நாகாலாந்தில்  பாஜக கூட்டணிக்கு சரத் பவார், நிதிஷ் குமார் கட்சிகள்  ஆதரவு… காங்கிரஸ் அதிர்ச்சி…

கோகிமா: நாகலாந்து மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கு, எதிர்க்கட்சிகளான சரத் பவார், நிதிஷ் குமார் கட்சிகள்  ஆதரவு தெரிவித்து உள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்ஈடுத்தி உள்ளது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது. இதையடுத்து நாகலாந்து முதல்வர் தலைமையிலான ஆதரவு கட்சியினர், … Read more

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்த 2 பேருக்கு அபராதம் விதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்த பூலையா, மகாராஜன் ஆகியோருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாலில் கலப்படம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலப்படம் செய்யப்பட்ட 1,500 லிட்டர் கலப்பட பாலை பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

2023 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் விற்பனைக்கு வந்தது

125சிசி சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கில் Xtec ப்ளூடூத் சார்ந்த கனெக்ட்டிவ் வசதிகளை பெற்ற மாடல் ₹ 85,068 ஆக விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. புதிய மாடல் OBD 2 சார்ந்த என்ஜின் மேம்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு ஆப்ஷன்களையும் பெற்றுள்ள புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கில் கனெக்ட்டிவ் நுட்பம் சார்ந்த வசதிகளின் மூலம் முழுமையான டிஜிட்டல் சார்ந்த கிளஸ்ட்டர் வாயிலாக பல்வேறு அறிக்கைகள் மற்றும் … Read more

பிரித்தானியாவில் மூன்று இளம்பெண்கள் மாயமான விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: நொறுங்கிப்போன குடும்பங்கள்

பிரித்தானியாவில் வேல்ஸ் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் மாயமான 3 இளம்பெண்கள் உட்பட ஐவர் குழுவில் மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த நிலையில் நியூபோர்ட் பகுதியில் அமைந்துள்ள Muffler இரவு விடுதிக்கு சென்ற Sophie Russon(20), Eve Smith(21), மற்றும் Darcy Ross(21) ஆகியோரே ஆண்கள் இருவருடன் மாயமானதாக தகவல் வெளியானது. @getty குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த பொலிசார், தற்போது விபத்தில் சிக்கிய வாகனம் … Read more

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கிகள் மீண்டும் இயக்கம்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் வழக்கம்போல் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஒலிமாசை குறைக்கும் வகையில் ரயில் தகவல் அறிவிப்புகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படாமல் இருந்தது.

நல்லிணக்கம் பரவ… இந்து கோவில் வளாகத்தில் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய ஜோடி

சிம்லா, இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் நகரில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரால் தாகுர் சத்யநாராயணன் என்ற கோவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவில் வளாகத்திலேயே விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் மாவட்ட அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்லாமிய ஜோடி ஒன்று இந்த கோவில் வளாகத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தது. இந்நிகழ்ச்சியை காண, முஸ்லிம் மற்றும் இந்து சமூகத்தினர் ஒன்றாக திரண்டு வந்து இருந்தனர். இஸ்லாமிய திருமண நிகழ்வை நடத்தி … Read more

அதானியை நெருக்கும் கடன்… 2024ல் ரூ.16,000 கோடியைத் தர வேண்டும்… என்ன செய்யப் போகிறீர்கள் அதானி?

முழுக்க முழுக்க கடன்களால் மட்டுமே வளர்ந்த கவுதம் அதானி இப்போது கடும் நெருக்கடியில் இருக்கிறார். அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியால் தொடர்ச்சியாகப் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவரும் கவுதம் அதானி, வரும் 2024 -ல் அடுத்தகட்ட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். சுமார் ரூ.2.26 லட்சம் கோடி அளவுக்குக் கடன் வைத்திருக்கும் அதானி குழுமம், வெளிநாடுகளில் வாங்கியக் கடன் மட்டுமே ரூ.82 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கிறது. இதில் பெருமளவு கடன்கள் கடன் பத்திரங்கள் மூலமாகப் பெற்றிருக்கிறார். இந்தக் … Read more

வைரஸ் காய்ச்சல் பரவுவதை தவிர்க்க கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருவம் காய்ச்சலான, Influenza H3N2  வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி னாலே போதும், காய்ச்சல் பரவாது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நாடு முழுவதும், Influenza H3N2  வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், அதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது.  இந்த H3N2 வைரசானது, பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான  H1N1 வைரஸின் திரிபு … Read more