வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: 48,600 விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும். 27 மாவட்டங்களில் 48,600 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட் கார் விபத்து – பிசிசிஐ வெளியிட்ட முதற்கட்ட மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?

ரிஷப் பண்ட் இன்று (டிசம்பர் 30) காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த போது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு ஏற்பட்ட காயம் மற்றும் அவரது விபத்து தொடர்பான தகவல்களை பிசிசிஐ அறிக்கையாக   வெளியிட்டுள்ளது. ரிஷப் பண்ட் அதில், “இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், இன்று (வெள்ளி) அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம் … Read more

மேலும் நான்கு சிறார்கள்… 30ஐ தொட்ட எண்ணிக்கை: பிரித்தானிய தாய்மார்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு மேலும் நான்கு சிறார்கள் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எண்ணிக்கை 30 என உறுதி இதனால், பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு பலியாகியுள்ள 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் எண்ணிக்கை 30 என உறுதியாகியுள்ளது. மேலும், ஸ்கொட்லாந்தில் 10 வயதுக்கு உட்பட்ட இரு சிறார்கள் அக்டோபர் 3ம் திகதிக்கு பின்னர் Strep A பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். @swns பெல்ஃபாஸ்ட் மற்றும் வேல்ஸ் பகுதியில் மூன்று சிறார்கள் மரணமடைந்துள்ளதை … Read more

மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பான்டர்களை பொருத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் 4,997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்  அதிக மீன் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்கள், மேலும், ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் டிரான்ஸ்பாண்டர் கருவிகளை மீன்பிடி படகுகளில் பொருத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் … Read more

இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நபர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைப்பு

புதுக்கோட்டை: இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நபர்களை கண்டறிய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

இருவிரல் சோதனை, கருக்கலைப்பு, ஆடை உரிமை; பெண்கள் தொடர்பான முக்கிய தீர்ப்புகள்! #Rewind2022

பல அழியாத நினைவுகளையும் சுவடுகளையும் தாங்கியபடி விடைபெறுகிறது 2022-ம் ஆண்டு. நீதித்துறையிலும் 2022-ம் ஆண்டு பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளும், தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் நலன், பெண்ணுரிமை சார்ந்த சில வழக்குகள், தீர்ப்புகள் பற்றி பார்ப்போம்.. கருக்கலைப்பு மணமாகாத பெணகளின் கருக்கலைப்பு உரிமை திருமணமாகாத பெண் ஒருவர், 22 வாரங்கள் ஆன தனது சிசுவை கருக்கலைப்பு செய்யக்கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தை நாடியுனார். திருமணமாகாத பெண்கள், சம்மதத்துடன் உறவில் ஈடுபட்டு, … Read more

அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனிக்கு புத்தாண்டு வாழ்த்து கிடையாது., நட்பு நாடுகளுக்கு மட்டும் அனுப்பிய புடின்

அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு புதினிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்துகள் கிடையாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜேர்மன் சேன்செலர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்களை பெற மாட்டார்கள் என ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது. வாழ்த்துச் செய்தி இந்த வார இறுதியில் உலகம் புத்தாண்டை கொண்டாட தயாராகி வரும் நிலையில், துருக்கி, சிரியா, வெனிசுலா மற்றும் சீனா … Read more

தனியார் பள்ளிகளுக்கு இணைய வழி அங்கீகாரம் – செயலி! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு இணைய வழியே அங்கீகாரம் வழங்கும் முறையையும், இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான செயலியையும்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (30.12.2022) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் தனியார் பள்ளிகளை தொடங்குதல், தொடர் அங்கீகாரம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெறும் சேவைகளை இணையம் வாயிலாகப் பெறும் வகையில், இணைய முகப்பினையும் அலுவலர்களுக்கான செயலியையும் தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வித் துறையின் https://tnschools.gov.in என்ற … Read more

மாநில தேர்தல் அதிகாரியின் கடிதத்தால் எந்த தாக்கமும் ஏற்படாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்..!!

சென்னை: ஜி-20 மாநாடு தொடர்பான கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அழைக்கப்பட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாநில தேர்தல் அதிகாரியின் கடிதத்தால் எந்த தாக்கமும் ஏற்படாது எனவும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.