அதானி தொடர் பங்கு வெளியீடு: அதிக முதலீடு செய்ய முன்வந்த அபுதாபி நிறுவனம்… பின்னணி என்ன?

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தொடர் பங்கு  வெளியீடு (FPO) ரத்து செய்யப்பட்டு விட்ட காரணத்தினால் அந்தப் பங்கிற்கு விண்ணப்பித்த முதலீட்டாளர்களுக்கு அந்த எஃப்.பி.ஓ பணத்தை திருப்பி அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த எஃப்.பி.ஓ வெளியீட்டுக்கு அதிக தொகையை முதலீடு செய்ய முன்வந்த அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட ஐஹெச்சி  (International Holding Company)  அபுதாபி நிறுவனம் தாம் முதலீடு செய்ய விண்ணப்பித்த தொகை மீண்டும் தமது வங்கிக் கணக்கிற்கு திரும்ப அளிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. அதானி போர்ட்ஸ் … Read more

தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி

தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், இலுப்பைக்குடியில் அமைந்துள்ளது. சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.நகரத்தார் திருப்பணி … Read more

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை நிற உடை அணிந்து பாதயாத்திரை வந்து சாமி தரிசனம் செய்த பின்பு கடலில் நீராடி தங்கள் விரதத்தை முடித்தனர்.

சீனாவின் உளவு பலூன் தான் என்பதை ரகசியமாக வைத்திருந்த ஜோ பைடன்? வெளியான பரபரப்பு தகவல்

சீனாவின் உளவு பலூன் அமெரிக்க வான்வெளியில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக இருப்பதை ஜோ பைடன் அறிந்திருந்தார் என குடியரசுக் கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். உளவு பலூன் கடந்த ஜனவரி 28ஆம் திகதி அன்று சீனாவின் உளவு பலூன் மற்றும் அதன் ஆபத்தான அச்சுறுத்தல் குறித்து ப்ளூம்பெர்க்கின் அறிக்கை ஜனாதிபதி பைடனுக்கு தெரிவித்துள்ளது. ஆனால், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கனின் சந்திப்பு திட்டம் பாதிக்கப்படும் என பைடன் பயந்துள்ளார். எனவே, … Read more

உலகளவில் 67.61 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.61 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.61 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.70 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.84 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,770,528 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,770,528 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 676,108,781 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 648,472,635 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,726  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிப்-05: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அல் நஸருக்காக முதல் கோல் அடித்த ரொனால்டோ..சிலாகித்து வெளியிட்ட பதிவு

சவுதி லீக்கில் முதல் கோல் அடித்ததில் மகிழ்ச்சி என கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார். அல் நஸர் டிரா கடந்த 3ஆம் திகதி நடந்த அல் பாடெஹ் அணிக்கு எதிரானப் போட்டியை அல் நஸர் அணி டிரா செய்தது. இந்தப் போட்டியில் தோல்வி நிலையில் இருந்த அல் நஸர் அணியை, பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ காப்பாற்றினார். @Cristiano @Cristiano ரொனால்டோவின் முதல் கோல் சவுதி அரேபியாவில் அல் நஸர் அணிக்காக ரொனால்டோ அடித்த முதல் … Read more

பிரித்தானியாவுக்கு அனுப்ப மாட்டோம்! 79 வயது மூதாட்டியை பிணைக் கைதியாக வைத்திருக்கும் மருத்துவர்கள்

துருக்கியில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரித்தானிய மூதாட்டியை, மருத்துவ கட்டணம் செலுத்தப்படும் வரை விடுவிக்க மாட்டோம் என மருத்துவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய மூதாட்டி பிரித்தானியாவைச் சேர்ந்த 79 வயது மூதாட்டி ஒருவர், துருக்கி நாட்டிற்கு நண்பர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் அவருக்கு மாரடைப்பு உண்டானதாக அவரது மகள் லூசி க்ரோவ்ஸ் கூறியுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. … Read more

அவுஸ்திரேலிய லீக் தொடரை 5வது முறையாக கைப்பற்றிய அணி!

பிக் பாஷ் லீக் டி20 தொடரை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 5வது முறையாக கைப்பற்றியது. இறுதிப் போட்டி பெர்த்தில் நடந்த இறுதிப் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 175 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக மெக்ஸ்வீனி 41 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய பெர்த் அணியில் ஸ்டீபன்21 ஓட்டங்களும், பான்கிராஃப்ட் 15 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். Sam Heazlett decided to get a wriggle on. … Read more