இறந்த காதலிக்கு தாலி கட்டி மணமுடித்த அசாம் இளைஞர்| Dinamalar

குவஹாத்தி, :உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த காதலிக்கு தாலி கட்டி, ‘இனி நான் வேறு திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என, அவரது உடல் மீது சத்தியம் செய்த இளைஞரை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வட கிழக்கு மாநிலமான அசாமின் மோரிகான் நகரில் வசிப்பவர் பிதுபன் தாமுலி. அருகிலுள்ள கோசுவா என்ற கிராமத்தில் வசித்தவர் பிரார்த்தனா போரா. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இருவர் வீட்டிலுமே சம்மதம் தெரிவித்து திருமணத்துக்கான பேச்சும் … Read more

FIFA உலகக்கோப்பை கால்பந்து: பரபரப்பான ஆட்டத்தை டிராவில் முடித்த வேல்ஸ் வீரர்

FIFA உலகக்கோப்பையில் தொடரில் அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் பாதியில் ஆதிக்கம்  FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டி அல் ரய்யன் மைதானத்தில் நடந்தது. இதில் அமெரிக்கா – வேல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியின் 36வது நிமிடத்தில், அமெரிக்காவின் டிமோத்தி வியா கோல் அடித்தார். இதற்கு வேல்ஸ் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால், முதல் பாதியில் அமெரிக்க அணி 1-0 என முன்னிலை … Read more

சத்தீஸ்கரில் நக்சலைட் வன்முறை வெறியாட்டம்| Dinamalar

கான்கெர் சத்தீஸ்கரில், நக்சலைட்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், பேருந்து உட்பட மூன்று வாகனங்கள், சாலை போடும் இரண்டு இயந்திரங்கள், நான்கு ‘மொபைல் போன்’ கோபுரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு நக்சல்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இரு நக்சல்கள் கடந்த மாதம் 31ல் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, கான்கெர் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் முழு அடைப்புக்கு நக்சல்கள் அழைப்பு … Read more

பிரித்தானியாவில் தீப்பற்றி எரிந்த வீட்டில் தப்பிய பெண்..சிசிடிவி காட்சியால் அம்பலமான உண்மை

பிரித்தானியாவில் வேண்டுமென்றே தனது வீட்டிற்கு தீ வைத்த பெண்ணொருவர், சிசிடிவி காட்சியால் சிக்கியதால் சிறை தண்டனையை எதிர்கொள்கிறார். சிசிடிவி காட்சி வேல்ஸின் நியூபோர்ட்டைச் சேர்ந்த ஷபீனா கனோம் (27) என்ற பெண் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவர் வசித்திருந்த வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டனர். மேலும், ஷபீனா அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட சில நிமிடங்களில், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு … Read more

சிறையிலிருந்து தப்பிய 2 கைதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

வாரணாசி, நவ. 22- பீஹார் சிறையிலிருந்து தப்பிய இரண்டு கைதிகள், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில்நடந்த ‘என்கவுன்டரில்’ சுட்டுக் கொல்லப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யின் கைத்துப்பாக்கி காணாமல் போனது. இது குறித்து போலீசார் விசாரித்தனர். அந்த துப்பாக்கியை திருடியவர், வாரணாசியில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை நோக்கி ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதற்கு பதிலடியாக போலீசார் … Read more

அ.தி.மு.க., ஒற்றைத் தலைமை வழக்கு 30ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்| Dinamalar

புதுடில்லி, அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான வழக்கில், தங்கள் தரப்பு வாதங்கள் மற்றும் ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி, முன்னாள் முதல்வர்களான பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் இருந்தனர். கடந்த ஜூன் ௨௩ம் தேதிகட்சியின் பொதுக் குழு கூட்டம் நடந்தது. இதில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை இருக்கும் வகையில் விவாதிக்க மீண்டும் பொதுக் குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஜூலை ௧௧ல் நடந்த கூட்டத்தில், … Read more

புரூஸ் லீ அகால மரணமடைந்தது எப்படி? 49 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம்! மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி காரணம்

தற்காப்பு கலையின் நாயகன் புரூஸ் லீயின் மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் புதிய தகவலை தெரிவித்துள்ளனர். குங்ஃபூ  நாயகன்  குங்ஃபூ தற்காப்பு கலையின் ஜாம்பவானாக விளங்கிய புரூஸ் லீ, 1973ஆம் ஆண்டு தனது 32வது வயதில் அகால மரணமடைந்தது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது புரூஸ் லீயின் மரணத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. சீன கேங்ஸ்டர்களினால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒருபுறமும், பொறாமை கொண்ட அவரது காதலி விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்று மறுபுறமும் என … Read more

வளைகுடா நாடுகளில் இருந்து நிதி திரட்டும் பி.எப்.ஐ., அமைப்பு| Dinamalar

புதுடில்லி ;’மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, ‘பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா’ அமைப்புக்கு வளைகுடா நாடுகளில் இருந்து நிதி திரட்ட தேவையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன’ என, அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பி.எப்.ஐ., எனப்படும், ‘பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா’ என்ற அமைப்புக்கு சொந்தமான இடங்களில் நாடு தழுவிய சோதனையை அமலாக்கத்துறை சமீபத்தில் மேற்கொண்டது. என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை உடன் இணைந்து மாநில போலீசும் இந்த சோதனையை நடத்தின.அப்போது, 100க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ., அமைப்பைச் … Read more

நிபுணர்களுடன் நிதி அமைச்சர் ஆலோசனை| Dinamalar

புதுடில்லி :அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் மற்றும் நிபுணர்களுடனான ஆலோசனையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று துவக்கினார். வரும் 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 பிப்., 1ல் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டுக்கு முன்னதாக பல்வேறு துறை ஆளுமைகள் மற்றும் நிபுணர்களை நேரில் அழைத்து, அவர்களின் துறை ரீதியிலான எதிர்பார்ப்புகள் மற்றும் ஆலோசனைகளை அமைச்சர் தெரிந்து கொள்வது வழக்கம். இந்த வகையில், … Read more

ஜேர்மனியில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை

பிரபல தொலைக்காட்சி நடிகையான மூன்மூன் தத்தா (Munmun Dutta) சுற்றுலா மீது பெரும் ஆர்வம் கொண்டவர் ஆவார். ஐரோப்பிய சுற்றுலா புறப்பட்ட தத்தா மூன்மூன் தத்தா, சென்ற வாரம் ஐரோப்பிய சுற்றுலா புறப்பட்டார். முதலில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருந்த தத்தா, இரண்டு நாட்களுக்கு முன் ஜேர்மனிக்கு புறப்பட்டார். image – instagram விபத்தில் சிக்கிய தத்தா இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துகொண்ட தத்தா, சிறிய விபத்தொன்றில் தான் சிக்கியதாகவும், தனது முழங்காலில் மோசமாக அடிபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே, தனது … Read more