திருமணம் தாண்டிய உறவு; தட்டிக்கேட்ட கணவனை, மதுவில் விஷம் கலந்து கொலைசெய்த மனைவி!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுகுமார். இவருக்குத் திருமணமாகி கவிதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். சுகுமார் செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் ஒரு கோழி இறைச்சிக் கடையில் வேலைபார்த்து வந்தார். அதேபோல, கவிதாவும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். சுகுமார் இந்த நிலையில், கவிதா வேலை செய்யும் இடத்தில் உடன் பணியாற்றும் ஒருவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணம் தாண்டிய உறவாக மாறியிருக்கிறது. இதனை அறிந்துகொண்ட சுகுமார், கவிதாவைக் கண்டித்திருக்கிறார். அதனால், தம்பதிக்குள் … Read more