`பொது நீதிக்காகப் போராடினால் பொய் வழக்கா?… பாஜக-வினர் சிறைக்கு அஞ்சுவதில்லை!' – அண்ணாமலை

தமிழகத்தில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்றும், பீகார் தொழிலாளர்கள் வெளியேறுவதாகவும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், `வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புவோர்மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்தார். மேலும், தமிழகத்திலுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே, ‘வடமாநிலத்தவர்மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா தமிழக முதல்வர்?’ என்ற … Read more

ரஷ்ய கோடீஸ்வரரின் போயிங் 737 விமானத்தை கைப்பற்ற அமெரிக்காவுக்கு அனுமதி

ரஷ்ய நிறுவனத்தின் போயிங் 737 விமானத்தை கைப்பற்ற அமெரிக்காவுக்கு வாரண்ட் கிடைத்துள்ளது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மேற்கோள் காட்டி, ரஷ்ய எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான 25 மில்லியன் டொலர் போயிங் 737-ஐ பறிமுதல் செய்ய நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானம் PJSC Rosneft Oil Co. நிறுவனத்திற்கு சொந்தமானது, இது மாஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டது மற்றும் … Read more

இசைக்கலைஞர் சந்திரசேகர் மறைவுக்கு இளையராஜா இரங்கல்…

இசைஞானி இளையராஜா இசையமைத்த பல்வேறு படங்களில் பணியாற்றிய இசைக்கலைஞர் சந்திரசேகர் இன்று காலமானார். கிட்டார் இசைக்கலைஞரான இவர் இளையராஜா இசையமைத்த ‘இளய நிலா பொழிகிறதே’ உள்ளிட்ட பல பாடல்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக பணியாற்றியுள்ளார் சந்திரசேகர். சந்திரசேகர் மற்றும் அவரது இளைய சகோதரர் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமன் இருவரும் இளையராஜாவின் பல படங்களில் பணியாற்றியுள்ளனர். Rest in peace, Chandrashekar sir. A brilliant … Read more

மதுரையில் வரும் 12-ம் தேதி முதல் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்ய போலீசார் முடிவு!

மதுரை: மதுரையில் வரும் 12-ம் தேதி முதல் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளார். வாகன நெரிசலை கருத்தில்கொண்டு போக்குவரத்து மாற்றம் செய்ய மதுரை மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது. மதுரை வள்ளுவர் சிலையிலிருந்து ஆவின் சந்திப்பு செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பரமக்குடி: பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு; சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட டி.ஜி.பி!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, வாட்ஸ்அப்பில் பரவிய ஆடியோவை அடிப்படையாகக் கொண்டு விசாரிக்க மாவட்ட எஸ்.பி தங்கதுரை உத்தரவிட்டார். அதன்பேரில், பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பள்ளி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அ.தி.மு.க கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் … Read more

மனைவியை வேலைக்காரி போல் நடத்திய தொழிலதிபர்; 7 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

ஸ்பெயினில் உள்ள தொழிலதிபர் ஒருவர் தனது முன்னாள் மனைவிக்கு 25 வருடங்களாக வீட்டு வேலை செய்ததற்காக 204,000 யூரோக்கள் (தோராயமாக ரூ. 1.7 கோடி) இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது மனைவி இவானா மோரல் மிகப்பெரிய தொகையினை ஜீவனாம்சமாக பெற உள்ளார். இவானா மோரல் (Ivana Moral) தனது கணவரை 1995-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் 2020-ல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்களது 25 வருட திருமணத்தின் போது, ​​அவரது கணவர் வெற்றிகரமான … Read more

கமல்ஹாசன் மெகா கூட்டணி : #STR48 படத்திற்காக கமல்-சிம்பு-தேசிங் பெரியசாமி மற்றும் அனிருத் கைகோர்ப்பு

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சிலம்பரசனின் #STR48 படத்தை கமலஹாசன் தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. சிம்பு நடிக்க இருக்கும் இந்தப் படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பது இது முதல்முறை. அதேபோல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இந்த திரைப்படம் சிலம்பரசன் நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் … Read more

உதகை உருது பள்ளியில் போட்டி போட்டு சத்து மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகளில் ஒருவர் உயிரிழப்பு!

நீலகிரி: உதகை உருது பள்ளியில் போட்டி போட்டு சத்து மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகளவு சத்து மாத்திரைகள் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 6-ம் தேதி 4 பள்ளி மாணவிகள் ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கோவை மருத்துவமனையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் மாணவி உயிரிழந்துள்ளார்.

'கன்னியாகுமரி டு டெல்லி' – பல்வேறு கோரிக்கைகள்… நீதி கேட்டு பயணிக்கும் விவசாயிகள் குழு!

`வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கான நிரந்தரச் சட்டம் கொண்டு வர வேண்டும். மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக் கூடாது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளை நிலங்களை விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் கைப்பற்றக்கூடாது. சந்தைப்படுத்துவதில் இந்திய விவசாயிகள், உள்நாட்டு வணிகர்கள், சிறுகுறு தொழில் முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய சந்தை உத்தரவாத சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். பருவநிலை மாற்றத்திலிருந்து விவசாயத்தைப் பாதுகாக்க மேற்கு … Read more

கொடூரமான துஷ்பிரயோகம்… 400 ஆண்டுகள்: இழப்பீடு தரக் கோரும் பிரித்தானிய எம்.பி

பிரித்தானியாவின் முன்னாள் கரீபியன் காலனி நாடுகளுக்கு, 400 ஆண்டுகள் இழைத்த கொடுமைகளுக்காக கண்டிப்பாக இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கரீபியன் நாடுகளுக்கு கிரெனடா நாட்டில் தங்கள் மூதாதையர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய கோடீஸ்வர குடும்பத்தினரை நினைவூட்டிய தொழில் கட்சி எம்.பி கிளைவ் லூயிஸ், கரீபியன் நாடுகளுக்கு பிரித்தானியா அரசாங்கமும் இழப்பீடு அளிப்பதில் தவறில்லை என்றார். பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பிரித்தானியா தனது கடந்த காலத்தை எதிர்கொண்டு அதைச் சரிச் செய்ய … Read more