அதானி நிறுவனத்தில் பொதுத்துறை வங்கிகளின் முதலீடு குறித்து நாடாளுமன்ற அல்லது உச்சநீதிமன்ற விசாரணை வேண்டும் : கார்கே

அதானி நிறுவனம் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன அறிக்கையைத் தொடர்ந்து இதுவரை கடந்த ஒருவாரத்தில் 8.22 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது அதானி நிறுவனம். மோசடியாக தனது நிறுவன பங்குகளின் மதிப்பை உயர்த்தி வங்கிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாகப் பெற்று மக்கள் பணத்தை ஏப்பம் விட்டுவருவதாக அதானி நிறுவனம் மீது … Read more

இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் ஆலோசனை

சென்னை: இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காத நிலையில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட 35 வயது காவலர்; திருமணமாகாத விரக்தி காரணமா?!

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த வடகரை பாபா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (35). இவர், கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 1.2.2023-ம் தேதி மயங்கிய நிலையில் சதீஷ் கிடப்பதாக செங்குன்றம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தபோது காவலர் சதீஷ், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த நிலையில், சதீஷின் சடலத்தை … Read more

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் எத்தனை லட்சம் பேர் தெரியுமா?

சென்னை; தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து  காத்திருப்பவர்கள் 67.75லட்சம் பேர் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு வேலைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம்  தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதேபோல், ஒருசில பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள்  நியமிக்கப்படுகின்றனர். மேலும், ஏராளமானோருக்கு  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகிறது. இதற்கு வேலைவாய்ப்பு பதிவுத்துறையில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த நிலையில், தமிழகஅரசின் … Read more

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை சுரங்கம் தோண்டும் இயந்திரம் இன்று பரிசோதனை!

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை அமைய உள்ள மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணியின், 4வது வழித்தடத்தில் பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் இன்று பரிசோதிக்கப்பட்டது. வரும் மே மாதத்தில் இயந்திரம் பொருத்தப்பட்டு சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“2047-ல் வல்லரசு… உலகம் இந்தியாவை வளர்ந்த நாடாகப் பார்க்கிறது!" – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகம் இந்தியாவை வளரும் நாடாகப் பார்க்காமல் வளர்ந்த நாடாகப் பார்ப்பதாகக் கூறியிருக்கிறார். கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்ற என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவர்களுடனான கலந்துரையாடல் சந்திப்பு கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி அதில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “2047-ல் இந்தியா வல்லரசாக மாறும். இந்தச் சவாலை எதிர்நோக்கித்தான் இந்தியா பயணம் செய்யவிருக்கிறது. இதில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் தேர்வுசெய்ய … Read more

நரை முடிக்கு உருளைக்கிழங்கு! இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. விரைவில் பலன் கிடைக்கும்

பொதுவாக இன்றைய காலத்தில் முடியைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமாகி வருகிறது. சுற்றுச்சூழல், ஆரோக்கியமற்ற பிரச்சினைகளில் முடி பெரிதும் பாதிக்கின்றது. குறிப்பாக இன்றைய கால பருவ வயதில் உள்ள அனைவருக்குமே நரைமுடி பிரச்சினை முக்கிய இடத்தில் உள்ளது. இதனை போக்க இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான முடியைப் பராமரிக்க சிறந்த வழி. இது எந்த பக்கவிளைவையும் சேதத்தையும் ஏற்படுத்தாமல் நேர்மறையான முடிவுகளை அளிக்கிறது. அந்தவகையி்ல தற்போது நரைமுடியை போக்க சில எளியவழிகளை இங்கே பார்ப்போம்.     50 … Read more

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு

டெல்லி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பதில் மனுவில் தெரிவித்துள்ளது. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FPO: அதானிக்கு அடுத்த பின்னடைவு! – அமைச்சரை வறுத்தெடுத்த கனிமொழி – தவிர்க்க வேண்டிய 2 கடன்கள்!

அதானி குழுமத்துக்கு அடுத்த பின்னடைவு… கைவிடப்பட்ட FPO பங்கு விற்பனை! சரியும் அதானி சாம்ராஜ்ஜியம்… அதானி குழும நிறுவனங்கள் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி நிறுவனப் பங்குகள் கடும் சரிவை கடந்த ஒரு வாரமாகச் சந்தித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்கள் குறித்த ஆய்வை பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்தே பங்குச் சந்தையில் … Read more