பிரிட்டன் அரியணையில் இந்திய வம்சாவளி… பிரதமராகிறார் ரிஷி சுனக்!

கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற லிஸ் ட்ரஸ், அங்கு நிலவிய பொருளாதார பிரச்னைகள் காரணமாக கடந்த வியாழக்கிழமை (20-10-22) தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் பதவிக்காக நடந்த தேர்தலில் பென்னி மோர்டவுன்ட் பின்வாங்கியதை அடுத்து ரிஷி சுனக் பிரதமராகப் பதவி ஏற்க இருக்கிறார். கடந்த ஏழு மாதங்களில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்க உள்ள மூன்றாவது பிரதமர் ரிஷி சுனக் ஆவார். போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு … Read more

பிரதமர் இல்லம் வந்து சேர்ந்தார் ரிஷி சுனக்.. ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பு… வீடியோ

பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனக் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் ஸ்ட்ரீட் வந்து சேர்ந்தார். அங்கு அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரிட்டனில் பிரதமராக பதவி ஏற்கும் முதல் ஆசியரான ரிஷி சுனக் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக் பிரதமராக தேர்வாகி இருப்பது இந்தியர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது. 50 நாட்களுக்கு முன் லிஸ் ட்ரஸ்-ஸை எதிர்த்து போட்டியிட்டபோது இவருக்கு … Read more

மதுரையில் தலைதீபாவளி கொண்டாடிய பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி

மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் தலைதீபாவளி கொண்டாடிய பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் காதல் திருமணம் செய்த நிலையில் இன்று தலைதீபாவளி கொண்டாடிய பெண்ணை எரிக்க முயற்சி செய்துள்ளனர். காதல் திருமணத்துக்கு சித்தப்பா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் எரிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் புகைப்படம்: 200 டோரி எம்.பிக்கள் ஆதரவில் அபார வெற்றி

200 டோரி எம்.பிக்கள் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு. பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் புகைப்படம் வெளியீடு. பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து 1922 கமிட்டியின் உறுப்பினர்களுடன் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ், பதவியிலிருந்த 44 நாட்களிலேயே ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து நடைபெற்ற பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் பென்னி மோர்டான்ட் 100 டோரி எம்.பிக்களின் ஆதரவை பெறத் தவறியதையடுத்து நாட்டின் … Read more

SA vs ZIM: நெருங்கிய வெற்றி; குறுக்கிட்ட மழை; பரிதாபமாக பாயின்ட்டை இழந்த தென்னாப்பிரிக்கா!

சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்காவும் ஜிம்பாப்வே அணிகளும் மோதியிருந்தன. தென்னாப்பிரிக்கவுக்கும் மழைக்கும் எப்போதுமே ஆகவே ஆகாது போல! ஜிம்பாப்வேக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வெற்றியை நெருங்கிய சமயத்தில் மழை குறுக்கிட ஆட்டம் அத்தோடு முடித்து வைக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. SA vs ZIM ஆரம்பத்திலிருந்தே மழை பெய்து கொண்டிருந்ததால் போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஆகியிருந்தது. மழை காரணமாக போட்டி 9 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டது. ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்திருந்தது. … Read more

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு… ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டர்…

விஜய் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிவரும் படம் வாரிசு. வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. 2023 ம் ஆண்டு பொங்கலன்று ரிலீசாக இருக்கிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது படக்குழு இது விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை இந்த போஸ்டரில் உறுதிப்படுத்தியுள்ளது … Read more

குடியுரிமை தொடர்பில் ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி…

ஜேர்மன் அரசு குடியுரிமை விதிகளை நெகிழ்த்துவது தொடர்பில் விவாதிக்க உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும்போது இரட்டைக் குடியுரிமை வைத்துக்கொள்வது தொடர்பான விவாதம் அது. ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியுரிமைச் சட்ட மாற்றம் தொடர்பிலான செய்திக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் குடியுரிமைகள் குறித்த சட்ட வரைவு தொடர்பில் விவாதம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சட்ட வரைவின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும்போது இரட்டைக் குடியுரிமை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட … Read more

மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யா போருக்கு தயார்: நிலத்தடியில் மருத்துவமனையை கட்டி எழுப்பும் புடின்

நிலத்திற்கு அடியில் மருத்துவமனையை கட்டு எழுப்பும் புடின். மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் போருக்கு தயாராகி வருகிறார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் மருத்துவமனையை கட்டுவதன் மூலம் மேற்கத்திய நாடுகளுடன் போருக்கு தயாராகி வரலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிழக்கு உக்ரைன் பகுதியில் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், உக்ரைனிய படைகளின் எதிர்ப்பு தாக்குதலால் ரஷ்ய படைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய … Read more

பிரிட்டன் புதிய பிரதமராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு… கன்சர்வேட்டிவ் கட்சி நிர்வாகிகள் குழு அறிவிப்பு

பிரிட்டனின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்தெடுக்கப்பட்டிருப்பதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் நிர்வாகிகள் குழு (1922 கமிட்டி) அதிராகரபூர்வமாக அறிவித்துள்ளது. 1922 கமிட்டி உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து மற்றொரு போட்டியாளரான மெர்டவுன்ட்-டும் விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். லிஸ் ட்ரஸ் பதவி விலகியதை அடுத்து பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டி … Read more

இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் ஆகிறார் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ரிஷி சுனாக்

இங்கிலாந்து: கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ரிஷி சுனாக் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் ஆகிறார். நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டாண்ட் போட்டியில் இருந்து விலகியதால் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரானார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுனாக் விரைவில் பிரதமராக பதவியேற்பார். இங்கிலாந்து நாட்டு மன்னர் 3-ம் சார்லஸ் ரிஷி சுனாக்கை பிரதமராக நியமனம் செய்தவுடன் அவர் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டது.