கு இது வசதியான … Read more

`இந்தியாதான் எனக்கு எல்லாம்!' – கனடா நாட்டுப் பாஸ்போர்ட்டை துறக்க முடிவு செய்த அக்‌ஷய் குமார்

பிரபல பாலிவுட் நடிகரான  அக்‌ஷய் குமார் சில வருடங்களுக்கு முன்பு கனடா நாட்டு குடியுரிமையைப் பெற்றிருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏ.என்.ஐ ஊடகம் பிரதமர் மோடியை நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்திருந்தது. அதில் பிரதமர் மோடியை அக்‌ஷய் குமார்தான் நேர்காணல் செய்திருந்தார். ஆனால் அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அக்‌ஷய் குமார் வாக்களிக்கவில்லை. இதற்குக் காரணம் அவர் கனடா நாட்டுக் குடியுரிமையை வைத்திருந்ததுதான் என்று கூறப்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டார். பிரதமர் மோடி, அக்‌ஷய் குமார் அப்போது அது … Read more

கனேடிய குடியுரிமை தொடர்பில் பிரபல இந்திய நடிகர் எடுத்துள்ள முடிவு

இந்திய நடிகரான அக்‌ஷய் குமார், தனது கனேடிய குரியுரிமையை துறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அக்‌ஷய் இந்தியரா கனேடியரா? பிரபல இந்திய நடிகரான அக்‌ஷய் குமாருடைய குடியுரிமை குறித்து அவ்வப்போது சர்ச்சை எழும். அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து கடந்த ஆகத்து மாதம் முதன்முறையாக மனம் திறந்தார் அக்‌ஷய்.  நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான் ஒரு இந்தியன், எப்போதுமே … Read more

தமிழக தலைமை தகவல் ஆணையர் நியமனம் தொடர்பாக மார்ச் 3-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 3ம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழக தலைமை தகவல் ஆணையர் உள்பட நான்கு ஆணையர்களின் பதவிகள் காலியாக உள்ளது. இடத்துக்கு, அதிகாரிகள் மட்டத்தில் கடுமையலான போட்டி நிலவி வருகிறது. தலைமை தகவல் ஆணையர் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட சிலர் போட்டியில் உள்ளனர். இந்தப் பதிவகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலுடன் அடங்கிய விரிவான அறிக்கையை … Read more