மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 403 புள்ளிகள் அதிகரித்து 62.533 புள்ளிகளானது. வங்கிகள், ஐ.டி. நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்ததால் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.6 சதவீதம் உயர்ந்துள்ளன. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் அதிகரித்து 18,608 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது.

அர்செனல் கால்பந்து கிளப்பை வாங்குகிறாரா முகேஷ் அம்பானி..?

புதுடெல்லி, ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி. இவர் இங்கிலாந்தின் ,உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப் அணியான லிவர்புல் அணியை வாங்குவதற்கான ஏலத்தில் இறங்கியுள்ளதாக அண்மையில் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து கிள்ப்புகளில் ஒன்றான அர்செனல் (Arsenal) கிளப்பை தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல கால்பந்து கிளப்பான லிவர்பூல் எஃப்சியை வாங்க … Read more

கோல்டு, கிரே கலர்களில் வெரிஃபைட் டிக்; எலான் மஸ்க்கின் திட்டம்தான் என்ன?

எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியது முதல் அதிரடி அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் ப்ளு டிக் சந்தா முறை பரபரப்பைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து தற்போது ‘கோல்டு’, ‘கிரே’ கலர்களில் வெரிஃபை டிக்கை அறிமுகப்படுத்தியுள்ளது ட்விட்டர். இதில் ‘கோல்டு டிக்’ தனியார் நிறுவனங்களுக்கும், ‘கிரே டிக்’ அரசின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கும், ‘ப்ளு டிக்’ ட்விட்டர் பயனாளர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோல்டு, ப்ளு, கிரே கலர்களில் வெரிஃபைட் டிக்குகள் இந்தப் புதிய … Read more

இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்…

டெல்லி: அருணாசல பிரதேச எல்லையில் நடைபெற்ற இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகேயுள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்று உள்ளனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் சீன வீரர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே … Read more

துணைவேந்தர் பதவிக்கு உரியவர்களை தெரிவு செய்யும் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி தேவையில்லை: கேரள ஐகோர்ட் கருத்து

திருவனந்தபுரம்: துணைவேந்தர் பதவிக்கு உரியவர்களை தேர்வு செய்யும் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி அவசியமில்லை என கேரள ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை நியமிப்பது தொடர்பான வழக்கில், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளை சுட்டிக்காட்டி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதா? – மத்திய மந்திரி தோமர் பதில்

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவையில் இன்றைக்கான கேள்வி நேரத்தின் போது பருவநிலை காரணமாக இந்தியாவின் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பதில் அளித்து கூறுகையில், 2017-2018-ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 285 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால் கடந்த 2020-21-ம் நிதியாண்டில் 310.74 மில்லியன் டன்னாகவும், 2021-2022-ம் நிதியாண்டில் 315.72 மில்லியன் டன்னாகவும் உயர்ந்துள்ளதாக எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். மேலும் இந்தியாவின் … Read more

தந்தையைக் கொன்று 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய மகன்; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில், 21 வயது இளைஞன் ஒருவன் தன்னுடைய தந்தையைக் கொலைசெய்து, அவர் உடலை 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் மாந்தையார் நெடுஞ்சாலை அருகே கடந்த டிசம்பர் 6-ம் தேதியன்றே நடந்திருந்தாலும்கூட நேற்று மாலைதான் வெளியில் தெரியவந்திருக்கிறது. கொலை முன்னதாக கொலைசெய்யப்பட்ட பருஷ்ராம் (54) வீடு திரும்பாததன் காரணமாக, அவரின் மனைவி கடந்த 8-ம் தேதி போலீஸில் புகாரளித்திருக்கிறார். பின்னர் இதில் குடும்பத்தாரிடம் … Read more

அரசு விரைவு பேருந்துகளுக்கான பொங்கல் முன்பதிவு தொடங்கியது…

சென்னை: ஜனவரி 14ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை உள்பட நகர்ப்புறங்களில் தொழில் நிமித்தமாக வசிப்பவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக தமிழகஅரசும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த வரும் பொங்கல் பண்டிகை 2023ம் ஆண்டு ஜனவரி 14ந்தேதி வருகிறது. இதையடுத்து அரசு விரைவு பேருந்துகளில் இன்றுமுதல் முன்பதிவு தொடங்கி உள்ளது … Read more

நீலகிரி மாவட்டத்தில் கோவில் பண்டிகையை முன்னிட்டு (4.1.2023) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் அடுத்த மாதம் கோவில் பண்டிகையை முன்னிட்டு (4.1.2023) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெத்தையம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அரவிந்தரின் தபால் தலை மற்றும் நாணயம் – பிரதமர் மோடி வெளியிட்டார்

புதுடெல்லி, ஆரோவில் நிறுவனர் அரவிந்தரின் 150ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு, அரவிந்தரின் உருவப்படம் பொறித்த நாணயம் மற்றும் தபால் தலையினை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக வெளியிட்டார். அதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:- ஆரோவில் நிறுவனர் அரவிந்தரின் 150-வது பிறந்த தினம் முக்கியமான நாள் ஆகும், முழு தேசத்திற்கும் ஒரு வரலாற்று நிகழ்வு. அவரது சித்தாந்தத்தை நமது புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல, இந்த ஆண்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட … Read more