என் வாழ்க்கையின் மோசமான கட்டத்தில் இருந்தேன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து வாழ்க்கையின் மோசமான கட்டத்தை கடந்து வந்ததாக கிறிஸ்டியானோ ரொனால்டோ நேர்காணலில் தெரிவித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கத்தாரில் நடந்த உலகக்கோப்பைக்கு பின் தனது சர்வதேச கால்பந்து வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பரவலாக கூறப்பட்டது. ஆனால் அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடி வந்த அவர், சவுதியின் கிளப் அணியான அல்-நஸர் கிளப் அணிக்கு மாறினார். தற்போது யூரோ 2024 தகுதிச்சுற்று போட்டிகளுக்காக … Read more

உலகளவில் 68.28 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.21 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.57 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச்-23: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: சென்னையில் 306-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ராணுவ வீரர்களுக்கு சிறுதானிய மாவு| Small grain flour for soldiers

புதுடில்லி, :ராணுவ வீரர்களுக்கான, ‘ரேஷனில்’ சிறுதானிய மாவு மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. ராணுவ வீரர்களுக்கான ரேஷனில், அவர்களுக்கு குறைந்த விலையில் பல பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா., அறிவித்துள்ளது. இதையடுத்து, ராணுவ வீரர்களுக்கான ரேஷனில், சிறுதானிய மாவு வழங்குவது மீண்டும் துவங்கப்பட உள்ளது. ராணுவ வீரர்களுக்கு முன்பு சிறுதானிய மாவு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், ௫௦ ஆண்டுகளாக, அதற்கு பதிலாக கோதுமை மாவு வழங்கப்படுகிறது. சிறுதானிய பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சிறுதானிய மாவு … Read more

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரலையில் வாசித்த பெண் நிருபர்..ஓடி வந்து கட்டியணைத்த மகன்..நெகிழ்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பெண் நிருபர் நேரலையில் வாசித்தபோது, அவரது மகன் ஓடி வந்து கட்டியணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் கொலோரடோவில் உள்ள பாடசாலை ஒன்றின் நிர்வாகிகள் இருவரை மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த மாணவரை பொலிஸார் தேடி வரும் நிலையில் கைத்துப்பாக்கியை மீட்டனர். இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊடகங்கள் அங்கு சம்பவத்தை விளக்கிக் கொண்டிருந்தனர். அப்போது … Read more

வரி செலுத்துவோருக்கு பிரத்யேக செயலி அறிமுகம்| Introducing a dedicated app for taxpayers

புதுடில்லி வரி செலுத்துவோருக்கான இலவச ‘மொபைல் போன்’ செயலியை, வருமான வரித் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. வருமான வரித் துறை அறிமுகப்படுத்தி உள்ள, ‘ஏ.ஐ.எஸ்., பார் டேக்ஸ்பேயர்’ என்ற மொபைல் போன் செயலி, ‘கூகுள் ப்ளே ஸ்டோர்’ மற்றும் ‘ஆப்பிள் ஸ்டோரில்’ இலவசமாக கிடைக்கிறது. வரி செலுத்துவோர், ‘பான்’ எண்ணை பயன்படுத்தி இந்த செயலிக்குள் நுழைய வேண்டும். பிறகு, மின்னணு வருமான வரித் தாக்கலின் போது கொடுக்கப்பட்ட மொபைல் போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட … Read more

வெளியேற வேண்டிய நேரம் இது! உலகக்கோப்பையை வென்ற ஜேர்மனி வீரர் 34 வயதில் ஓய்வு அறிவிப்பு

ஜேர்மனி கால்பந்து வீரர் மெசுட் ஓசில் 34 வயதில் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் உலகக்கோப்பை 2014ஆம் ஆண்டு பிரேசில் உலகக்கோப்பையை வென்ற ஜேர்மனி அணியில் முக்கிய பங்கு வகித்தவர் மெசுட் ஓசில். அந்த தொடரில் அல்ஜீரியா அணிக்கு எதிராக ஒரு கோல் அடித்த ஓசில், ஏனைய போட்டிகளில் சக அணி வீரர்கள் கோல் அடிக்க உதவி புரிந்தார். துருக்கியை பூர்வீகமாகக் கொண்ட ஓசில், ஜேர்மனி அணிக்காக 92 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் … Read more

ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் மீது முதல்வர்… அதிருப்தி; பணியில் வேகம் இல்லையென பகிரங்க குற்றச்சாட்டு| CM displeased with Smart City project officials; Public accusation of lack of speed in work

சட்டசபை கேள்வி நேரத்தின்போது எழுந்த விவாதம்: வைத்தியநாதன், காங்.,: லாஸ்பேட்டை தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் டெண்டர் விடப்பட்டும் காலதாமதமாகிறது. அதற்கான கோப்புகள் சுற்றிக் கொண்டே இருக்கின்றது. முதல்வர்: ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைவாக நடக்கவில்லை. அதற்கான காரணம் எல்லோருக்கும் தெரியும். உண்மை சொல்லுவதென்றால் தலைமை செயலர் தலைமையிலான கமிட்டி தான் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் தான் நிதி விஷயத்திலும் முடிவெடுக்க முடியும். நமக்கு அதில் பங்கு இல்லை. அரசுக்கு கோப்பு … Read more

பச்சை குத்துவதால் எதாவது நன்மைகள் உள்ளதா?

பச்சை குத்தல்கள் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை குறிப்பதாக இருக்கும்.   அது அவர்களின் கடந்த கால நிகழ்வு, அனுபவம் அல்லது உணர்ச்சி அல்லது ஊக்கமளிக்கும் செய்தியை அடையாளப்படுத்தினாலும், அது அவர்களுக்கு நம்பிக்கை, உத்வேகம் மற்றும் ஊக்கத்தை ஏற்படுத்துவதாக சிலர் நம்புகின்றனர்.   பச்சை குத்துவதால் சேதம் ஏற்படுமா? பச்சை குத்திக்கொள்வதில் பயன்படுத்தப்படும் மைகள் பெரும்பாலும் கன உலோகங்களிலிருந்து பெறப்பட்ட நிறமிகளைக் கொண்டிருக்கின்றன. இந்த நச்சுகள் புற்றுநோய், DNA சேதம், வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அத்தோடு பலவீனமான … Read more