அஸ்தமனமாகும் சனி! இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்குமாம்….நாளைய ராசிப்பலன்

2023 ஜனவரி 30 ஆம் திதி சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். இந்த அஸ்தமன நிலையில் மார்ச் 5 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். அதுவும் செல்வந்தராகும் வாய்ப்பைப் பெறுவார்கள். அந்தவகையில் நாளைய நாள் செல்வந்தராகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப்போகுது என்று பார்ப்போம்.  உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி … Read more

தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர். மகள் கவிதா-வை சந்தித்த சரத்குமார்… தேசிய அரசியலில் கவனம் செலுத்த முயற்சி…

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகளும் அம்மாநில மேலவை உறுப்பினருமான கவிதா எம்.எல்.சி.யை சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் இன்று சந்தித்துப் பேசினார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக, கட்சியின் பெயரை ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ என மாற்றியுள்ள கே.சி.ஆர். கடந்த வாரம் கம்மம் பகுதியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் … Read more

வேலூர்: இன்ஸ்டா காதல்; திருமணம் – கர்ப்பிணி மனைவியைக் கொன்று மலையிலிருந்து உருட்டிவிட்ட எஸ்.ஐ மகன்

வேலூர் அருகிலிருக்கும் பாலமதி மலை உச்சியில், ‘குழந்தை வேலாயுதபாணி’ திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் இருந்து 100 அடிக்கு கீழிருக்கும் பாறைகளின் இடுக்கு பள்ளத்துக்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போதுதான் தெரிந்தது, அந்தப் பெண் கொலைச் செய்யப்பட்டு மலையில் இருந்து உருட்டிவிடப்பட்டிருக்கிறார் என்று! கட்டையால் முகம், தலையில் கொடூரமாக தாக்கியிருப்பதும், பாட்டிலால் கழுத்தை குத்திக் … Read more

இந்தியாவில் தன்னை பிணைக்கைதியாக பிடித்துவைத்துள்ளதாக பிரெஞ்சு நடிகை பரபரப்பு புகார்

பிரெஞ்சு நடிகை ஒருவர், தான் இந்தியாவிலுள்ள தனது வீட்டிலேயே பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்துள்ளார். கோவாவில் வீடு வாங்கிய பிரெஞ்சு நடிகை இந்தியாவிலுள்ள கோவாவில் வீடு ஒன்றை வாங்கியுள்ள Marianne Borgo (75) என்னும் பிரெஞ்சு நடிகை, தான் தனது வீட்டிலேயே பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாகவும், தான் அபாயமான சூழலில் திகிலுடன் இருப்பதாகவும் நேற்று முன்தினம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். Francisco Sousa என்னும் சட்டத்தரணியிடமிருந்து 2008ஆம் ஆண்டு வீடு ஒன்றை வாங்கினார் Marianne. … Read more

கால்நடைகளை ஏற்றிவந்த கப்பலில் 900 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்… ஸ்பெயின் போலீசார் பறிமுதல்

கேனரி தீவுகளுக்கு அருகே கால்நடைகளை ஏற்றிவந்த கப்பலை பரிசோதனை செய்த ஸ்பெயின் காவல்துறையினர் அடுக்கடுக்கான பெட்டிகளில் 4.5 டன் கோகைன் எனும் போதைப் பொருளைக் கைப்பற்றினர். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 900 கோடி ($114 மில்லியன்) என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக இன்று வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொலம்பியாவிலிருந்து டோகோ கொடியிடப்பட்ட ஓரியன் V கப்பல் 10 க்கும் மேற்பட்ட நாடுகள் வழியாக பயணம் செய்து செவ்வாய்க்கிழமை அன்று கிரான் கனாரியா தீவில் உள்ள லாஸ் பால்மாஸில் … Read more

ஆசிரியரின் புகார்… காட்டிக்கொடுத்த சிசிடிவி – நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா மீது வழக்கு!

சென்னையை அடுத்த மாதவரம், சாஸ்திரி நகர், இரண்டாவது குறுக்கு சாலை பகுதியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா வசித்து வருகிறார். இவரின் எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் நித்யாவுக்கும் அடிக்கடி காரை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்தநிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் காரை யாரோ சேதப்படுத்தினர். அதனால் ஓய்வு பெற்ற ஆசிரியர், மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீஸார் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது … Read more

மாரடைப்பின்போது உடலைப் பிரிந்த உயிர்… நரகத்துக்கு சென்று திரும்பிய நபரின் திகில் அனுபவம்

அமெரிக்கர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டபோது தனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.  நரகத்துக்குச் சென்ற ஆவி அமெரிக்காவில் பாதிரியாராக பணியாற்றிவரும் Gerald Johnson என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் உயிர் காக்கும் சிகிச்சையளித்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்கள். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அவரது உயிர் அவரது உடலிலிருந்து பிரிந்து நரகத்திற்குச் சென்றதை தான் தெளிவாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார் Gerald. Image: TIKTOK நரகத்தில் கேட்ட இசை தனது ஆவி தனது உடலிலிருந்து பிரிந்தபோது, அது மேலே … Read more

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொஹல் கார்டன் பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றியது மத்திய அரசு…

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது. மொஹல் கார்டன் என்று இருந்த பெயரை அம்ரித் உதயான் என்று மாற்றியுள்ளது. பழசை கண்டாலே திரைபோடுவது, தடைபோடுவது என்ற உதறல் நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய அரசு இந்த வார நடவடிக்கையாக இந்த தோட்டத்தின் பெயரை மாற்றியிருக்கிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.. அம்ரித் உதயான் தோட்டத்தை மக்களின் பார்வைக்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை திறந்து வைக்கவுள்ளார். இதனை அடுத்து, ஆங்கிலேயர் ஆட்சிக் கால ஆதிக்க … Read more