‘கர்மா’ கொள்கைப்படி தீர்ப்பு வழங்கிய தனிநீதிபதியின் உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்…

மதுரை: மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு போலீஸ்காரரை இட மாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, கர்மா கொள்கைப்படி ரத்து செய்வதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. மதுரையில் போலீஸ்காரராக பணியாற்றும் ஸ்ரீமுருகன் என்பவர் தூத்துக்குடிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது  மனுவில், காவல் துறையில் 2003ல் இரண்டாம் நிலை போலீஸ்காரர் பணியில் சேர்ந்தேன். … Read more

காம்பியாவில் இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்துக்கு தடை

பஞ்சுல்: காம்பியாவில் இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்து தரப்பட்ட 66 குழந்தைகள் இறந்ததை அடுத்து அந்த இருமல் மருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மெய்டன் பார்மசூதிகல்ஸ் நிறுவனம் காம்பியாவுக்கு இருமல் மருந்து ஏற்றுமதி செய்திருந்தது. இந்திய மருந்து மீது புகார் கூறப்பட்டதை அடுத்து காம்பியாவில் கடை, வீடுகளில் உள்ள இருமல் மருந்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்| Dinamalar

புதுடில்லி, :மூத்த குடிமக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது. முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான அஸ்வனி குமார், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:நம் நாட்டில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாடுகின்றனர். இருப்பிட வசதியின்றி திறந்தவெளிகளில் வசிக்கின்றனர்; உடுக்க உடைஇல்லை. … Read more

“என் மனைவி எனக்கு எழுதிய காதல் கடிதங்களை விட அதிக கடிதங்களை எழுதியுள்ளார்”… டெல்லி துணை நிலை ஆளுநர் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால்

அக்டோபர் 2 ம் தேதி மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் அஞ்சலி நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த டெல்லி துணை நிலை ஆளுநர் (எல்.ஜி. – LG) வி கே சக்சேனா இது குடியரசு தலைவரை அவமதிக்கும் செயல் என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காட்டமாக கடிதம் எழுதினார். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளதாவது : “LG அளவுக்கு என் மனைவி … Read more

வரும் 10-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: வரும் 10-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்.10-தேதி மாலை 4.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணல் திருட்டு தொடர்பாக புகார் அளித்ததால் ஆத்திரம்… ஆ.டி.ஐ ஆர்வலருக்கு நேர்ந்த கொடூரம்!

குஜராத் மாநிலத்தில், ஆர்.டி.ஐ ஆர்வலரும் அவரின் மகனும் சென்ற ஸ்கூட்டர்மீது, சட்டவிரோத மணல் அகழ்வில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் கார் மோதியதில், ஆர்.டி.ஐ ஆர்வலரின் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்.டி.ஐ ஆர்வலர் ரமேஷ் பாலியா என்றும் அவரின் மகன் நரேந்திரன் என்றும் தெரியவந்திருக்கிறது.  இவர்கள் லக்பத் தாலுகாவில் உள்ள மேக்பர் கிராமத்தில் வசித்துவருகின்றனர். அதோடு, ரமேஷ் பாலியா உள்ளூர் பட்டியலின தலைவராகவும் அறியப்படுகிறார். மணல் குவாரி இதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் … Read more

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒரு பலி! திருச்சியில் கல்லூரி மாணவர் தற்கொலை

திருச்சி: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று  மேலும் ஒரு பலி ஏற்பட்டுள்ளது. திருச்சியில்  கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மணப்பாறையில், ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த சந்தோஷ் என்ற வாலிபர் ஒருவர், ரயின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம், ஆன்லைன் ரம்பி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் … Read more

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்த சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர்

திருப்பூர்: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்து சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி  நலம் விசாரித்தார். திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

16,000 அடி உயரத்தில் களமிறங்கிய சிறப்புப் படை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உத்தரகண்டில், இமயமலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 27 வீரர்களை மீட்பதற்காக 16 ஆயிரம் அடி உயரத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள சிறப்புக் குழுவினர் சென்றுள்ளனர். உத்தரகண்டிலிருக்கும் இமயமலையில், ‘திரவுபதி’ மலைச்சிகரம் உள்ளது. இங்குள்ள, நேரு மலையேற்ற பயிற்சி மையம், மலையேற்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி மையத்தின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் திரவுபதி மலைச்சிகரத்தில் ஏறினர்.இதில் ஒரு பகுதியினர் நேற்று முன்தினம் … Read more