தலைப்பு செய்திகள்
`ஜனநாயகம்' குறித்து ராகுலிடம் கேள்வியெழுப்பிய ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரின் மகள்! – இணையத்தில் வீடியோ வைரல்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரிட்டனுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று உரையாற்றிவருகிறார். அந்த வகையில் சமீபத்தில், லண்டனில் நடைபெற்ற சாத்தம் ஹவுஸ் (Chatham House) சிந்தனையாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண், ராகுல் காந்தியிடம் கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகிறது. அந்தக் காணொளியை ராகுல் காந்தியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ராகுல் காந்தி மாலினி மேஹ்ரா எனும் … Read more
இதுவரை 20 மில்லியன் டன் உணவு தானியம்!கருங்கடல் ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது: ஐ.நா
உக்ரைனில் இருந்து விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவும் கருங்கடல் தானிய முன்முயற்சி முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைன் தானிய ஏற்றுமதி உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு, உலக அளவில் ஏற்பட்ட தானிய பற்றாக்குறை தீர்ப்பதற்காக உக்ரைன், ரஷ்யா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இணைந்து கருங்கடல் உணவு தானிய ஒப்பந்தத்தை மேற்கொண்டன. அதனடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 23 … Read more
“நார்டு ஸ்ட்ரீம்-2 எரிபொருள் குழாய் வெடிப்புக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை!" – உக்ரைன் விளக்கம்
ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்குமிடையே, பால்டிக் கடலுக்கடியில் குழாய் மூலம் எரிபொருளைக் கொண்டுசெல்லும் நார்டு ஸ்ட்ரீம்-2 (Nord Stream 2) எரிபொருள் குழாய்களில், கடந்த ஆண்டு மர்மமான முறையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில், தங்களுக்குத் தொடர்பில்லை என உக்ரைன் தெரிவித்திருக்கிறது. ஜெலன்ஸ்கி – புதின் முன்னதாக, ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், ரஷ்யாமீது பொருளாதாரத் தடைவிதித்ததையடுத்து, பால்டிக் கடல்வழியே கடலுக்கடியில் `நார்டு ஸ்ட்ரீம் 1′ குழாய் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் வழங்கிவந்த ரஷ்யா, … Read more
பணத்தைச் சேமிக்க விரும்புவதால் : மேசைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என சுந்தர் பிச்சை தெரிவிப்பு
கூகுள் நிறுவனம் தனது பணியாளர்கள் சிலருடன் மேசையை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக கூறப்படுகிறது. கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஒரு கூட்டத்தில் இந்த நடவடிக்கை பணத்தை சேமிக்க உதவும் என்று ஒரு அறிக்கையின்படி தெரிவித்தார். இந்தியா உட்பட பல பிராந்தியங்களில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்னர் கூகிள் செலவைக் குறைக்க எடுத்த மற்றொரு நடவடிக்கை இதுவாகும் என்றும் தெரிவித்திருந்தார். சுந்தர்பிச்சையின் கருத்து ஆல்-ஹேண்ட்ஸ் சந்திப்பில் பேசிய சுந்தர் பிச்சை, … Read more
கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.71.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.71.81 கோடி மதிப்பில் பன்னோக்கு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதிநவீன வசதிகளுடன் 3 அடுக்குகளாக பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. மகப்பேறு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை கூடம், ரத்த வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் மருத்துவமனை அமைகிறது. பன்னோக்கு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக சிகிச்சை பிரிவு அமைக்கப்பட உள்ளது.
09.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 09 | வியாழக்கிழமை | இன்றைய ராசி பலன்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
பிரித்தானிய ராணி குடும்பத்தில் ஒரு இழப்பு: துயரத்தை ஏற்படுத்தியுள்ள செய்தி
பிரித்தானிய ராணிக்கு நெருக்கமான ஒருவர் மரணமடைந்துள்ளார். அவர், ராணி கமீலாவின் சகோதரி கணவர். 50 ஆண்டுகளாக நெருக்கமான நபர் ராணி கமீலாவின் தங்கை Annabel (74). Annabelஇன் கணவரான Simonதான் தற்போது மரணமடைந்துள்ளார். Simon கமீலாவுடன் 50 ஆண்டுகளாக நெருக்கமானவர் ஆவார். விடயம் என்னவென்றால், கமீலாவின் உறவினரான Charles Villiers (59) என்பவர் சிறிது காலத்துக்கு முன்புதான் உயிரிழந்தார். அவர் லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. நீண்ட காலமாக தனது மனைவியுடனான விவாகரத்து பிரச்சினை … Read more
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் மீது உதவி பேராசிரியைகள் 7பேர் பாலியல் தொல்லை புகார்
சேலம்: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் மீது உதவி பேராசிரியைகள் 7பேர் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர், புகார்தாரர்களிடம் உதவி காவல் ஆணையர் ஆனந்தி தனித்தனியே விசாரணை மேற்கொண்டார்.