தென்காசி: விபத்தில் சிக்கிய புதுமாப்பிள்ளை! – மணமான ஒரே வாரத்தில் நேர்ந்த சோகம்

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள ஆனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவரின் மகன், கலையரசன். 27 வயது நிரம்பிய அவர் கடையநல்லூர் பகுதியில் உள்ள வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 7-ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது, இவர் விபத்து ஒன்றில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து வங்கிப் பணிக்காக நேற்று (14-ம் தேதி) கலையரசன் தனது பைக்கில் புறப்பட்டுச் சென்றுள்ளார். சுரண்டை-சாம்பவர் வடகரை சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் மூர்த்தி என்பவர் … Read more

ஆபத்தான நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கம்! பிரித்தானியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரித்தானிய அரசின் புதிய சட்டத் திருத்தத்தின்படி அதிக ஆபத்தான மூன்றாம் நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டுள்ளது. அதிக ஆபத்தான மூன்றாம் நாடுகள்  கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. பிரித்தானிய அரசானது நிதி நடவடிக்கை செயற்குழு பரிந்துரையின்கீழ் ஈரான், மியான்மர், சிரியா உள்ளிட்ட நாடுகளுடன் பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில், அதிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் மற்றும் நிகரகுவா நாடுகளை பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளதாக … Read more

கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் உத்தரவை அடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரி ருத்தீஷ் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

உலக மக்கள் தொகை 800 கோடி! சீனாவை முந்துகிறது இந்தியா| Dinamalar

நியூயார்க் :உலக மக்கள் தொகை, 800 கோடியை தாண்டியுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நாடாக அடுத்த ஆண்டில் சீனாவை, இந்தியா முந்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு குறைந்து வருவதால், மக்கள் தொகை வளர்ச்சி வரும் ஆண்டுகளில் குறையும் எனக் கூறப்படுகிறது. உலக மக்கள் தொகை, நேற்று 800 கோடியை தாண்டியுள்ளது. கடந்த ௧1 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகையில், 100 கோடி பேர் இணைந்துஉள்ளனர். கடந்த 1800 களில் உலக மக்கள் தொகை … Read more

IPL 2023 Retention: `விடைகொடு சாமி, விட்டுப்போகின்றேன்!' – விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இதோ!

உலகக்கோப்பை ஜுரம் சரியாவதற்குள் ஐ.பி.எல் ஜுரம் வந்துவிட்டது. ஐ.பி.எல் 2022-க்கு முழுமையான பெரியதொரு ஏலம் நிகழ்ந்த நிலையில், ஐ.பி.எல் 2023-க்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து ஐ.பி.எல் அணிகள் அனைத்தும் வீரர்களை விடுவிப்பது, புதிய வீரர்களை மற்ற அணிகளிலிருந்து (Trade Off) வாங்குவது எனப் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்தன. இதையடுத்து இன்று, அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை ரீட்டெய்ன் செய்கின்றனர், யாரையெல்லாம் விடுவிக்கின்றனர் என்ற தகவலை … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிச. 29-ல் ஆளுநர் மாளிகை முற்றுகை: முத்தரசன் அறிவிப்பு

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29-ல் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும்  என முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் தனக்குரிய பொறுப்பில் இருந்து செயல்படாமல் பாஜக தலைவராக செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.

நிலைகுலைய செய்த செப்டிக் டேங்க் விஷவாயு; அடுத்தடுத்து மயங்கி பலியான மூவர்! – கரூரை கலங்கடித்த சோகம்

கரூர் செல்லாண்டிபாளையம் அருகே உள்ள சுக்காலியூர் காந்திநகரில் குணசேகரன் என்பவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டில் பக்கவாட்டில் கழிவு நீர் தொட்டி அமைப்பதற்காக பணிகள் கடந்த மாதம் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில், கழிவு நீர் தொட்டிக்கு கான்கிரீட் தளம் அமைப்பதற்காக போடப்பட்ட கான்கிரீட் பலகைகளை அகற்றுவதற்கு கரூர் தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் மகன் மோகன்ராஜ் (23) உள்ளே இறங்கியிருக்கிறார். அப்போது, உள்ளிருந்த விஷவாயு தாக்க, … Read more

தோனியின் மாஸ்டர் பிளான்…”ஜடேஜாவுக்கு OK பிராவோவுக்கு NO” சிஎஸ்கே அணியின் வீரர்கள் பட்டியல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய 2023ம் ஆண்டுக்கான தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ராயுடு ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர், பிராவோ, ராபின் உத்தப்பா மற்றும் ஜெகதீசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை அணியில் ஜடேஜா கடந்த முறை கேப்டன் பதவியில் ஏற்பட்ட குளறுபடியால் ரவீந்திர ஜடேஜா கோபமடைந்தாகவும், இதனால் வரப்போகும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஜடேஜா விலகுவார் என்றும் தொடர்ந்து … Read more

ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு 5 புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.27.26 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை..!!

சென்னை: ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு 5 புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.27.26 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வாடகை / பழுதடைந்த கட்டிடங்களில் இயங்கி வரும் 5 கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது. ஆதி திராவிடர் நல பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 10 விடுதிகள் கட்ட ரூ.44.58 கோடி வழங்கி நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.