2023 ஹூண்டாய் வெர்னா காருக்கு முன்பதிவு துவங்கியது

வரும் மே மாதம் விற்பனைக்கு வர உள்ள 2023 ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) செடான் காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. முன்பதிவு தொகை ரூ. 25,000 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் காரை முன்பதிவு செய்யலாம். சி-பிரிவு செடான் சமீபத்திய நவீனத்துவமான வடிவமைப்பு மொழியைப் பெறுகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் ஹூண்டாய் விற்பனை செய்கின்ற கார்களில் இருந்து தோற்றத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. முன்புறத்தில் அகலமான பெரிய … Read more

“திருநள்ளாறில் அமைச்சர் துணையுடன் கனிமவளக் கொள்ளை படுஜோராக நடக்கிறது!" – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி, காரைக்காலில் ராகுல் காந்தியின் `இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்’ ஒரு பகுதியாக, திருநள்ளாறு தொகுதியில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம் மேற்கொண்டனர். இந்த நடைப்பயணத்தில், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.பி.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “காரைக்காலுக்கும் அதானிக்கும் பங்குச்சந்தைக்கும் தொடர்பு இருக்கிறது. காரைக்காலில் இயங்கி வரும் துறைமுகத்தின் ஒப்பந்ததாரரான … Read more

தற்கொலை செய்துகொண்ட இளவரசர் ஹரியின் காதலி: மன்னிப்புக் கோரியுள்ள பொலிசார்

இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிகளுள் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விடயம் நினைவிருக்கலாம். தற்போது அவருடைய தாயாரிடம் பொலிசார் மன்னிப்புக் கோரியுள்ளனர். இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி இளவரசர் ஹரி தனது நீண்ட நாள் காதலியான Chelsy Davyயைப் பிரிந்தபின் Caroline Flack என்ற பெண்ணுடன் பழகத் துவங்கியுள்ளார். இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதும், Carolineஉடைய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் மொய்க்கத்துவங்கிவிட்டார்களாம். இப்படி ஒரு … Read more

பிபிசி டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…

டெல்லி: பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்ட பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபோல மும்பை அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு  மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. ஆனால், குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிரான எந்த சாட்சியமும் … Read more

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஜன. மாதத்தில் 4.73% ஆக குறைந்துள்ளது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 4.73 சதவீதமாக குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பரில் 4.95 சதவீதமாக இருந்த நிலையில் 2 ஆண்டில் இல்லாத அளவுக்கு மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் எப்படி சேமிக்கிறார்கள்; எதில் முதலீடு செய்கிறார்கள்… ரிசர்வ் வங்கி சொல்லுவதென்ன?

இந்தியக் குடும்பங்களின் நிதி சார்ந்த முதலீடு (Financial Investments)  எப்படி இருக்கிறது என்கிற புள்ளி விவரத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) வெளியிட்டுள்ளது. அதில், முடிந்த 2021-22-ம் நிதி ஆண்டில் அதாவது 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான 12 மாதத்தில் இந்தியக் குடும்பங்களின் முதலீடு எதில் அதிகமாக செய்யப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிய வந்துள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு… நீண்ட கால முதலீடு… கவனிக்க வேண்டிய முக்கியமான … Read more

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும்! ராகுல் காந்தி – வீடியோ

டெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூரும் என டிவிட் பதிவிட்டுள்ள  ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின்போது, காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மலர்கொத்து வைத்து அஞ்சலி செலுத்திய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் பேருந்தில் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, தற்கொடை படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள், வெடிகுண்டுகள் … Read more