வாணி ஜெயராம் மரணம் தொடர்பான விசாரணை… தலையில் காயம் காரணமாகவே உயிரிழப்பு…

இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் பாடி பிரபலமடைந்தவர் பின்னணி பாடகி வாணி ஜெயராம். 78 வயதாகும் வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வாணி ஜெயராம் உடலைக் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டுசென்றனர். தலையில் ஏற்பட்ட காயமே வாணி ஜெயராம் உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. படுக்கை அருகில் … Read more

நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நெல்கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.நெற்பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிகளில் தளர்வுகளை வழங்க வேண்டும். 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். முதிர்ச்சியடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை தளர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

`இந்து அறநிலையத்துறையில் வேலை கன்ஃபார்ம்!' – கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பல் சிக்கியது எப்படி?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவர் தன் மகளுக்கு அரசு வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்திராஜ் மகன் சரவணக்குமார் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை பெட்டிக் கடையில் மது விற்பனை! இது கோவை ஸ்டைல்! சரவணக்குமார், “நான் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறேன். இந்து சமய அறநிலையத்துறையில் அரசு வேலை வாங்கித் தருகிறேன்” என ஆசைவார்த்தைக் கூறியிருக்கிறார். தன் கூட்டாளிகளான ஈரோடு மாவட்டத்தைச் … Read more

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை வாணி ஜெயராம் பாடியுள்ளார். சென்னையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த வாணி ஜெயராம் நேற்று வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வாணி ஜெயராமின் மரணம் இயற்கை மாறானதாகவும், மர்ம மரணம் எனவும் காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியது. பிரேத பரிசோதனை அறிக்கை இந்த … Read more

பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி… காவல்துறை மரியாதையுடன் இன்று பிற்பகல் அடக்கம்…

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். வாணி ஜெயராம் தமிழ் தவிர இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சுமார் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் இவருக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தலையில் காயமடைந்த நிலையில் உயிரிழந்த நிலையில் இவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் நேரில் … Read more

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி தொடங்கியது

சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி தொடங்கியது.  சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள வீட்டின் அருகே போலீசார் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பெசன்ட் நகர் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.   மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சீனாவுடன் தொடர்பு:138 சூதாட்ட செயலிகளுக்கு தடை| India Bans, Blocks 138 Betting Apps, 94 Loan Lending Apps with Chinese links on Urgent Basis

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி:சீனாவுடன் உள்ள தொடர்பு உள்ள 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளுக்கு உடனடியாக தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த ஆலோசனைகளை தொடர்ந்து, சீனாவுடன் தொடர்பில் உள்ள 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை உடனடியாக தடுக்கவும், அதற்கு தடை விதிக்கவும் அவசர நிலை அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் … Read more

“டெல்லியின் நிதியைக் குறைத்து, தாலிபன்களுக்கு வழங்குவதா?!" – அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்

2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இந்த மாதம் 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், வெளியுறவு அமைச்சகத்துக்கு (MEA) மொத்தம் ரூ.18,050 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.17,250 கோடியைவிட சுமார் 4.64 சதவிகிதம் அதிகம். மேலும், இதிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி நிதி தொகுப்பாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டது. தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, அந்த … Read more

138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் நடவடிக்கை: ஒன்றிய அரசு

டெல்லி: 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 93 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியது. உடனடி மற்றும் அவசர நடவடிக்கையாக சூதாட்ட செயலிகளை தடை செய்ய ஒன்றிய அரசு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடத்தையில் சந்தேகம்; நண்பனுடன் சேர்ந்து மனைவியைக் கொன்ற நபர் – காட்டிக் கொடுத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

மும்பை விராரில் வசிப்பவர் வைபவ் பாட்டீல். இவர் மனைவி பிரியங்கா பாட்டீல். மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். இவர்கள் வசித்த வீடு கடந்த சில நாள்களாகப் பூட்டப்பட்டிருந்தது. அதோடு அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, வீட்துக்குள் பிரியங்கா இறந்துகிடந்தார். அவர் உடலில் எந்தவித காயமும் இல்லை. அதையடுத்து, அவரின் உடலை போலீஸார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி … Read more