தலைப்பு செய்திகள்
Revolt RV400 Electric Bike bookings reopen: மீண்டும் ரிவோல்ட் RV400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு முன்பதிவு துவக்கம்
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு மீண்டும் முன்பதிவை ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது. ரிவோல்ட் மோட்டார்ஸ் RV400 எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது. இந்த பைக்கின் முன்பதிவு செய்ய கட்டணமாக ரூ. 2,499 வசூலிக்கப்படுகின்றது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் மார்ச் 31, 2023 முன்பாக டெலிவரிகளைப் பெறுவார்கள் என இந்நிறுவனம் கூறியுள்ளது. ரிவோல்ட் நிறுவனத்தை RattanIndia Enterprises நிறுவனத்தால் முழுமையாக கையகப்படுத்தப்பட்டது. ரிவோல்ட் RV400 45 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ … Read more
`அஜித்குமாருக்கு நன்றி!' – பி.எம்.டபிள்யூ பைக் வாங்கிய மஞ்சு வாரியர்
கனவுகளை விரட்டிப் பிடிக்க வயது என்றுமே தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் துணிவோடு உங்களது கனவுகளை நிஜமாக்கலாம். அப்படி தன்னுடைய ரைடர் கனவை தற்போது நிறைவேற்றி இருக்கிறார், மலையாள நடிகை மஞ்சு வாரியர். மஞ்சு வாரியர் 44 வயதான மஞ்சு, கொச்சியில் உள்ள ஷோரூம் ஒன்றில் பி.எம்.டபிள்யூ பைக்கை வாங்கி இருக்கிறார். அதற்கான செயல்முறைகளை முடித்து மகிழ்ச்சியுடன் அதனை ஓட்டும் வீடியோவை, தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “தைரியத்துடன் எடுத்து வைக்கும் ஒரு சிறிய அடியும், எப்போதும் … Read more
75 வயது முதியவருக்கு இரண்டாவது திருமணம்: பரிசு தொகையை வாரி வழங்கிய மாநில அரசு
கடந்த சில ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்த மோகனியா (65) என்ற மூதாட்டியும், 75 வயதான பகவான்தின் என்ற முதியவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 75 வயதில் இரண்டாவது திருமணம் மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தின் தியோரி கிராமத்தை சேர்ந்த 75 வயதான பகவான்தின் என்ற முதியவர் அதே பகுதியை சேர்ந்த மோகனியா என்ற 65 வயது மூதாட்டியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். மாற்றுத்திறனாளியான பகவான்தின் ஏற்கனவே 50 ஆண்டுகளுக்கு முன்பு … Read more
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…
சென்னை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழ்நாடு மீனவர் களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், அடித்து விரட்டுவதும், கைது செய்வதும், தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாகி இருக்கிறது. இதுதொடர்பாக பல முறை மீனவர்களும், தமிழ்நாடு அரசும் மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால், மீனவர்கள் … Read more
நிலக்கரி சுரங்கங்களை முழு திறனுடன் செயல்படுத்த ஒன்றிய அரசு ஆணை
டெல்லி: கோடை கால மின் தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரி சுரங்கங்களை முழு திறனுடன் செயல்படுத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் கோடி காலங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். மின் தேவையை அதிகரிக்கும் என்பதால் அதை பூர்த்தி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜோ பைடனின் `சர்ப்ரைஸ்’ விசிட் – உக்கிரமாகப் போகிறதா ரஷ்யா – உக்ரைன் மோதல்?!
“கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்…” ‘நேட்டோ’ படையில் இணையப்போவதாக உக்ரைன் அறிவித்து, மேலும் அதற்கான முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதற்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்து வந்தார். அப்போது அவர், “உக்ரைன் தனது முடிவை மாறிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்த நாடு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார். ஜோபிடனின் சர்ப்ரைஸ் உக்ரைன் விசிட் … Read more
அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அலற விட்ட பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…
கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் அந்தரங்க புகைப்படங்களை பெண் ஐபிஎஸ் அதிகாரி இணையதளத்தில் பதிவிட்ட விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த இரண்டு அதிகாரிகளும் இலாக்கா இல்லாத அதிகாரிகளாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநில அறநிலையத்துறை இயக்குனராக இருப்பவர் ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். இவர் மீது தனிப்பட்ட மற்றும் பணி தொடர்பான பல்வேறு புகார்களை அம்மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனராக உள்ள ரூபா டி முட்கில் ஐ.பி.எஸ். … Read more
டெல்லி ஜே.என்.யூ வில் தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கு தொடங்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: டெல்லி ஜே.என்,யூ வில் தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கு விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முதலமைச்சர் தலைமையில் ஆதரவாய் களமாட இளைஞர் அணியும், மாணவர் அணியும் துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.