ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மாநிலங்களின் பன்முகத்தன்மை: குடியரசு தின அணிவகுப்பில் தெரிந்த உண்மை| The Republic Day parade showcased the diversity of the states

புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் கடமைப்பாதையில் நடக்கும் அணிவகுப்பில் மாநிங்களின் கலாசாரத்தை விளக்கும் வகையில் பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இந்த அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் 6 அலங்கார ஊர்திகள் என 23 ஊர்திகள் கலந்து கொண்டன. இவை இந்தியாவின் கலாசார பாரம்பரியம், பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் தேச பாதுகாப்பை ஊக்கப்படுத்துவதாக இருந்தன. குடியரசு தின விழாவில், மகளிர் சக்தியை குறிக்கும் … Read more

பழநி முருகன் உபதெய்வக் கோயில்களில் கும்பாபிஷேகம் – திரளாகப் பங்கேற்ற பக்தர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளைக் காலை நடைபெறவுள்ளது. கடந்த 18 -ம் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. யாக பூஜைகளுக்காக 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கடந்த 23 -ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை முதல் 6 -ம் கால யாக பூஜைகள் நடக்கின்றன. இதனைத்தொடர்ந்து இன்று மாலை 7 -ம் கால யாக பூஜைகள் தொடங்கவுள்ளன. இன்று காலை 10 மணியளவில் படிப்பாதை மற்றும் மரத்தடிகளில் உள்ள தெய்வங்களுக்கான … Read more

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த 'தல' தோனி!

‘தல’ என செல்லமாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி திடீரென இந்திய வீரர்களை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடரில் வென்ற பிறகு, அதே அணியுடன் இந்தியா இப்போது ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1 வரை மூன்று T20I போட்டிகளில் விளையாடவுள்ளது. தொடரின் முதல் T20I போட்டி வெள்ளிக்கிழமை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை முன்னிட்டு, … Read more

ஆளுநர் தேநீர் விருந்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை

சென்னை: ஆளுநர் தேநீர் விருந்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியூரில் இருப்பதால் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.

கிருஷ்ணகிரி: “என் நிலத்துல பொருள்களை எடுத்தாரு, கொன்னுட்டேன்!"- விவசாயி கொலை; முதியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த ராமச்சந்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணப்பா (52). இன்று அதிகாலை, அப்பகுதியிலுள்ள விளைநிலம் அருகே, கத்திக் குத்து காயங்களுடன் கற்களால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அவரின் சடலத்தை மீட்ட பேரிகை போலீஸார் விசாரணை நடத்தியதில், கிருஷ்ணப்பாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த, இவரது விளைநிலத்துக்கு அருகிலுள்ள விவசாயக்கூலி அப்பையப்பாவுக்கும் (60) முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. கொலைசெய்யப்பட்ட கிருஷ்ணப்பா அப்பையப்பாவை பிடித்து விசாரித்ததில், கிருஷ்ணப்பா விளைநிலத்துக்கு அருகே பெங்களூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் … Read more

மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். டயர் வெடித்து சாலையில் வேன் கவிழ்ந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படூர் கிராமத்திலிருந்து சென்னை வேளச்சேரிக்கு திருமணத்துக்காக சென்றபோது வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது

இந்தியாவுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து| World leaders congratulate India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரஷ்யா அதிபர், நேபாள பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி ரஷ்ய அதிபர் புடின் குடியரசு தின வாழ்த்துகளை ஏற்று கொள்ளுங்கள். பொருளாதாரம், வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் சாதனை அனைவராலும் அறியப்பட்டது. உலக ஸ்திரத்தன்மைக்கும், பிராந்திய மற்றும் சர்வதேச திட்டங்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதற்கு இந்தியா ஆக்கப்பூர்வமான பணிகளை … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: “விடுதலை பெற்றும் சிறப்பு முகாமில் வதைப்பதா?" – அரசுக்கு சீமான் கோரிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தம்பி ராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி முருகன், தம்பி சாந்தன் ஆகிய நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள்கூட இல்லாது, அவதிப்பட்டு வரும் செய்தி பெரும் வேதனையளிக்கிறது. சிறைக்கொட்டடியிலிருந்து விடுதலைபெற்ற அவர்கள், அதனைவிடக் கொடுமையான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு, வதைக்கப்படுவது எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. சீமான் தம்பி ராபர்ட் பயசும், … Read more

கொடிநாள் நிதியை அதிகளவில் திரட்டியதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதிக்கு ஆளுநர் பரிசு

சென்னை: கொடிநாள் நிதியை அதிகளவில் திரட்டியதற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதிக்கு குடியரசு தின விழாவை ஒட்டி நடைபெறும் தேநீர் விருந்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசு வழங்கினார். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற சிறந்த ஊர்திக்கான முதல் பரிசை தமிழ்நாடு காவல்துறை தட்டிச் சென்றது. தமிழ்நாடு காவல்துறை ஊர்திக்கான பரிசை டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.