தேர்தல் அலுவலருக்கு ரூ.1கோடி பரிசு: ஈரோடு கிழக்கு தொகுதியை அதகளப்படுத்தும் போஸ்டர்

ஈரோடு கிழக்கு தொகுதியில்  வாக்காளர்களுக்கு இலவசங்கள், பணம் வாரி இறைக்கப்பட்டு வரும் நிலையில், அதுதொடர்பாக ராஜேஸ் கண்ணன் என்பவர் ஒட்டியுள்ள  போஸ்டர் அதகளப்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்ளிலும் வைரலாகி வருகிறது. நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு நாளை மறுதினம்  நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) முடிவடையவுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர் உள்பட அரசியல் கட்சியினரும் இறுதிக்கட்ட, பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி யுள்ளனர். … Read more

ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனை: சோனியா காந்தி

டெல்லி: ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளதாக எம்.பி. சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த நாட்டுக்கும் காங்கிரசுக்கும் இது சவாலான நேரம் என தெரிவித்த சோனியா காந்தி பாஜக, ஆர்.எஸ்.எஸ். சேர்ந்து நாட்டில் உள்ள நிறுவனங்களை நாசமாக்கி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

தேர்தல் அரசியலில் இருந்து எடியூரப்பா ஓய்வு

பெங்களூரு- உணர்ச்சி பூர்வமாக… கர்நாடக சட்டசபையின் கூட்டு மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கடந்த 17-ந் தேதி கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். இந்த நிலையில் 15-வது சட்டசபையின் 15-வது கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை கூடியது. கூட்டம் … Read more

ஐ.நா அமைதி தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள்… ரஷ்யாவுக்கு உறுதுணையா?!

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கியது. ஓராண்டாகியும் போர் முடியவில்லை. இரு நாடுகளிலும் பல லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் அப்பாவி மக்கள் பலரும் போருக்கு இரையாகியுள்ளனர். மேலும் பல லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் போர் இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்ய ராணுவத்தை உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறி  போரை நிறுத்துவது தொடர்பாக  தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பேசிய … Read more

குரூப் 2 பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: குரூப் 2 பிற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2 பிரதான தோ்வு இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு குளறுபடிகள் காரணமாக, தேர்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது.  சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள , சில மையங்களில் தேர்வர்களின் பதிவு எண்களில் குளறுபடி இருந்ததால் சரியான நேரத்தில் தொடங்க முடியவில்லை. பதிவு எண்கள் சரிசெய்யப்பட்ட பிறகு தேர்வு தொடங்கியது. இதனால் தாமதமானது. … Read more

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதி! வைரலாகும் புகைப்படம்

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.  கைலாசா திருவண்ணாமலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து பசுபிக் பெருங்கடலில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா எனப் பெயரிட்டு விஸ்வரூபம் எடுத்தவர் சாமியார் நித்யானந்தா. சமீபத்தில் அமெரிக்காவின் நெவார்க் நகரம் கைலாசாவை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியானது.    ஐக்கிய நாடுகள் சபை கூட்டம்  அதன்படி கடந்த 22-ந்திகதி ஜெனிவாவில் ஐக்கிய … Read more

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 29-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலை தொடரும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை குறைந்தபட்சம் 22 டிகிரி, அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை பொது இடத்தில் மிரட்டி மன்னிப்பு கேட்கவைத்த கும்பல் – கோவாவில் அதிர்ச்சி

பனாஜி, செக் குடியரசை சேர்ந்த பிரபல யூடியூபர் டவுக் அஹுண்ட்சடா இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து வருகிறார். அவர் பதிவு செய்யும் வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டவுக் கோவாவின் கலங்ஹுடி பகுதிக்கு சென்ற வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பகுதிக்கு சென்ற டவுர் அங்கிருந்த ஒரு ஓட்டலில் சிலர் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தார். நியூசிலாந்து – பாகிஸ்தான் … Read more

ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கான வயது 6! – ப்ளஸ், மைனஸ் சொல்லும் கல்வியாளர்கள்!

குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கான வயதை 6 ஆக உயர்த்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதிலிருக்கிற நன்மை, தீமைகள் குறித்து அறிந்து கொள்ள கல்வியாளர்கள் ராஜம்மாள் மற்றும் சோமசுந்தரம் ஆகியோரிடம் பேசினோம். கல்வி கல்வியாளர் ராஜம்மாள் அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை! தயார் நிலையில் இருக்கின்றனவா அரசுப் பள்ளிகள்? கல்வியாளர் ராஜம்மாள் பேசுகையில், “வெளிநாடுகளில் கே.ஜி. வகுப்புகளில் விளையாட மட்டுமே செய்கிறார்கள் குழந்தைகள்.  நம் நாட்டு கே.ஜி. வகுப்புகளிலும் குழந்தைகள் விளையாட மட்டுமே செய்ய வேண்டும். சில பள்ளிக்கூடங்களில் மட்டுமே கே.ஜி.யில் எழுத … Read more