ராணுவ மேஜர் ஜெயந்த் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ராணுவ மேஜர் ஜெயந்த் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், தமிழ்நாடு ராணுவ வீரர் ஜெயந்த் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் வாடும் சக ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுளார்.

வாட்ஸப்பின் புத்தம்புதிய அப்டேட்!

மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆப் தான்இந்த வாட்ஸப்.அதில் தற்போது மற்றைய மெஸேஜிங் ஆப்களுக்கு போட்டியாக பல்வேறு அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட்கள் 2023 என்ன? வாட்ஸ்அப் புதிய அம்சங்கள் 2023 பட்டியலில் கணினி பயன்பாட்டிற்கான ஸ்கிரீன் லாக். ஒருமுறை மாத்திரம் குறும்செய்திகளை பார்க்கும் வசதி.  துணைப் பயன்முறை, iOS இல் வீடியோ அழைப்புகளுக்கான PiP மற்றும் பலவற்றை உள்ளடக்கியிருக்கலாம். 2023 ல் வெளியிடப்பட்ட அப்டேட்கள் மற்றும் விரைவில் வெளியிடப்படும் அப்டேட்கள் பற்றி … Read more

நாமக்கல் அருகே வடமாநில தொழிலாளர் குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு! போலீஸ் குவிப்பு

நாமக்கல்: நாமக்கல் அருகே வடமாநில தொழிலாளர் குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினை பூதாகரமாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசும், காவல்துறை யினரும் வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக தெரிவித்து உள்ளனர். இருந்தாலும் அவ்வப்போது சில இடங்களில் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. முதன்முதலில் திமுகவும் சில அரசியல் கட்சிகள் மட்டுமே வடமாநிலத்தவர்கள் … Read more

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொன்விழா என்று சொல்லப்பட்டாலும் இது பெண்களுக்கான விழா. பெண்கள் உயர் கல்வி பெற்று உயரிய பதவியை வகிக்க வேண்டுமென கூறியவர் கலைஞர். பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும், அவர்கள் மேடைகளில் முழங்க வேண்டும் என்று கூறியவர் அண்ணா. தமிழ்நாட்டில் 35000 பெண் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றால் அதற்கான விதையை விதைத்தவர் கலைஞர் எனவும் கூறினார்.

காஷ்மீரில் Z+ பாதுகாப்பு; ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ராஜ வாழ்க்கை – பிரதமர் அலுவலக அதிகாரி என பலே மோசடி

தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், ராணுவத்தை ஏமாற்றி ராஜ வாழ்க்கை வாழ்ந்து மோசடி செய்துள்ளார். கிரண் பட்டேல் என்பவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீர் சென்றார். அவர் தன்னை பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராக இருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ராணுவத்திடம் தெரிவித்தார். உடனே கிரண் பட்டேலுக்கு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தங்குவதற்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அதோடு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு … Read more

FIFAவில் இருந்து இலங்கையை இடைநிறுத்த வாக்களித்த 197 நாடுகள்!

மார்ச் 16, வியாழன் அன்று ஜிம்பாப்வே மற்றும் இலங்கை FIFA தேர்தல்களின் போது வாக்களிப்பதில் இருந்து இடைநிறுத்தப்பட்டன. பிரதிநிதிகள் சந்திப்பு   நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 73வது FIFA காங்கிரஸிற்காக, உலகக் கால்பந்து நிர்வாகக் குழுவின் (FIFA) உயர்மட்ட கால்பந்து நிர்வாகிகள் உட்பட 2,000 பிரதிநிதிகள் கிகாலியில் சந்தித்தனர். FIFA இன் உச்ச சட்டமன்ற அமைப்பான FIFA காங்கிரஸ், FIFAவின் உயர்மட்ட நிர்வாகிகள், கூட்டமைப்புகள் மற்றும் 211 உறுப்பினர் சங்கங்கள் மற்றும் பிற கால்பந்து பங்குதாரர்களின் பிரதிநிதிகளை சேர்ந்து இந்த … Read more

கொரோனா பரவல் எதிரொலி: கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் 30 படுக்கைகளுடன் தனிவார்டு

கோவை: தமிழ்நாட்டில்  மீண்டும் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக புளு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், சமீப நாட்களாக ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாநில சுகாதாரத்துறை காய்ச்சல் முகாம்கள் நடத்தி நோய் பரவலை கட்டுப்படுத்தி வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில், கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் … Read more

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த ரூ. 24,000 கோடியில் திட்ட மதிப்பீடு தயார்: நிதின் கட்கரி!

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையை மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்துவதற்கு ரூ. 24,000 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பாலங்கள், சுரங்கங்களுடன் பிரிக்கப்பட்ட நான்கு வழிச் சாலையாக அமைக்கப்படவுள்ளது. 8 பிரிவாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

மும்பை நோக்கி நடைப்பயணமாக வரும் விவசாயிகள்! முதல்வர் ஷிண்டே சந்திக்க முடிவு!

மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் கடுமையான இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள் விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி நடைப்பயணமாக வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வரும் வழியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் பேரணியில் இணைந்து கொண்டிருக்கின்றனர். தற்போது பேரணி மும்பை அருகில் இருக்கும் தானே மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. தானே மாவட்டம் முதல்வர் ஷிண்டேயின் சொந்த ஊராகும். எனவே … Read more