கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

திருவாரூர்: கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் நாளை(08-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி., எம்எல்ஏக்களின் மீது 56 வழக்குகள் பதிவு

புதுடெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. இந்தக்கூட்டத்தொடர்தான், தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிற கடைசிக்கூட்டத்தொடர் ஆகும். இந்தக் கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடக்கும். 17 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் 29-ந் தேதி முடிவுக்கு வருகிறது.இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. நிர்வாகத்தை பலப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், பொறுப்புணர்வை அதிகரித்தல் மற்றும் பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் தேர்தல் செயல்முறையை சீர்திருத்துதல் ஆகிய நோக்கங்களுடன் தற்போதுள்ள … Read more

செங்கல்பட்டு: கருத்தடை செய்த தெருநாய்கள் உயிரிழப்பு!விசாரணையில் கால்நடை பராமரிப்புத் துறை…

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கருத்தடை சிகிச்சை செய்த தெருநாய்கள் இறந்தது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை கிளப்பியது. செங்கல்பட்டு நகராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாகிவிட்டதாகவும், அதை கட்டுப்படுத்துமாறும் நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, தெருநாய்களை கணக்கெடுக்கும் பணியில் சுமார் 20 நாட்களுக்கு முன்பு ஈடுபட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் 1,350 தெருநாய்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதிகரிக்கும் தெருநாய்கள்… கடிவாங்கி தடுப்பூசிக்கு திண்டாடும் மக்கள்! … Read more

134 இடங்களில் வென்று பாஜகவிடம் இருந்து டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது ஆளும் கட்சியான ஆம் ஆத்மி….

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. மொத்தம் 250 வார்டுகளில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஏற்கனவே மூன்று முறை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளது. ‘வெற்றி குறித்து கூறிய மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,  டெல்லியில் பணியாற்ற பாஜக மற்றும் காங்கிரஸின் … Read more

நடப்பாண்டில் 3வது முறையாக முழுகொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை!

சேலம்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக முழுகொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 10,662 கனஅடி நீரும் அணை சுரங்க மின்நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

கொரோனா உயிரிழப்பு; உறவினர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்குகிறோம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மேலவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து இன்று பேசினார். அவர் பேசும்போது, பேரிடர் மேலாண் சட்டம் 2005-ன் கீழ் தேசிய பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட … Read more

“மறைந்த நடிகர் வைரவனின் குழந்தைகளின் படிப்புச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்"-விஷ்ணு விஷால்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘வெண்ணிலா கபடிக் குழு’. இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்த ஹரி வைரவன். ‘குள்ளநரி கூட்டம்’, ‘நான் மகான் அல்ல’ திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ஹரி வைரவன் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் . சர்க்கரை நோய், அதிக உடல் எடை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள் என்று சமீபத்தில் அவரது மனைவியும் உதவி கோரியிருந்தார். … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிரான வழக்கு! உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை…

சென்னை: தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என  சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முன்னதாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் என்ற பெயரில் கண்துடைப்பு கூட்டத்தை நடத்திய தமிழக அரசு, மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல், மின் கட்டணத்தை உயர்த்தியது. அதுபோல, … Read more

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -1க்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை:  ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -1க்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் -1 கணினி வழியாக அக்.15 முதல் 19 வரை காலை, மாலை என இருவேளைகளில் நடைபெற்றது. 2022க்கான  தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் எழுதினர்.

எங்களுக்கு ராம ராஜ்ஜியம் வேண்டும் உடுப்பி பெஜாவர் மடாதிபதி உறுதி| Dinamalar

மாண்டியா : ”எங்களுக்கு ராவண ராஜ்ஜியம் வேண்டாம். ராம ராஜ்ஜியம் வேண்டும். ராமரின் கொள்கைகளையும், குணங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும்,” என உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் தெரிவித்தார். மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது: ராமனிடம் சரணடைந்தால், மனித துன்பங்கள் அனைத்தும் தீரும். எனவே, அனைவரும் ஸ்ரீராமரிடம் சரணடைந்து, ராம ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும். எங்களுக்கு ராவண ராஜ்ஜியம் வேண்டாம். ராமரின் கொள்கைகளையும், குணங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மயை வளர்த்து கொள்ள … Read more