அசாம்: நெரிசல் மிகுந்த சந்தையில் திடீர் தீ விபத்து.. 150 கடைகள் தீயில் முற்றிலும் நாசம்

ஜோர்ஹாட், அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள சந்தையில் வியாழக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 150 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜோர்ஹாட் நகரின் மையப்பகுதியில் உள்ள சௌக் பஜாரில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்க 25 தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றன. தீயை இன்னும் கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் தீயானது நெரிசல் … Read more

இது இங்கிலாந்து செய்த பைத்தியக்காரத்தனம்! முன்னாள் வீரர் கூறிய கருத்து

முதல் நாளிலேயே இங்கிலாந்து டிக்ளேர் செய்ததை முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டி, பே ஓவல் மைதானத்தில் தொடங்கியது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 58.2 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 89 ஓட்டங்களும், டக்டெக் 84 ஓட்டங்களும் எடுத்தது. நியூசிலாந்து … Read more

மின் கம்பங்களில் உள்ள தனியார் கேபிள் டிவி ஒயர்களை அகற்ற மின்வாரியம் உத்தரவு

சென்னை: சென்னை போன்ற பெருநகரங்களில் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்கப்பங்களின் மூலம் தனியார் நிறுவன‘கேபிள் டிவி வயர்கள் இழுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல இடங்களில் மின்கம்பங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை சரி செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில்,  மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகைகளை 15 நாட்களுக்குள் அகற்ற மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,   மனித உயிர்களுக்கு ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க, கேபிள் டெலிவிஷன் … Read more

மேட்டூர் அருகே காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் மீட்பு

பெங்களூரு: மேட்டூர் அருகே காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் மீனவர் ராஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பாலாற்றில் மிதந்த மீனவர் ராஜாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவு

ஜம்முகாஷ்மீர், ஜம்முகாஷ்மீரின் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கி.மீ. தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டது. அதிகாலை 5.01 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : ஜம்மு காஷ்மீர் நிலநடுக்கம் Jammu and Kashmir … Read more

ஈரோடு: "குடும்ப வாரிசு அரசியலுக்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' – இபிஎஸ் காட்டம்

ஈரோடு மாவட்டம், கனிராவுத்தர் குளம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து இரண்டாம் நாளாக பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசியது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 21 மாதங்களாகியும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஒரு பணியை கூட செய்யவில்லை. ஆனால் இதே தொகுதியில் ரூ.484 கோடி செலவில் ஊராட்சிக்கோட்டையில் இருந்து 28 கி.மீ. குழாய் மூலமாக நல்ல குடிநீரை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினோம். இங்குள்ள கனிராவுத்தர் குளம் ரூ.6 கோடியில் புனரமைக்கப்பட்டது. … Read more

100 யார்டுக்கு 2000 ரஷ்ய வீரர்கள்…உக்ரைனுக்குள் அனுப்பப்படும் மனித ஜாம்பி அலைகள்!

உக்ரைனில் ஒவ்வொரு 100 யார்டுகளுக்கும் ரஷ்யா 2000 ராணுவ வீரர்களை இழப்பதாக நோட்டோ தெரிவித்துள்ளது. நோட்டோ தகவல் உக்ரைனிய படைகள் மீதான ரஷ்யாவின் மிருகத்தனமான தாக்குதல்களில் ஒவ்வொரு 100 யார்டு பரப்பளவுக்கும் ரஷ்ய படைகள் 2000 வீரர்களின் உயிர்களை இழக்கின்றன என நோட்டோ உளவுத்துறை அறிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன. ரஷ்யா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்துகிறது, பெரும்பாலான மக்கள் போதிய பயிற்சி பெறாதவர்களாகவும், வசதியற்றவர்களாகவும் உள்ளனர். AFP via Getty Images இதன் விளைவாகவே ரஷ்யா … Read more

சென்னை வரும் அரசு பேருந்துகள் இனி தாம்பரம் வழியாக கோயம்பேடு வர உத்தரவு…

சென்னை: வெளியூர்களில் இருந்து சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இனிமேல் தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என  போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னைக்கு வரும் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தாம்பரம் ரூட்டை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.. இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம்,கிண்டி, அசோக்பில்லர், வடபழனி ஏரியாக்களில் இறங்க வேண்டிய பயணிகள் நேரடியாக கோயம்பேடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்த பிரச்னைக்கு தற்போது போக்குவரத்துத்துறை முடிவு … Read more