"பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது" – இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்
தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வுதான், `விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிரோடிருக்கிறார்’ என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தது. தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், “தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்குத் தொடர்பு இருக்கிறது. பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார்” என்று கூறியிருந்தார். ஆனால், பழ.நெடுமாறனின் இந்தச் செய்தியை, இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் முற்றிலுமாக … Read more