மாவட்ட ஆட்சியர் சொன்ன ரூல்; அதிகாரிகள் மீறினார்களா? வேதனை பகிரும் கரும்பு விவசாயிகள்; நடந்தது என்ன?

தமிழ்நாட்டிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு பரிசுடன் செங்கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஒரு கரும்பு 33 ரூபாய் என மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் வழங்கும் பணி துவங்கியுள்ளது. கடந்த வருடம் பொங்கல் தொகுப்பு வழங்கும்போது இடைத்தரகர்கள், அரசியல்வாதிகளின் தலையீடுகள் போன்றவையால் பல சர்ச்சைகள் எழுந்தது. ஆகவே, இம்முறை 6 அடி உயரமுள்ள கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் … Read more

கனடாவில் எட்டு இளம்பெண்களிடம் சிக்கி உயிரை இழந்த நபர் இவர்தான்

கனடாவின் ரொரன்றோவில், வீடற்ற நபர் ஒருவரை எட்டு இளம்பெண்கள் சேர்ந்து கொடூரமாக படுகொலை செய்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தற்போது அவரது புகைப்படம் முதலான விவரங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். தாக்கப்பட்ட வீடற்ற நபர் கடந்த மாதம் 18ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, ரொரன்றோவில், யார்க் பல்கலை பகுதியில், 59 வயதுடைய வீடற்ற ஆண் ஒருவரை இளம்பெண்கள் சிலர் தாக்குவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது படுகாயமடைந்த நிலையில் கிடந்த அந்த நபர் … Read more

நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு பா.ஜ.க. ஆட்சியில்தான் அமல்படுத்தப்பட்டது! முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்…

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,   நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியல் கொண்டு வரப்பட்டு பா.ஜ.க. ஆட்சியில்தான் அமல்படுத்தப்பட்டது என்று கூறியதுடன்,  நீட் தேர்வை தமிழ்நாட்டில் தாங்கள் அனுமதிக்கவில்லை என விளக்கம் அளித்தார். நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஆளுநர் விவகாரம், புதுக்கோட்டை விவகாரம் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கு … Read more

ஆவின் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கத்துக்கு இடைக்கால தடை! உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீஸும் கொடுக்காமல் 25 ஊழியர்களை திடீர் என  பணி நீக்கம் செய்து எடுக்கப்பட்ட  உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறி  திமுக அரசு ஏராளமானோரை பணி நீக்கம் செய்தது. அதன்படி,  தஞ்சை, திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் கடந்த 2020-2021ம் … Read more

கிராமப்புற மக்களுக்கும் சிறந்த மருத்துவம் அளிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி: கிராமப்புற மக்களுக்கும் சிறந்த மருத்துவம் அளிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை புதுச்சேரியில் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

"ஆதிக்கப் பேச்சை கைவிடவேண்டும்; முஸ்லிம்கள் இங்கு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை!'' – மோகன் பகவத்

மதம், கலாசாரம் எதுவாக இருந்தாலும், இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே என்று கூறிவரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தற்போது, `முஸ்லிம்கள் இங்கு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், தங்களின் ஆதிக்க பேச்சை அவர்கள் கைவிடவேண்டும்’ என்று கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சியொன்றில் பேசிய மோகன் பகவத், “இந்துஸ்தானம் இந்துஸ்தானமாகவே இருக்க வேண்டும். இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், முஸ்லிம்கள் தங்களின் மேலாதிக்க பேச்சுகளை விட்டுவிட … Read more

மன்னர் சார்லஸ் தனது முடிசூட்டு விழாவுக்காக வைத்துள்ள திட்டம்

பிரித்தானிய ராஜ குடும்ப பொறுப்புக்களை உதறியபிறகு, இளவரசர் ஹரி தொடர்ந்து பல கௌரவங்களை இழந்துவருகிறார். அவ்வகையில், மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவின்போதும், ஒரு முக்கியமான நிகழ்வில் ஹரி புறக்கணிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. முடிசூட்டு விழாவில் பல்லாண்டு கால மரபுகளை மாற்றிவரும் மன்னர் மன்னர் சார்லஸ், பல்லாண்டு காலமாக ராஜ குடும்பத்தில் பின்பற்றப்பட்டுவந்த மரபுகள் பலவற்றை மாற்றிவருகிறார். அவ்வகையில், முடிசூட்டு விழாவைப் பொருத்தவரை, முன்போலில்லாமல் குறைந்த நேரத்தில் நிகழ்ச்சிகள் முடிவடைய இருக்கின்றன. பொதுவாக, மன்னர் அல்லது மகாராணி முடிசூட்டப்பட்டதும், … Read more

மின்வாரியத்தில் ஆட்குறைப்பு செய்ய நடவடிக்கை எடுப்பதா? தமிழகஅரசுக்கு ராமதாஸ் கேள்வி…

சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ள நிலையில், தமிழகஅரசு ஊதிய உயர்வு வழங்காமல் இழுத்தடிக்கும் நிலையில்,  மின் வாரியத்தில் பணிச்சுமையை குறைக்கும் வகையில், பணியிடங்களை ஒழிக்கவும், இனிமேல் தேவையான  பணிகளுக்கு காண்டிராக்ட் மூலம் ஆள் எடுக்க முடிவு செய்துள்ளது. இது மின்வாரிய ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி … Read more

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..!!

மதுரை: 2019-ல் நடந்த நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முகவர்கள் 2 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மதுரையில் தங்கி சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும், முகவர்கள் இருவரும் தங்களது பாஸ்ப்போர்ட்களை சமர்ப்பிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைகிளை நிபந்தனை விதித்தது.