12 சிவிங்கி புலிகள் விமானத்தில் இந்தியா வந்தன| 12 chivingi tigers arrived in India by plane

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போபால்: தென்காப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் விமானத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டன. கடந்தாண்டு ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் ஏற்படுத்திய ஒப்பந்த படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என எட்டு சிவிங்கிகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியது, இந்த சிவிங்கிகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று ( பிப்.,18) தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானப்படை விமானம் மூலம் 5 பெண் … Read more

அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்பெறும் பட்ஜெட்

சிக்கமகளூரு, பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கா்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (நேற்று) தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் வரவேற்கக்கூடியது. சிக்கமகளூரு மாவட்டத்துக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். தினத்தந்தி Related Tags : அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்பெறும் பட்ஜெட் A budget that … Read more

“வில் அம்பு சின்னத்தை மீட்டிருக்கிறேன்: இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி'' – ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவின் தேர்தல் சின்னமான வில் அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் , மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு ஒதுக்கியிருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் கமிஷனின் இந்த தீர்ப்பு உத்தவ் தாக்கரேயை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நிலையில், `இது ஜனநாயக படுகொலை’ என்று உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, `உண்மை வெற்றி பெற்றிருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி’ எனத் தெரிவித்திருக்கிறார். ஜனநாயக படுகொலை என்று உத்தவ் தாக்கரே … Read more

துருக்கி சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படை நாடு திரும்பியது…

டெல்லி: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மீட்புபணிக்கு சென்ற இந்திய தேசிய பாதுகாப்பு படையினர், 11 நாட்களுக்கு பிறகு தாயகம் திரும்பினர். பிப்ரவரி 6-ம் தேதி துருக்கியின் தெற்கு, மத்திய பகுதிகள் மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவுகோலில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால்  ஏராளமான கட்டிங்கள் இடிந்து நொறுங்கியது.  இந்த நிலநடுக்ம் காரணமாக, துருக்கியில் 38,000 பேர், சிரியாவில் 6,000 பேர் என இதுவரை 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். பூகப்ப இடிபாடுகளில் சிக்கியவர்களை … Read more

தி.மலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை மார்ச் 3 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை மார்ச் 3 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியானாவில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிஃப், கூட்டாளி ஆசாத்துக்கு மார்ச் 3 வரை காவல் விதிக்கப்பட்டுள்ளது. இருவரையும் 15 நாள் சிறையில் அடைக்க திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டார். திருவண்ணாமலையில் பிப்ரவரி 11ம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

கொங்கு மண்டலம், ரவுடிகளுக்காவது கோட்டையா இருக்கட்டும்னு ஆளுங்கட்சி நினைச்சிடுச்சோ என்னவோ?| Speech, interview, report

கோவை தெற்கு தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் அமர்ந்து விட்டது. கோவையில் எஸ்.பி., அலுவலகம், கலெக்டர் அலுவலகம் முன் படுகொலைகள் நடக்கின்றன. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. கொங்கு மண்டலம், நமக்கு தான் கோட்டையாக மாறல… ரவுடிகளுக்காவது கோட்டையா இருக்கட்டும்னு ஆளுங்கட்சி நினைச்சிடுச்சோ என்னவோ? புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: பிரபாகரன் ஒரு வரலாற்று புருஷர். அவர் ஒரு … Read more

மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விரைந்து முடிக்க சட்ட நடவடிக்கை-பசவராஜ் பொம்மை

பெங்களூரு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:- மகதாயி நதி நீரில் கர்நாடகம் 3.90 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை கலசா-பண்டூரி நல திருவு யோஜனா திட்டத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மகதாயி தீர்ப்பாயம் கூறியிருக்கிறது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளிக்க இருக்கிறது. விரைவில் ஒப்புதல் கிடைத்தால் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை … Read more

திருமணம் மீறிய உறவு: கண்டித்தும் கேட்காத மனைவி; கொலைசெய்த கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை – நடந்தது என்ன?

சென்னை, அண்ணாநகர் மேற்கு புதுகாலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (34). மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இவர் அம்மு (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். சீனிவாசனுக்கு அதிக மதுப்பழக்கம் இருந்திருக்கிறது. தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு வரும் சீனிவாசன், அம்முவுடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அம்மு கொலை இந்த நிலையில், அம்முவுக்கு அவரின் உறவினர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே நெருக்கம் அதிகரித்து, திருமணம் … Read more

கோல் அடிக்காமலேயே அல் நஸரை வெற்றி பெற வைத்த ரொனால்டோ! மெஸ்சியை விட சிறந்தவர் இவர் தான்..கொண்டாடும் ரசிகர்கள்

சவுதி ப்ரோ லீக் தொடரின் நேற்றைய போட்டியில் அல்-நஸர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அல்-டாவ்வுன் அணியை வீழ்த்தியது. அல்-நஸர் அபாரம் கிங் சவுத் யூனிவர்சிட்டி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், 17வது நிமிடத்தில் எதிராணியிடம் இருந்து பந்தை பறித்த ரொனால்டோ, சக அணி வீரர் அப்துல் ரஹ்மானுக்கு பாஸ் செய்தார். துரிதமாக செயல்பட்ட ரஹ்மான் அபாரமாக கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து அல்-டாவ்வுன் அல்வரோ மெட்ரான் 47வது நிமிடத்தில் மிரட்டலாக கோல் அடித்தார். இதனால் … Read more

சென்னையில் 96 உள்பட 254 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள்! தெற்கு ரயில்வே

சென்னை:  மாநில தலைநகர் சென்னையில் 96 உள்பட மாநிலம் முழுவதும் 254 தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் கிஆர் கோடு வசதியுடன், பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுவ இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. கடைசி நேர பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில்,  முன் பதிவில்லாத ரெயில் டிக்கெட்டுகளை சுலபமாக பெற ரயில்வே, தானியங்கி விற்பனை டிக்கெட் இயந்திரங்களை நிறுவி வருகிறது. தற்போது சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றிரண்டு, டிக்கெட் விற்பனை எந்திரங்கள் ‘‘கியூ … Read more