ஊட்டி வரை எதிரொலித்த மாண்டஸ் புயலின் தாக்கம்; கடும் பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மாண்டஸ் புயலாக மாறியிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் மாண்டஸ் புயலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. ஊட்டியில் மழை நீலகிரியில் தற்போது பனிக்காலம் என்றாலும், இன்று காலை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடுமையான பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. … Read more