அக்டோபர் 26: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 158-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 158-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மடாதிபதி தற்கொலையில் திருப்பம்; பெண்ணாசை காட்டி மிரட்டியதாக திடுக்| Dinamalar

ராம் நகர் : கர்நாடகாவின் பன்டே மடத்தின் பசவலிங்க சுவாமிகள் தற்கொலையில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேறொரு மடாதிபதியின் மிரட்டலுக்கு ஆளாகி, அவர் தற்கொலை செய்து கொண்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பக்க கடிதம் இங்கு, ராம்நகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சுகல் பன்டே மடத்தின் பசவலிங்க சுவாமிகள், 45, நேற்று முன்தினம் காலை, மடத்திலேயே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மடாதிபதி எழுதி வைத்த மூன்று … Read more

டி20 உலகக் கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

பெர்த்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஸ்டேஜ் குரூப் 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு ஓட்டங்களை குவித்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்கள் எடுத்தது அவுஸ்திரேலிய இன்னிங்ஸின் சிறப்பம்சமாக இருந்தது. முதலில் … Read more

நடிகை நயன்தாரா அம்மா ஆனது எப்படி? விசாரணை அறிக்கை இன்று வெளியீடு

சென்னை: நடிகை நயன்தாரா அம்மாவான விவகாரத்தில், மருத்துவம், ஊரக சேவை நல பணிகள் கழகத்தின் விசாரணை அறிக்கை, இன்று வெளியிடப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் முடிந்து 4 மாதங் களில், தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அவர்கள் டிவிட் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதையடுத்து நயன்தாரா குறித்து … Read more

அக்-26: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,585,054 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.85 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,585,054 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 633,551,397 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 612,544,654 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,293 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரித்தானிய துணைப் பிரதமராக டொமினிக் ராப்; பல அமைச்சர்களை பதவி நீக்கம் செய்த புதிய பிரதமர் ரிஷி சுனக்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் பல அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து, டொமினிக் ராப்பை (Dominic Raab) துணைப் பிரதமராக நியமித்தார். ரிஷி சுனக் தனது புதிய அமைச்சரவை அறிவிப்புக்கு முன்னதாக, லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சர்கள் குழுவில் உள்ள பலரை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பிரித்தானியாவின் புதிய பிரதம மந்திரி ரிஷி சுனக், மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த ஒரு மணி நேரத்திற்குள் தனது வேலை உடனடியாக தொடங்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்தார். … Read more

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி| Dinamalar

பரேலி, உத்தர பிரதேசத்தில், குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். உ.பி.,யின் பரேலி மாவட்டம், மிலாக் அலிகஞ்ச் கிராமத்தில் வயல் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பெண்களுக்கு, அவர்களின் மகன்கள் உணவு எடுத்து சென்றனர். உணவு கொடுத்து விட்டு திரும்பும் போது, வழியில் இருந்த குளத்தில் குளித்தனர். அப்போது மூவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். ஆசிஷ், 8, சுமித், 7, லாவ் சாகர், 7, ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன. போலீசார் விசாரித்து வருகின்றனர். பரேலி, … Read more

பார்வையற்றோர் பள்ளியில் தீ: 11 பேர் பலி| Dinamalar

கம்பாலா, உகாண்டாவில் பார்வையற்றோருக்கான பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 11 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் முகோனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பார்வையற்றோருக்கான அரசுப் பள்ளி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி, குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசர்விசாரணை நடத்திவருகின்றனர். கம்பாலா, உகாண்டாவில் பார்வையற்றோருக்கான பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 11 … Read more

திருமலையில் சூரிய கிரகணம் ஏழுமலையான் கோவில் மூடல்| Dinamalar

திருப்பதி, திருமலையில் சூரியகிரகணம் காரணமாக ஏழுமலையான் கோவில் நேற்று காலை 8:00 மணிக்கு மூடப்பட்டது.திருமலையில், கிரகண காலங்களில் ஆறு மணிநேரத்திற்கு முன்னர் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம். இதன்படி நேற்று சூரியகிரகணம் நிகழ்ந்ததால், ஏழுமலையான் கோவில் காலை 8:00 மணி முதல், மாலை 7:00 மணி வரை தொடர்ந்து 11 மணி நேரம் மூடப்பட்டது. கோவில் மட்டுமல்லாமல், தரிசன வரிசைகள், வைகுண்டம் காத்திருப்பு அறைகள், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் ஆகியவையும் மூடப்பட்டன. கிரகணம் நிறைவு … Read more