இந்தியாவுக்கு விரைவில் எஸ்-400 ஏவுகணைகள்: ரஷிய தூதர் தகவல்

மாஸ்கோ, ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.41,366 கோடி) மதிப்பில் ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் 5 தொகுப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு கையெழுத்திட்டது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி ஒப்பந்தத்தை செயல்படுத்தினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்தது. ஆனாலும் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்தன. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் ரஷியா ‘எஸ்-400’ ஏவுகணை அமைப்புகளின் … Read more

ராஜஸ்தான்: உரிமையாளரை கடித்துக் கொன்ற ஒட்டகம் – ஆத்திரத்தில் அடித்தே கொன்ற கிராமவாசிகள்!

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் ஒட்டகங்களை மேய்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு ஒட்டகம் அவரின் தலையை கடித்து இழுத்ததில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். உரிமையாளரைக் கொன்ற ஒட்டகம் தொடர்பான தகவல் அந்தப் பகுதியில் தீயாய் பரவ, சம்பவ இடத்துக்கு மரணித்தவரின் உறவினர்கள் வந்திருக்கின்றனர். பின்னர், அந்த ஒட்டகத்தை மட்டும் தனியே ஒரு மரத்தில் கட்டி வைத்து பாதிக்கப்பட்டவரை சிகிச்சைகாக கொண்டு செல்ல முயன்றிருக்கின்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதை அறிந்தவர்கள், ஆத்திரம் … Read more

லண்டனில் மாயமாகியுள்ள ஆசிய இளம்பெண்: பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை

தெற்கு லண்டனில் வாழ்ந்துவரும் சிறுமி ஒருவரை நான்கு நாட்களாகக் காணவில்லை. வழக்கத்துக்கு மாறான விடயம் தெற்கு லண்டனிலுள்ள Croydonஇல் வாழ்ந்துவரும் ஷ்ரேயா (15) என்ற இளம்பெண், 3ஆம் திகதி (பிப்ரவரி 3), West Thornton என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது மாயமாகியுள்ளார்.  ஷ்ரேயா இப்படி பெற்றோரிடம் சொல்லாமல் எங்கும் செல்வதில்லை என்பதால், அவரை நான்கு நாட்களாக காணாத குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை ஷ்ரேயாவின் பெற்றோர், அவர் இப்படி சொல்லாமல் வீட்டை … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை – 24ந்தேதி முதலமைச்சர் பிரசாரம்…

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், வேட்புமனுத்தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. அங்கு தேர்தல் பிரசாரம் அனல்பறக்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் 24ந்தேதி அங்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திருமகன் ஈவேரா மறைவைத்தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, ஈரோடு கிழக்கு தொகுதியில்  இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக என 4 முனை போட்டி … Read more

பிரதமர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ்!!

டெல்லி : பிரதமர் மோடி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி. நிஷாந்த் துபே உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.இந்திய – சீன எல்லை விவகாரம் குறித்து மக்களவையில் விரிவான விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

அலட்சியமாக கையாள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்… எதையுமே விசாரித்து தெளிவு பெறுவது தான் நல்லது! | Speech, interview, report

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலுக்குள் தைப்பூசம் அன்று, கறுப்பு நிற ‘பர்தா’ அணிந்த பெண், மூலஸ்தானம் வரை சென்று, சுவாமி தரிசனம் செய்துள்ளார்; பல்வேறு இடங்களை படம் பிடித்துள்ளார். கோவில் பணியாளர்கள் அவரை தடுக்கவில்லை; போட்டோ எடுத்தது குறித்தும் கேள்வி எழுப்பவில்லை. ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்றதும், பர்தா அணிந்த பெண் நிற்காமல் ஓட்டம் பிடித்தார். அவர் எதற்காக வந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதுபோன்ற விஷயங்களை … Read more

பெண் கைதி கன்னித்தன்மையை பரிசோதிப்பது சட்ட விரோதம் – டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி, கேரளாவில் 1992-ம் ஆண்டு அபயா என்ற கன்னியாஸ்திரி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இவரது சாவு தொடர்பான குற்ற வழக்கில் மற்றொரு கன்னியாஸ்திரியான செபி என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை 2008-ம் ஆண்டு வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை பரிசோதனைக்கு சி.பி.ஐ. உட்படுத்தியதாகத் தெரிகிறது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கன்னியாஸ்திரி செபி முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா நேற்று தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில் “ஒரு பெண் கைதியை கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்துவது … Read more

`நிர்வாண வீடியோ காலில் வா…’ – பெண்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து மிரட்டியவர் கைது

கடந்த 2021-ம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவர், ஆந்திரப்பிரதேசத்தின் ரச்சகொண்டா சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “யாரென்றே தெரியாத ஒருவர் மார்பிங் செய்யப்பட்ட எனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டுகிறார். தவறாக சித்திரிக்கப்பட்ட படத்தை பகிராமல் இருக்க நிர்வாணமாக வீடியோ கால் செய்யக் கூறி மிரட்டுகிறார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். ஹேக்கர் அதைத் தொடர்ந்து, காவல்துறை தேவையான தகவல்களை பெற்றுக்கொண்டு குற்றவாளிக்கு வலை … Read more

யாராவது அதை பார்த்தீர்களா? டுவிட்டரில் பதிவிட்ட விராட் கோலி: கவனத்தை ஈர்த்த சொமேட்டோ நிறுவனத்தின் பதில்

புத்தம் புதிய தமது அலைபேசி தொலைந்ததாக கூறி டுவிட்டரில் பதிவிட்ட விராட் கோலிக்கு உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ அளித்த பதில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தனது புதிய செல்போனை தொலைத்துவிட்டதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அவர், பாக்ஸை கூட திறக்காத புதிய செல்போன் தொலைந்து போவது மிகவும் சோகமான உணர்வு. யாராவது அதை பார்த்தீர்களா? என்று பதிவிட்டிருந்தார். Nothing beats the sad feeling of … Read more

பலி எண்ணிக்கை 8000 நெருங்கியது: நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது துருக்கி சிறுமி..

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இயற்கை ஏன் அந்நாட்டு மக்களுக்கு இவ்வளவு பெரிய சோகத்தை கொடுத்துள்ளது என எண்ணத் தோன்றுகிறது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 6, 2023) அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை … Read more