விவசாயிகளுக்கு 50 ஆயிரமாவது இலவச மின் இணைப்புக்கான ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விவசாயிகளுக்கு 50 ஆயிரமாவது இலவச மின் இணைப்புக்கான ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தநிகழ்வின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வாயிலாக நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட 50000 விவசாய பயனாளர்களில் 50000 வது பயனாளி உள்பட 5 நபர்களுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்கினார், சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை: ஓபிஎஸ் தரப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் வாதம்

டெல்லி: உணவு இடைவேளைக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் வாதம் எடுத்து வைக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் இல்லாத 2 பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே பழனிசாமி தரப்பு தான் என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.

காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி| 3 soldiers killed in Kashmir

ஸ்ரீநகர்: காஷ்மீரில் செக்டர் பகுதியில் ரோந்து பணியின் போது 3 வீரர்கள் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் செக்டரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ராணுவ வீரர்கள் 3 பேர் எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் தவறி விழுந்தனர். இதில் சிக்கி அவர் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களது உடல்கள் பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டது. இவர்கள் … Read more

`மனைவி பணத்தில் தொழில் தொடங்கி உச்சம் தொட்ட தொழிலதிபர்கள்’ – ட்விட்டரில் வைரலான பதிவு!

மனைவியின் சம்பாத்தியத்தில் தொழில் தொடங்கி, உச்சம் தொட்ட வெற்றியாளர்களாக வலம்வரும் `இன்ஃபோசிஸ்’ நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் குறித்த ட்விட்டர் பயனரின் பதிவு வைரலாகி வருகிறது. கணவன் என்பவர் வேலைக்குச் செல்ல வேண்டும்; மனைவி வீடு மற்றும் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. ஆணுக்குச் சமமாக பெண்கள் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வரும் 21-ம் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம். ஆனாலும் கூட, வீட்டைப் பராமரிக்கவோ அல்லது மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்வதையோ விரும்பாத ஆண்கள் இன்னமும் … Read more

ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்தேன்! கணவர் பிரிந்துவிட்டதால் தனிமை.. நடிகை சுதா கண்ணீர்

ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்து கடனாளியாகிவிட்டேன் என நடிகை சுதா கூறியுள்ளார். வசதியாக வளர்ந்தேன் தமிழில் குரு சிஷ்யன், வா அருகில் வா, டூயட், 7ஜி ரெயின்போ காலனி, வேதாளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் சுதா. இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். அவர் தனது வாழ்வில் சந்தித்த துயரமான அனுபவங்கள் குறித்து கண்ணீருடன் சமீபத்தில் பேசினார். சுதா கூறுகையில், பணக்கார குடும்பத்தை சேர்ந்த நான் குழந்தை பருவத்தில் வசதியாக … Read more

ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம்! சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல்

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம் தெரிவித்து சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில்,  ஆளுநரின் மரபுமீறிய பேச்சு, அதுகுறித்து மரபு மீறிய தீர்மானம், ஆளுநரின் வெளிநடப்பு என பல மரபு மீறிய செயல்கள் அரங்கேறின.  இதையடுத்து,  ஆளுநரின் சட்டப்பேரவை உரைக்கு வருத்தமும், நன்றியும் பதிவு செய்ய கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் எழுதினார். அதில், . சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் … Read more

ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் போது லஞ்சம் பெற்று பணி ஆணை பெற்றதாக 25 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகளாக பணியில் நீடிக்கும் நிலையில் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

துணிவு திரைபடக் கொண்டாட்டம்: லாரி மேலேறி நடனம்; தவறி விழுந்து உயிரிழந்த ரசிகர்!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இன்று நடிகர் அஜித், விஜய் நடித்த துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. பல வருடங்களுக்குப் பிறகு இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. அதேவேளையில், பல்வேறு இடங்களிலும் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையும் காணமுடிந்தது. ரோகிணி திரையரங்கம் அந்த வகையில் சென்னை, ரோகிணி திரையரங்கில் இன்று நள்ளிரவு 1 மணிக்கு அஜித் நடித்த துணிவு திரைப்படமும், அதிகாலை … Read more

இனிமேல் எனக்காக செலவு இருக்காது! 16 வயது மாணவி தற்கொலை… கடைசியாக எழுதிய கடிதம்

தமிழகத்தில் பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு 16 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண் அறுவை சிகிச்சை சேலம் மாவட்டத்தின் சித்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி மெய்யப்பன் – மைதிலி. இவர்கள் மகள் திவ்யா (16) அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திவ்யாவுக்கு கடந்த ஆண்டு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் மூக்கு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் … Read more