இன்று வெளியாகிறது தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை

சென்னை: உலக மகளிர் தினமான இன்று தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் தங்கள் குறிக்கோள்களை அடைவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெறவுள்ளன. மகளிர் மேம்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம் பெறும் … Read more

சென்னை அண்ணா சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 4 பேர் கைது

சென்னை : சென்னை அண்ணா சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட ராகுல், கிருஷ்ண வம்சி, அஜய், லோகேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முன்னாள் காதலன் துன்புறுத்தல், முகம், உடலில் காயங்கள்; புகைப்படங்களுடன் நடிகை உருக்கமான பதிவு!

தமிழில் `விஷமக்காரன்’, `எங்க பாட்டன் சொத்து’, `கே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அனிகா விக்ரமன். இவர், தன்னை முன்னாள் காதலன் தாக்கியதாக சமூக வலைதளம் மூலம் பரபரப்பான குற்றச்சாட்டைப் பதிவிட்டுள்ளார். அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நடிகை அனிகா இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப்பதிவில், “நான் அனூப் பிள்ளை என்பவரை சில ஆண்டுகளாகக் காதலித்தேன். அவர் என்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கடுமையாகத் துன்புறுத்தினார். என் வாழ்வில் இப்படி ஒருவரை … Read more

உலகளவில் 68.08 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.06 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.37 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச்-08: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 291-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தார்ப்பாயால் மூடப்பட்ட அலிகார் நகர மசூதி| Aligarh city mosque covered with tarpaulin

அலிகார், வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், உத்தர பிரதேசத்தின் அலிகாரில் உள்ள மசூதியின் மேல், தார்ப்பாய் போர்த்தி மூடப்பட்டுள்ளது. இது குறித்து, மசூதியின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஹாஜி முகமது இக்பால் கூறுகையில், “நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், மசூதியில் யாரும் வண்ணப் பொடிகளை துாவிடாதவாறு, மசூதியை தார்ப்பாய் வைத்து மூடுகிறோம். எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழக்கூடாது என்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார். அலிகார், வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாக … Read more

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயில்

பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயில், புதுச்சேரியில் அமைந்துள்ளது. ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம் என்பது பொருளாகும். முன்னொரு யுகத்தில் அரசு, ஆல், வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து வித மரங்கள் அடர்ந்த வனமாக இந்தப் பகுதி விளங்கியிருக்கிறது. ரிஷிகளும் முனிவர்களும் இந்தப் பிரதேசத்தில் குடில்கள் அமைத்துத் தங்கி, தவமும் யாகங்களும் நடத்திவந்துள்ளார்கள். ராம – ராவண யுத்தத்தில் ராவணன் தோல்வி அடையப்போகும் … Read more

13 கோடி மதிப்பிலான மதுபானங்கள்…ரகசிய அறையில் இருந்து திருடிய மெக்சிகோ அழகி!

ஸ்பெயினின் நட்சத்திர விடுதியில் இருந்து 13 கோடி ரூபாய் மதுபாட்டில்களை திருடிய மெக்சிகோ நாட்டு அழகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருட்டில் ஈடுபட்ட அழகி ஸ்பெயினில் தென்மேற்கு பகுதியின் கேசர்ஸ் நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில், 19ம் நூற்றாண்டை சேர்ந்த 3 கோடி மதிப்பிலான பழமையான மதுபான பாட்டில் மற்றும் பல்வேறு ஒயின் வகைகள் ரகசிய அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இதனை திருட திட்டமிட்ட மெக்சிகோ நாட்டை சேர்ந்த முன்னாள் அழகி பிரிசிலா லாரா … Read more

கேரள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாமல் திணறும் வீரர்கள்| Soldiers struggle to put out fire at Kerala garbage dump

கொச்சி, கேரளாவில் மிகப்பெரிய குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு ஐந்து நாட்களாகியும், அதை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். கேரளாவின் கொச்சியில் உள்ள பிரம்மபுரத்தில், 16 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. கடந்த 2008ல் துவங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள இந்த குப்பைக் கிடங்கில், நாள்தோறும் ஒரு லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவற்றில், 1 சதவீதம் மட்டுமே மறுசுழற்சிக்கு எடுக்கப்படுவதாகவும், மீதமுள்ள 99 சதவீத கழிவுகள் இங்கேயே உள்ளதாகவும் கூறப்படுகிறது. … Read more