காதலியை துண்டாக்கிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்| Charge sheet filed in case of dismemberment of girlfriend

புதுடில்லி : காதலியைக் கொன்று, துண்டு துண்டாக்கி வீசி எறிந்த வழக்கில், 6,600 பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகையை புதுடில்லி போலீசார் தாக்கல் செய்து உள்ளனர். மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த அப்தாப் பூனவாலா, ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதற்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் புதுடில்லிக்கு இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் மகளுடன் தொடர்பு கொள்ள முடியாததால் ஷ்ரத்தாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அப்தாப் கடந்தாண்டு மே ௧௮ம் … Read more

பிறந்த குழந்தையின் எடை திடீரென குறைகிறதா? இதுவும் காரணமாக இருக்கலாம்| பச்சிளம் குழந்தை பராமரிப்பு–7

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். மருத்துவர் மு. ஜெயராஜ் … Read more

நீண்ட இடைவேளைக்கு பின்னர்… பொதுமக்கள் முன் தோன்றிய கிம் ஜோங்: விடுத்த ஒற்றை கோரிக்கை

நீண்ட 36 நாட்களுக்கு பின்னர் முதன்முறையாக பொதுமக்கள் முன்பு தோன்றிய வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், போருக்கு தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ராணுவத்தின் பங்கு மிகப்பெரிய ராணுவ அதிகாரிகள் சந்திப்பின் போது பேசிய கிம் ஜோங் உன், வடகொரிய ராணுவம் வளர்ச்சியின் புதிய கட்டத்தை நோக்கி நகர்கின்றது என்றார். நிகரற்ற இராணுவ பலத்தை வெளிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்ட கிம் ஜோங் உன், வடகொரியாவின் ஒவ்வொரு வெற்றிக்கும் ராணுவத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றார். @EPA ராணுவத்தில் மிகப்பெரிய … Read more

புதுமைப் பெண் திட்டத்தின் 2ம் கட்ட பணி: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: புதுமைப் பெண் திட்டத்தின் 2ம் கட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டாவது கட்டத்தின் மூலம் மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெற உள்ளனர். முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், புதுமைப் பெண் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் … Read more

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய டெல்டா மாவட்டங்களுக்கு செல்கிறது ஒன்றிய குழு

சென்னை: நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய குழு இன்று டெல்டா மாவட்டங்களுக்கு செல்கிறது. கனமழையால் சேதமடைந்துள்ள பயிர்களை ஆய்வு செய்ய ஒன்றிய குழு இன்று தமிழ்நாடு வருகிறது. பருவம் தவறி பெய்த மழையால் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 

சிறுமியிடம் அத்துமீறல் வழக்கில் முஸ்லிம் மத போதகருக்கு சிறை| Muslim preacher jailed for raping girl

புதுடில்லி : பாடம் படிக்க வந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில், முஸ்லிம் மத போதகருக்கான ஆறு ஆண்டு சிறை தண்டனையை புதுடில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. புதுடில்லியின் புராரி பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மத போதகருக்கு எதிராக, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. தன்னிடம் படிக்க வந்த, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது, ௨௦௧௬ செப்.,ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த … Read more

தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கு: காப்பகத்தில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு – நடந்தது என்ன?!

தென்காசியில் கடத்தப்பட்ட தன் காதல் மனைவியை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென்று தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் வினித் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் நான், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்து வருகிறேன். இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்த நவீன் பட்டேல் மகள் கிருத்திகா பட்டேலும் நானும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தோம். இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் … Read more

ஒரே நாளில் ஆயிரம் பேர்கள்: உக்ரைன் வெளியிட்ட அந்த நடுங்க வைக்கும் தகவல்

கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 1,030 ரஷ்ய வீரர்கள் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,030 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தகவல் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கிய பின்னர் இதுவரை 133,190 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. @twitter கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய படையெடுப்பிற்குப் பிறகு … Read more

பிப்ரவரி 08: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 263-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 263-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிப் -08: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.