பாரம்பரிய உடையில் உற்சாகமாக சவுதியில் கொண்டாடிய ரொனால்டோ! அல் நஸர் வெளியிட்ட வீடியோ

போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியா நிறுவன தினத்தை உற்சாகமாக கொண்டாடினார். Foundation Day 38 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப் அணியில் விளையாடி வருகிறார். பிப்ரவரி 22ஆம் திகதியை சவுதி அரசு ஸ்தாபிக்கப்பட்டதை Foundation Day என நினைவுகூர்கிறது. இதற்கான கொண்டாட்டம் அல் நஸரின் சொந்த மைதானமான மிர்சூல் பூங்காவில் நடைபெற்றது. நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியின் பாரம்பரிய உடை அணிந்து Foundation Day … Read more

பாஜகவுக்கு எதிராக வரும் 28-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்! திருமாவளவன்

சென்னை: பாஜகவுக்கு எதிராக வரும் 28-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர்  திருமாவளவன் அறிவித்து உள்ளார். மேலும், பெண்களை மிரட்டுகின்றனர் என காயத்ரி ரகுராம் சர்ச்சையை  குறிப்பிட்டும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து சென்னையில் பிப்ரவரி 28 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இன்று (22.02.2023) கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் … Read more

கோவையில் தஞ்சமடைந்துள்ள காட்டு யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க முயற்சி

கோவை: கோவை பேரூரில் தஞ்சமடைந்துள்ள மக்னா காட்டு யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். ஓய்வு பெற்ற மருத்துவர் மனோகரன், சதாசிவம், சுகுமார், பிரகாஷ் ஆகியோர் யானைக்கு மயக்க மருந்து செலுத்த ஆயுத்தமாகியுள்ள நிலையில் நொய்யல் ஆற்றுப்பகுதிக்கு 120 பேர் கொண்ட வன ஊழியர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்களும் சென்றுள்ளனர்.

மதுபானக் கொள்கை முறைகேடு: கெஜ்ரிவால் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை| Liquor Policy Irregularity: Enforcement Directorate probes Delhi Chief Minister Kejriwals aide

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லி மதுபானக் கொள்கை முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறை இன்று(பிப்.,23) விசாரணை நடத்தினர். புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கும் இந்த புதிய கொள்கை குறிப்பிட்ட சில வியாபாரிகளுக்கு சாதகமாக … Read more

இந்தியாவில் மேலும் 95 பேருக்கு தொற்று

புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2000 ஆக பதிவாகியுள்ளது.இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,763 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,52,687 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,63,60,778 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,3947 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags : இந்தியா

நிலநடுக்கத்தில் உயிரிழந்து குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நபர்: திடீரென நிகழ்ந்த அற்புதம்…

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஒருவருடைய உடல் இரண்டு நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தபின்னரும், அவர் திடீரென உயிர் பெற்றெழுந்த அற்புதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இரண்டு நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடல் நிலநடுக்கத்தல் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கிடையே இருந்து அஹமது (Ahmed al-Maghribi) என்பவரின் உயிரற்ற உடல் மீட்கப்பட்ட நிலையில், அவரை முறைப்படி அவரது உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக, அவரது உடல் மருத்துவமனை ஒன்றில் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்துள்ளது. இரண்டு நாட்களுக்குப் பின், அவரது … Read more

“தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது”  – ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும்! எடப்பாடி பழனிச்சாமி

மதுரை: “தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது”   என கூறிய எடப்பாடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும் என நம்பிக்கை தெரிவித்தார். மதுரை திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலை வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதிமுக பொதுக்குழு தொடர்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானபோது,  எடப்பாடி பழனிசாமி மதுரையில் இருந்தார். மதுரை திருமங்கலத்தில் முன்னாள் … Read more

பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேச்சு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் விதிமீறல்களை தடுக்காமல் பறக்கும் படையும், அதிகாரிகளும் வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளு பேரன் காங்கிரசில் இருந்து விலகல்

புதுடெல்லி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். பாரம்பரிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுபற்றி அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பி உள்ளார். அதன்படி, கடந்த 2001-ம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் … Read more