மெரினா கடற்கரையில் சேதமடைந்த மாற்று திறனாளிகள் மரப்பாதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை மாநகராட்சி

மெரினா கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் மரபாலம் அமைக்கப்பட்டது இரண்டு வாரங்களுக்கு முன் இதனை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். மாண்டஸ் புயல் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட இந்த மரபாலம் சேதமடைந்துள்ளது இதனால் இந்தப் பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஈரம் மற்றும் காற்றில் துருப்பிடிக்காமல் இருக்க 263 மீட்டர் நீளத்துக்கு மரத்தால் ஆன பாலம் அமைக்கப்பட்டு கடலில் இருந்து 20 மீட்டர் முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து பார்க்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டு … Read more

மாண்டஸ் புயல் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திண்டுக்கல்: மாண்டஸ் புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதியில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சருமப் பராமரிப்பில் இன்ஃப்ளூயன்சர்கள் சொல்வதைப் பின்பற்றலாமா? எச்சரிக்கும் மருத்துவ வல்லுனர்கள்!

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தும் influencer சொல்வதைக் கேட்டு சருமப் பராமரிப்பில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். நாகரிகம் மிக்க இக்காலத்தில், அழகு சாதனப் பொருள்களின் தேவை மிக இன்றியமையாதது. இன்றைய டிஜிட்டல் யுகத்தின் உதவியால் அழகு சாதனத்துறையானது இன்னும் வலுபெற்றுள்ளது. அதே நேரம், சமூக வலைதளங்களில் அழகுக்கலை குறிப்பாக சருமப் பராமரிப்பு தொடர்பான பல தவறான தகவல்களால் மக்கள் வழி நடத்தப்படுவதாக, மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். சருமப் பராமரிப்பு நடைமுறையாகட்டும், ரெட்டினாய்டுகள் மற்றும் … Read more

பாட்டி டயானாவுடன் பேசிய இளவரசர் ஹரியின் மகன் ஆர்ச்சி!

இளவரசர் ஹரியின் மகன் ஆர்ச்சி நெட்ஃபிளிக்ஸ் வீடியோவில் ‘பாட்டி டயானா’விடம் பேசும் வீடியோகாட்சி இடம்பெற்றுள்ளது. இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்லின் மகன் ஆர்ச்சி ஹாரிசன், நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள ஆவணத்தொடரின் எபிசோட் ஒன்றில் இளவரசி டயானாவின் புகைப்படத்துடன் பேசுவதைக் காணலாம். அந்தக் காட்சியில், 2019-ஆம் ஆண்டில் தங்களுக்கு பிறந்த முதல் குழந்தையான ஆர்ச்சிக்கு அவரது தந்தைவழி பாட்டியான இளவரசி டயானாவை, அவரது புகைப்படம் ஒன்றை காட்டி மேகன் மார்க்கல் அறிமுகப்படுத்துகிறார். Tim Graham/Netflix குழந்தை ஆர்ச்சி தனது … Read more

கிழக்கு கடற்கரை சாலையில் வெளுத்து வாங்கும் மழை… சென்னையில் போக்குவரத்து பெருமளவு முடங்கியது… வீடியோ

மாண்டஸ் புயல் காரணமாக கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதை ஒட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் அலுவலகங்கள் இன்று மதியத்துடன் தங்கள் அலுவலகங்களை மூடியது. ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டதை ஒட்டி சாலைகளில் போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டதால் பிற்பகலில் பல்வேறு சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. … Read more

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை குத்தாலம் அருகே பெரியேரி பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சந்திரா (45) என்பவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய சந்திராவை காப்பாற்ற சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மணிகணடனும் உயிரிழந்தார்.

ஈரோடு: உலா வரும் 40 காட்டு யானைகள்; மோதலில் பெண் யானை பலி! – பீதியில் கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா, மல்லன்குழி பஞ்சாயத்துக்குட்பட்ட அருள்வாடி கிராமத்தில் கடந்த 2 நாள்களாக சுமார் 40 காட்டு யானைகள் முகாமிட்டிருக்கின்றன. தமிழக-கர்நாடக எல்லையில் இந்தக் கிராமத்தில் 3,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்குமாறு தமிழக வனத்துறையினரைக் கேட்டால் அருகில் கர்நாடக வனப்பகுதி இருப்பதால் அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தட்டிக் கழித்து விடுகிறார்களாம். நீண்ட காலமாக இந்தப் பிரச்னை நீடித்து வரும் நிலையில், கடந்த 2 தினங்களாக … Read more

நாளை (10ந்தேதி) நடைபெற இருந்த அண்ணா, சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு…

சென்னை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. மற்றும் சென்னை பல்கலை. தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை மிரட்டி வரும் மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இதனால், நேற்றுமுதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று இரவு அதிவேக சூறைக்காற்றுடன் … Read more

மேகன் சொல்வது சுத்தப்பொய்… ஹரி மேகன் நெட்ப்ளிக்ஸ் தொடர் குறித்து மீண்டும் விமர்சனம்

இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்டு வரும் நெட்ப்ளிக்ஸ் தொடரில் பல விடயங்கள் மாற்றி மாற்றி சொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தொலைக்காட்சிப் பிரபலங்கள் முதல், மேகனுடைய சொந்தக் குடும்பத்தார் வரை மேகனை கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள். தன் சகோதரி மகளை திருமணத்திற்கு வர அனுமதிக்கவில்லை என்று கூறிய மேகன் சமீபத்தில் வெளியான தொடரின் எபிசோட் ஒன்றில், தனது சகோதரியின் மகளான Ashleigh Hale தன்னுடைய திருமணத்துக்கு வருவதற்கு அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த … Read more

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 2.92 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 1.51 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று வரை மொத்தம் 81.73 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.