250 பேருக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்கல்| Distribution of red ration card to 250 people

காரைக்கால் : நெடுங்காடு தொகுதியை சேர்ந்த 250 பயனாளி களுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா சிவப்பு ரேஷன் கார்டு வழங்கினார். காரைக்கால் மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நெடுங்காடு தொகுதியில் 250 பயனாளிகளுக்கு நேற்று முன்தினம் அமைச்சர் சந்திரபிரியங்கா சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை வழங்கினார். இதில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். … Read more

சென்னை திமுக கவுன்சிலரின் கணவர் மாமூல் கேட்டு மிரட்டல்; மதுரையில் கைது – நடந்தது என்ன?!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்சி ரோட்டில் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மோகனா என்பவர் சாலையோரம் துணிக்கடை நடத்திவருகிறார். இந்த பகுதியில் சாலையோரம் கடை வைத்திருப்பவர்களிடம் 51-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மாமூல் கேட்டதாக சொல்லப்படுகிறது. திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன் `கடை நடத்தவேண்டும் என்றால் தினமும் 200 ரூபாய் மாமூல் தரவேண்டும். இல்லையென்றால், மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி கடையை காலிசெய்துவிடுவேன்’ என்று … Read more

புத்தாண்டின் முதல் நாளில் டெல்லியில் நிலநடுக்கம்

சென்னை: தலைநகர் டெல்லியில் புத்தாண்டின் முதலான காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.   நிலநடுக்கத்தால் காயம் அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. ” ஜன. 1, 2023 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 3.8 ஆகும். இது … Read more

புத்தாண்டை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று மக்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, திருச்செந்தூர், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கோயில்களில் மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.

ஒசூர்: கத்தி முனையில் 15 பவுன் நகை திருட்டு; தப்பியோடிய மூவருக்கு வலை – தொடர் திருட்டால் அச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ராஜா (48). இவர் ஓசூர் நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முந்தினம் காலை, வழக்கம் போல ஓட்டலுக்கு சென்று விட்ட நேரத்தில், அவரின் மனைவி பாஸ்கல் ஜோஷ்வினா, மாமியார் லூர்து மேரி மற்றும் மாமனார் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க, 3 இளைஞர்கள் வீட்டுக்குள் புகுந்து, பாஸ்கல் ஜோஷ்வினா மற்றும் லூர்து மேரி ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி, அவர்கள் … Read more

எதிர்கட்சிகளை ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் – ராகுல் காந்தி

புதுடெல்லி: எதிர்கட்சிகளை ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு நாட்டுக்கான தொலைநோக்கி திட்டத்துடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பாட்டால் பாஜக வெற்றி பெறுவது கடினம். இதுதான் இன்றைய நிலவரம் என்பதை கலத்திலிருந்தே உணர்ந்துள்ளேன். எனவே எதிர்கட்சிகள் ஓரணியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னை: சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இசை, நடன நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

ஒரே வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் பலி! புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்தில் பலியாகினர். புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், நட்சத்திர விடுதிகளில் நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடினர். இளைஞர்கள் பலர் இரு சக்கர வாகனத்தில் சுற்றி புத்தாண்டை வரவேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தில் நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகினர். ஒரே வாகனத்தில் சென்ற இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாட ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று … Read more

புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

காரைக்குடி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு விஸ்வரூப சிறப்பு தரிசனம் அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது; சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமியின் பிரசங்கத்துடன் நடைபெற்றது.