பிரதமர் மோடியின் தயார் காலமானார்

அகமதாபாத்: பிரதமர் மோடியின் தயார் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

கன்னியாகுமரியில் பணிக்கு சென்றபோது காட்டுயானை மிதித்து பெண் தொழிலாளி பலி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சிற்றோர் சிலோன் காலனியில் பணிக்கு சென்றபோது காட்டுயானை மிதித்து பெண் தொழிலாளி உயிரிழந்துள்ளார். ரப்பர் தோட்டத்திற்கு பால் வடிக்கும் தொழிலுக்கு சென்றபோது யானை தாக்கியதில் பெண் தொழிலாளி இறந்தார்.

"ஜனவரி முதல் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை”- புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுவை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000/- உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழங்க முடிவு செய்துள்ளோம். பொங்கலுக்குள் இந்த உதவித்தொகை வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் ஆகியவையும் ஜனவரி முதல் வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். புதுச்சேரி … Read more

ஜாம்பவான் பீலேவுக்கு பிரபல வீரர்களான ரொனால்டோ மற்றும் நெய்மர் உருக்கமான இரங்கல் பதிவு

கால்பந்து நட்சத்திரங்களான மெஸ்சி, ரொனால்டோ மற்றும் நெய்மர் ஆகியோர் மறைந்த ஜாம்பவான் பீலேவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பீலேவுக்கு கால்பந்து நட்சத்திரங்களின் இரங்கல் மெஸ்சி தனது இரங்கல் பதிவில், ‘உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் பீலே’ என குறிப்பிட்டார். அவரைப் போல ரொனால்டோ தனது பதிவில், ‘பிரேசிலைச் சேர்ந்த அனைவருக்கும், குறிப்பாக Edson Arantes do Nascimento-வின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். முழு கால்பந்து உலகமும் தற்போது தழுவிக் கொண்டிருக்கும் வலியை வெளிப்படுத்த நித்திய அரசர் … Read more

உலகளவில் 66.37 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 66.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 66.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.93 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 63.58 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,693,200 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,693,200 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 663,761,427 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 635,853,503 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,754 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் பீலே உயிரிழந்தார்

பிரேசில்: கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோய் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 82. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரும், மூன்று முறை கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணியின் நட்சத்திர வீரருமான பீலே, புற்றுநோயால் நீண்ட நாள்களாக பாதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச. 29) உயிரிழந்தார் என அவரின் குடும்பத்தினரும், ஏஜென்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர், பீலேவின் மகளான கெலி நாசிமெண்டோ தனது இன்ஸ்டாகிராமில், படுக்கையில் படுத்திருக்கும் பீலேவின் … Read more

டிச.30: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

நட்சத்திரப் பலன்கள்: டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

கிறிஸ்துமஸ் ஈவ் அன்று திரும்பி வருவேன் எனக்கூறி சென்ற தாய்.. வீட்டின் அருகே சடலமாக மீட்பு.. கதறும் குடும்பம்

அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலின் கோர தாண்டவம் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேரழிவு பனிப்புயல் அமெரிக்காவில் உயிர் பலி வாங்கி வருகிறது. குறிப்பாக, Buffalo பகுதியில் பலர் பனியில் சிக்கிய உயிரிழந்துள்ளனர். கேசி மெக்கரோன் என்பவரது 52 வயது தாய் மோனிக் அலெக்ஸாண்டர், ‘கிறிஸ்துமஸ் ஈவ் அன்று திரும்ப வருவேன்’ எனக் கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் சில மணிநேரங்களுக்கு பிறகு தாயிடம் இருந்து … Read more