தொட்டியில் விழுந்த மகன்: காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீயணைப்பு வீரர்கள் விஷவாயு தாக்கி மயக்கம்!

​திண்டுக்கல், மலைக்கோட்டை அடிவாரத்தில் ​பத்திரகாளியம்மன் கோயில், ஐயப்பன் கோயில் இருக்கின்றன. அதனருகே கோட்டை குள​த்தை ஒட்டி முளைப்பாரி, தீச்சட்டி ஆகியவற்றை கரைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தண்ணீர் தொட்டியில் குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது என சொல்லப்படுகிறது.​ ​விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை இங்கு கரைப்பது வழக்கம். இதனால் இந்தத் தொட்டியில் 6 அடி ஆழத்துக்கு கழிவுகள் தேங்கியிருந்தது.  கோயில் பகுதியில் குவிந்த மக்கள் ​இந்த நிலையில், திண்டுக்கல் ​பாறைமேடு பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் தன் மனைவி முத்துமாரி, மகன் லிங்கேஸ்வரன் … Read more

பாலைவனமாகும் சுவிட்சர்லாந்து?: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்…

சுவிட்சர்லாந்து என்றாலே, நம் மனதில் முதலில் தோன்றுவது பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலைகள்தான். சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாடும் காட்சிகளை பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை… பாலைவனமாகும் சுவிட்சர்லாந்து? சமீபத்தில் சுவிஸ் மாகாணங்கள் சிலவற்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சுவிட்சர்லாந்து பாலைவனமாகிறதா என அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆம், சுவிட்சர்லாந்தின் Valais, Ticino மற்றும் Grisons மாகாணங்களில், பொதுவாக பாலைவனங்களில் காணப்படுபவை என கருதப்படும் சப்பாத்திக்கள்ளித் தாவரங்கள் வேகமாக பரவி வருவதை அந்த புகைப்படங்கள் காட்டுகின்றன. உண்மையில் … Read more

விமான நிலையத்துக்கு எதிரான பரந்தூர் 13 கிராம மக்களின் போராட்டம் 200வது நாளை எட்டியது… தவாக தலைவர் வேல்முருகன் பங்கேற்பு…

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பரந்தூர் உள்பட  13 கிராம மக்கள் நடத்தி போராட்டம் இன்று  200வது நாளை எட்டி உள்ளது. இன்றைய போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பூவுலகின் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்களை காவல்துறை, அங்கே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. அதுபோல வேல்முருகனும் … Read more

கோவை ஈஷா யோகா மையத்துக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வருகையால் சாலையில் வேகத்தடைகள் அகற்றம்

கோவை: பிப்ரவரி 18-ல் கோவை ஈஷா யோகா மையத்துக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வர உள்ளதால் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. வடவள்ளி முல்லை நகர் சோதனைச்சாவடி முதல் நரசிபுரம் வரை சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

சுப்ரீம் கோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் நாளை மறுநாள் பதவியேற்பு; முழு பலத்துடன் இயங்கும்

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமுள்ள 34 நீதிபதிகள் பணியிடங்களில் 27 இடங்கள் வரை நிரப்பப்பட்டு இருந்தன. வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக காலியாக மீதம் உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் கைவிரித்த மத்திய அரசு?! – பின்னணி என்ன?

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலைகள் செய்யும் சோக சம்பவங்கள் தொடர்ந்து நடந்தவாறு இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் மசோதாவை அக்டோபரில் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது தமிழக அரசு. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இம்மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தென் சென்னை தொகுதியின் எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து கேள்வி எழுப்பினார். அஸ்வினி … Read more

இங்கிலாந்தில் செயலிழக்கச் செய்யும்போது திடீரென வெடித்துச் சிதறிய வெடிகுண்டு: அதிரவைக்கும் வீடியோ…

இங்கிலாந்து நகரமொன்றில், வெடிகுண்டு ஒன்றைச் செயலிழக்கச் செய்யும்போது, திடீரென அது வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு நேற்று, இங்கிலாந்திலுள்ள Great Yarmouth என்னுமிடத்தில் அமைந்துள்ள Yare நதியின் அருகில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டும்போது, 250 கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட, வெடிக்காத ஒரு வெடிகுண்டாகும். இராணுவ வெடிகுண்டு நிபுணர்கள் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து, அந்த வெடிகுண்டை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செயலிழக்கச் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி மேலும் 2 கம்பெனி பாதுகாப்பு: ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 5 மின்னணு இயந்திரங்கள்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 5 மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட 2 கம்பெனியை சேர்ந்த 180 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ந் தேதி வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. இந்த  இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி  முடிவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை, … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நாளை மறுநாள் பிரச்சாரம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நாளை மறுநாள் பிரச்சாரம் செய்யவுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்ய உள்ளார்.