சவுதி அரேபியாவிலும் தனது சேட்டையை தொடர்ந்த ரொனால்டோ காதலி! வைரல் வீடியோ

ரொனால்டோவின் உடையை பின்பக்கமாக திருப்பி அணிந்தபடி அவரின் காதலி ஜார்ஜினா சேட்டையுடன் குறும்புத்தனம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது. ரொனால்டோ போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ அல் நாசர் கிளப் அணிக்காக $200 மில்லியன் ஒப்பந்ததில் இணைந்தார். இதையடுத்து சவுதியில் அல் நாசர் கிளப்புக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவுக்கு களத்திற்கு வெளியே ஏராளமான ஆதரவு இருக்கிறது, அதன்படி அவரின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் மற்றும் மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் ஆகியோர் உடன் சென்றுள்ளனர். View this post … Read more

அதானி குழுமம் வரவு – செலவு கணக்கில் பல ஆண்டுகளாக மோசடி! அமெரிக்க ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு…

டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் வரவு – செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டிப்பட்டுள்ளது. இதற்கு அதானி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. உலகின் 4வது பணக்காரராக இருப்பவர் பிரபல அதானி நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி. அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், தற்போது அமெரிக்காவைச்சேர்ந்த நிறுவனம் ஒன்றும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது. பங்குச்சந்தையில் … Read more

தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே யானை தாக்கி கேரள வனக் காவலர் பலி..!!

தேனி: தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே கேரளாவின் யானையிறங்கல் பகுதியில் யானை தாக்கி கேரள வனக் காவலர் பலியானார். தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த யானையை விரட்டியபோது யானை தாக்கியதில் வனக் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Sports RoundUp: தனி ஒருவனாக சாதித்த பண்ட் முதல் கில்லின் வெற்றி ரகசியம் வரை!

தனி ஒருவன் ரிஷப் பண்ட்! தனது அபாரமான ஆட்டத்தால் 2022-ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணியில் தேர்வாகியிருக்கும் ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், ரிஷப் பண்ட்.  2022ல் சிறப்பாக விளையாடிய பண்ட், 12 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்துள்ளார், இதில் இரண்டு சதமும், நான்கு அரை சதமும் அடங்கும். இதனிடையே கடந்த ஆண்டின் இறுதியில் கார் விபத்தில் சிக்கிய பண்ட், பலத்த காயமடைந்தார். இந்த விபத்தின் காரணமாக அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

மோசமான வானிலை: ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு நாளை வரை விடுமுறை…

ஸ்ரீநகர்: மோசமான வானிலை காரணமாக ராகுலின் ஒற்றுமை யாத்திரை இ,ன்று பிற்பகல் முதல்  ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் வெள்ளிக்கிழமை (28ந்தேதி) முதல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையான பாரத் ஜோடோ யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு நிலவி வரும் மோசமான வானிலை, பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக, இன்றைய பிற்பகல் முதல் நாளை வரை யாத்திரை ஒத்தி வைக்கப்படுவதாக மூத்த … Read more

தாம்பரத்தில் 2012ல் தனியார் பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து மாணவி பலியான வழக்கில் கைதான 8 பேரும் விடுதலை..!!

செங்கல்பட்டு: தாம்பரத்தில் 2012ல் தனியார் பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து மாணவி சுருதி இறந்த வழக்கில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2012 ஜூன் 25ல் நடந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நீதிபதி காயத்ரி தீர்ப்பு வழங்கினார்.

`பழநிக்கு சென்றால் சனிக் கிரக பாதிப்புகள் நீங்கும்!' ஏன் தெரியுமா?

பழநி என்றதும் ஞானப் பழத்துக்காக நடந்த போட்டியும், முருகன் பெற்றோரைப் பிரிந்துவந்து இங்கு கோயில் கொண்ட கதையும்தான் நம் நினைவுக்கு வரும். இதேபோல் இன்னும்பல தெய்வக் கதைகள் பழநிக்கு உண்டு. தெய்வங்கள் பலரும் தேடி வந்து வழிபட்டு வரம்பெற்ற கதைகள் அவை! ‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானைச் சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன். சிவபெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால், ஈசனிடம் தண்டனை பெற்ற … Read more

இப்படி நடந்தால்… ஓய்வூதியம் பெறாமல் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் இறக்க நேரிடும்

பிரித்தானியாவில் ஓய்வூதிய வயதை அதிகரித்தால் அதனால் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் பாதிக்கப்படலாம் என அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசமாக பாதிக்கப்படும் எதிர்வரும் 2035ம் ஆண்டுக்கு முன்னர் பிரித்தானியாவில் ஓய்வூதிய வயதை 68 என அதிகரிக்க திட்டமிடப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் குறைந்த ஆயுள் விகிதங்கள் கொண்ட பிளாக்பூல், கிளாஸ்கோ மற்றும் நாட்டிங்ஹாம் ஆகிய பகுதிகள் மோசமாக பாதிக்கப்படும். @getty மட்டுமின்றி, 2028ல் ஓய்வூதிய வயது 66ல் இருந்து 67க்கு உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2046 காலகட்டத்தில் பிறப்பு விகிதமும் … Read more

போலி ஆவனம் மூலம் அம்மா சிமெண்ட் முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசு சிமெண்டான, அம்மா சிமெண்ட், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகாரிகள், ஒப்பந்ததாரர் இணைந்து செய்த முறைகேடு தொடர்பான வழக்கில், காவல்துறை  அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் உள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் வினியோக திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிடக் கோரி பா.ஜ. நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து … Read more

மின் ஊழியர்களின் பாதுகாப்பை அத்துறையின் அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை

சென்னை: மின் ஊழியர்களின் பாதுகாப்பை அத்துறையின் அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என பாஜக மாநில  தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மின் ஊழியர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.